OM EVENT – மாணவர்களுக்காக இலவச ஏசி டியூஷன் சென்டர்களை திறக்கும் தனுஷ்

 

OM EVENT – மாணவர்களுக்காக இலவச ஏசி டியூஷன் சென்டர்களை திறக்கும் தனுஷ்

 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ‘ஓம்’.

இந்தப் படம் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது..

OM இசை விழாவில் நடிகர் தனுஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்..

தனுஷின் நற்பணி மன்றம் சார்பில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏசி மற்றும் நவீன வசதிகள் கொண்ட இலவச டியூஷன் சென்டர்களை தொடங்கவுள்ளார்.

முதற்கட்டமாக இந்த ஆண்டு சில மையங்கள் தொடங்கப்படவுள்ளது..

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த மையங்களை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது..

இந்தக் கல்வி மையங்கள் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு குறிப்பாகப் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு மையத்திற்கும் மூன்று ஆசிரியர்களும், ஒரு உதவியாளரும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான ஊதியம், மையத்திற்கான வாடகை மற்றும் மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் தனுஷின் நற்பணி இயக்கமே ஏற்றுக்கொள்ளும்.

இந்த நவம்பர் மாதத்திற்குள் சென்னையில் மூன்று இடங்களிலும், கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் என முதற்கட்டமாக நான்கு ஏசி டியூஷன் சென்டர்கள் உறுதியாகத் தொடங்கப்படும் என ஓம் திரைப்படத்தின் இசை விழாவில் தனுஷ் அறிவித்தார்..

 

Dhanush will launch new Free AC Tuition centres in Tamilnadu