இராமாயணம் விமர்சனம் 4/5
இராமாயணம் விமர்சனம் 4/5
ஸ்டோரி…
இலங்கையில் பிறந்த ராவணன் தேவர்களை அச்சுறுத்தும் வகையில் பெரிய கொடூரனாக வளர்ந்து நிற்கிறார்.. மூன்று உலகமும் தன் காலடியில் தான் என்ற தலை கனத்தோடு சாகாவரத்தோடு வாழ்கிறார்..
இந்த நிலையில் அயோத்தியில் கதைகளம் தொடங்குகிறது.. அரசன் தசரதன் தன் மனைவிகளில் ஒருவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.. இதனால் ராமனுக்கு முடிசூடாமல் பரதனை மன்னனாக முடிசூடுகிறார்..
பரதனின் தாயார் ராமனை 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல உத்தரவிடுகிறார்.. இதனால் ராமனின் மனைவி சீதை மற்றும் ராமனின் சகோதரர் லட்சுமணன் ஆகியோரும் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 14 ஆண்டுகள் வனவாசம் செல்கின்றனர்…
இந்த வனவாச காலகட்டத்தில் பல இடைஞ்சல்கள் இன்னல்களை சந்திக்கிறார் ராமன்.. அவரால் வனவாசத்தை முடிக்க முடிந்ததா.? என்ன நடந்தது.? என்பதெல்லாம் திரைக்கதை..
கேரக்டர்ஸ்…
ராமன் கேரக்டரில் ரன்வீர் கபூர்… சீதை கேரக்டரில் சாய் பல்லவி… ராவணன் கேரக்டரில் யஷ் நடித்துள்ளனர்.. மூவரும் தங்கள் கேரக்டரில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்…
பல வித்தைகள் கற்ற திறமைசாலி… சாந்தமான முகம்.. அமைதியான குணம்… என அனைவரையும் கவர்ந்து விடுகிறார் ராமனாக ரன்வீர் கபூர்.. சீதையாக அழகு சிலையாக.. பார்ப்பவர் மனதை கவரும் பெண்ணாக கவர்ந்து விடுகிறார் சாய்பல்லவி..
ராவணன் கேரக்டரில் கேஜிஎப் நாயகன் யாஷ்.. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் யாஷ் மிரட்டல் காட்சிகளை அதிகம் எதிர்பார்க்கலாம்..
லட்சுமணனாக ரவி துபே, ராவணன் மனைவியாக காஜல் அகர்வால், தங்கையாக ரகுல் ப்ரீத் சிங், கைகேயியாக லாரா தத்தா.. ராவணன் அன்னையாக ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..
டெக்னீசியன்ஸ்…
ராமாயணம் கதையை மிக பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் எடுத்துள்ளனர்..
3டி முறையில் ரசிகர்கள் கண்டு மகிழும் வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி.. ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்..
தமிழுக்கு ஏற்றவாறு ஏ.ஐ தொழில்நுட்ப மூலம் உதட்ட அசைவை சரியாக கொடுத்திருப்பதால் தமிழ் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது இந்த ராமாயணம்..
பங்கஜ் குமார், ரமேஷ் லிமயி ஆகியோரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. பெரும்பாலும் கிரீன் மேட்டில் படமாக்கப்பட்டுள்ளது.. எனவே கிராபிக்ஸ் காட்சிகள் தான் படத்திற்கு கூடுதல் பலம்.. கலர்ஃபுல்லாக காட்டி உள்ளது..
ரகுமானுடன் இணைந்து ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்திருக்கிறார்.. இருவரும் இசையில் மிரட்டி இருக்கின்றனர்.. உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இசை உயிரோட்டம் கொடுத்துள்ளது..
இயக்குனர் நிதேஷ் திவாரி.. இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை உணர்வு பூர்வமாக பக்தி பரவசமாக கொடுத்திருக்கிறார்… முக்கியமாக இந்த படத்தை 3டியில் பார்க்கும் போது நம்மை அறியாமல் அயோத்தி மற்றும் இலங்கைக்கு சென்று வந்த உணர்வை தருகிறது..
ராமாயணம் பார்ட் 2 அடுத்த ஆண்டு 2027 திரைக்கு வருகிறது… இதில் ராமனுக்கு உதவிய அனுமார் மற்றும் ராமன் vs ராவணன் மோதும் போர்க்களத்தை பிரம்மாண்டமாக காணலாம்..
Ramayana 3D movie review

