ஸ்வீட் ஹார்ட் விமர்சனம் 2.75/5… பிரேக்கப் கெமிஸ்ட்ரி

ஸ்வீட் ஹார்ட் விமர்சனம் 2.75/5… பிரேக்கப் கெமிஸ்ட்ரி

 

ஸ்வீட் ஹார்ட் விமர்சனம் 2.75/5… பிரேக்கப் கெமிஸ்ட்ரி

 

ஸ்டோரி….

ரியோ ராஜ் மற்றும் கோபிகா காதலிக்கிறார்கள்.. நெருக்கமாகி உறவும் வைத்துக் கொள்கிறார்கள்.. ஆனால் திடீரென்று இவர்களிடையே பிரிதல் ஏற்படுகிறது.. ஒரு கட்டத்தில் ஹீரோவுக்கு ஒரு போன் கால் வருகிறது..

நாயகி கோபிகா கர்ப்பமாக இருக்கிறார்.. ஆனால் கருவை கலைத்து விட சொல்கிறார் நாயகன்.. இதனால் மீண்டும் பிரச்சனை வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஆக்சன் எப்ப வேண்டுமானாலும் செய்யலாம்.. இப்போ ரொமான்ஸ் நேரம் என முயற்சித்து இருக்கிறார் ரியோ ராஜ்.. அதில் கொஞ்சம் பாஸ்மார்க் பெறுகிறார்..

கதையின் நாயகியாக கேரளத்து வரவு கோபிகா ரமேஷ்.. கொடுத்த பாத்திரத்தில் நிறைவு.. இவர்களுடன் அருணாச்சலேஸ்வரன், பெளசி உள்ளிட்டோரும் உண்டு.. கதை ஓட்டத்திற்கு இவர்கள் பெரிது உதவியுள்ளனர்..

 

டெக்னீசியன்ஸ்…

யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையிலும் பாடலிலும் நம்மை ஏமாற்றவில்லை.. ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் : ஸ்வீட் ஹார்ட் காதல் படம் என்பதால் அடிக்கடி நாயகன் நாயகிக்கு க்ளோசப் சாட்டுகள் வைத்து இருக்கிறார்..

படத்தொகுப்பாளர் தமிழரசன் தன் பணியில் தாராளம்.. காதல் அது வார்த்தை அல்ல. அது ஒரு வாழ்க்கை என்பதை உணர்வு மூலம் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகுமார்..

இனி எவராவது காதல் படம் எடுத்தால் இதுவரை நாம் பார்த்து பழகிப்போன காதல் கதையை விடுத்து அதில் ஏதாவது திருப்புமுனையுடன் சொல்ல முயற்சித்தால் மட்டுமே இது போன்ற படங்கள் வெற்றி பெறும்..

Sweet heart movie review