பெண்கள் குழந்தைகளை கவர்ந்த ‘மூக்குத்தி அம்மன் 2’..; வெற்றி பூரிப்பில் சுந்தர் – நயன்தாரா
பெண்கள் குழந்தைகளை கவர்ந்த ‘மூக்குத்தி அம்மன் 2’..; வெற்றி பூரிப்பில் சுந்தர் – நயன்தாரா
குடும்பப்பாங்கான படங்களை பெண்களை கவரும் வகையில் படங்களை இயக்கும் இயக்குனர்கள் வெகு சிலரே.. அதில் முதன்மையானவர் சுந்தர் சி என்று சொன்னால் அது மிகையல்ல.. 30 வருடங்களுக்கு மேலாக கமர்சியல் இயக்குனர் என்ற வெற்றிப்பாதையில் பயணித்து வருபவர் சுந்தர்..
தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி’ என்ற படத்தை இயக்கி தன் மனைவி குஷ்பு பெயரில் (அவ்னி மூவிஸ்) இந்த படத்தை தயாரித்து இருந்தார்..
மேலும் இந்த படத்தின் நாயகி நயன்தாராவும் இந்த படத்தின் கூட்டு தயாரிப்பில் இணைந்து இருந்தார்..
மேலும் வேல்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தது..
www.rightnewsraja.com
சுந்தர் சி இயக்கிய இந்த படத்திற்கு அவரின் ராசியான மியூசிக் டைரக்டர் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.. இதில் நயன்தாராவுடன் ரெஜினா, ஊர்வசி, துனியா விஜய், சினேகா, குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்..

இதில் வில்லியாக களமிறங்கிய ரெஜினா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.. இந்த ஆண்டு 2026 தீபாவளிக்கு சூர்யாவின் சீன் மற்றும் இந்த மூக்குத்தி அம்மன் இரண்டு படங்களே வெளியானது.. சீன் படம் ஆக்சன் என்றால் இந்த படம் அம்மன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.. முக்கியமாக இந்த படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை கவர்ந்துள்ளது மேலும் பெண்களும் இந்த படத்திற்கு அமோக ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Mookuthi Amman 2 movie good response with Family Audience
—

