ENEMY OF THE SMUGGLER விமர்சனம் 4/5..

 

 

ENEMY OF THE SMUGGLER விமர்சனம் 4/5..

எனிமி ஆப் தி ஸ்மக்லர் விமர்சனம்

 

 

ஸ்டோரி…

சரண் மற்றும் பால சரவணன் இருவரும் நண்பர்கள் இதில் பாலசரவணன் போலீஸ் இன்பார்மர்.. வீட்டை மீட்டெடுக்க முடியாமல் ஏகப்பட்ட கடன் இருப்பதால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார் சரண்..

அதன் படி இந்திய கடல் வழியாக வரும்போது போதை பொருட்களை கொள்ளையடிக்க திட்டமிட்டு ஒரு கும்பலில் இணைகிறார்..

அங்கு சேர்ந்து சில தினங்களில் ஹெராயின் உள்ளிட்ட பொருட்களை கடத்தி அதன் மூலம் கோடி கணக்கில் சம்பாதிக்க திட்டமிடுகிறார்..

இதனால் ஒரு பக்கம் காவல்துறை துரத்த மறுபக்கம் கடத்தல் கும்பல் தலைவன் துரத்த என்ன செய்தார் சரன் என்பதெல்லாம் யூகிக்க முடியாத வித்தியாசமான திரைக்கதை..

 

கேரக்டர்ஸ்…

வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்த சரண் இதில் கதை நாயகன்.. கொள்ளையடிக்க திட்டமிடும் காட்சிகள் ஆக்சன் என சிறப்பாக செய்திருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகளிலும் சீரியஸாக வருகிறார்.? ஏனோ.?

நாயகனின் நண்பனாக பால சரவணன்.. படம் முழுக்க பயணிப்பதால் சீரியஸ் உடன் காமெடியும் இணைத்து இருக்கிறார்..

ஜே.டி. சக்கரவர்த்தி வில்லனாக வருகிறார்.. அலட்டிக் கொள்ளாமல் கண்களால் மிரட்டி வில்லத்தனம் செய்து ஸ்மார்டாக வருகிறார்..

நாயகியாக ஷிமேகா.. யார் என்று தெரியாமல் காதலித்து பின்னர் கணவனை திருத்தும் மனைவியாக வருகிறார்..

கடத்தல் கும்பல் தலைவனாக லால்.. நடிப்பில் மிரட்டி இருந்தாலும் காட்சி வசன உச்சரிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.. சில வார்த்தைகள் புரியவில்லை..

சரணின் அம்மாவாக ராதிகா.. ஜாபர் சாதிக் மற்றும் காளி வெங்கட் ஆகிய கதாபாத்திரங்கள் படத்திற்கு பெரிய பலம்..

 

டெக்னீசியன்ஸ்…

சாம் டேனியல் இசையில் பின்னணி இசை மிரட்டல் ரகம்… முக்கியமாக கண்டைனர் காட்சிகளில் ஒரு பதட்டத்தை இசையில் உண்டாக்குகிறார்.. தங்கம் தங்கம் பாடல் கவர்கிறது..

கவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் போதை பொருட்கள்… அது தொடர்பான கண்டெய்னர் காட்சிகள்.. கொள்ளையடிக்க திட்டம் என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தி நம்மை வியக்க வைக்கிறார்…

₹ 5,000 கோடி போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்கக் களமிறங்குகிறார் போலீஸ் சமய முரளி.. இவர் கஷ்டம் அலுவலகத்தில் வேலை பார்த்த ஆபிஸர் என்பதால் அதில் உள்ள நுணுக்கங்களை தன் படத்தில் காட்சிப்படுத்தி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்…

இவரே படத்தை இயக்கி தயாரித்து நடித்திருக்கிறார்.. பொதுவாக போதைப் பொருள் கடத்தல் படங்களில் அரசியல் நுழைந்திருக்கும்.. ஆனால் இதில் அரசியல் படுத்தாமல் கேங்ஸ்டர் கும்பல் வ்ஸ் காவல்துறை… இவர்களுக்கு இடையில் ஆடும் சதுரங்க வேட்டையை சுவாரசியமாக அமைத்து இந்த ஸ்மக்ளர் படத்தை சிறப்பாக்கி இருக்கிறார் இயக்குனர் சமய முரளி…

 

Enemy of the Smuggler Movie Review