நடிகர்களில் ‘அதிசய பிறவி’ அவர்தான்..; சந்தானம் கொடுத்த விளக்கம்

 

நடிகர்களில் ‘அதிசய பிறவி’ அவர்தான்..; சந்தானம் கொடுத்த விளக்கம்

 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சூப்பர்ஹிட்டான பல திரைப்படங்களின் பெயர்களை தற்போது பல நடிகர்கள் தங்கள் படங்களுக்கு வைத்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான்..

மாவீரன், வேலைக்காரன், படிக்காதவன், பொல்லாதவன், முரட்டுக்காளை, பில்லா என பல சூப்பர் ஹிட் படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்..

அந்த வரிசையில் ரஜினிகாந்த் நடித்த அதிசய பிறவி என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது தற்போது அதே பெயரில் நடிகர் சந்தானம் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அதிசய பிறவி என்ற தலைப்பிடப்பட்ட இந்த படத்தை இயக்கி வருகிறார் சுதாமன் கிருஷ்ணா..

சந்தானம் 100 படங்களுக்கு மேல் காமெடியனாக நடித்திருந்தாலும் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் அவரது நடிப்பில் உருவாகும் இருபதாவது திரைப்படம் ‘அதிசய பிறவி’.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில்.. நடிகர்களில் யார் அதிசய பிறவி என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு சந்தானம் அளித்த பதிலில்..

சிலம்பரசன்தான் அதிசயப்பிறவி. உடல் தோற்றத்தை அடிக்கடி மாற்றி நடித்து வருகிறார். மாநாடு படத்தில் இறப்பது மீண்டு வருவது என உயிர்த்தெழுவார். அதனால், அதிசயப்பிறவி எஸ்டிஆர்” எனத் தெரிவித்துள்ளார்..

ரஜினி நடித்த அதிசய பிறவி படத்திலும் இரண்டு ரஜினிகள் இருப்பார்கள்… ஒரு ரஜினி இறந்து விடுவார், அவரது உருவத்தில் இன்னொரு ரஜினி புகுந்து அவர் மீண்டும் உயிர்த்தெழுந்துவார் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Who is Athisiya Piravi among Actors Santhanam reaction