மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி விமர்சனம்… 3.25/5

 

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி விமர்சனம்… 3.25/5

 

ஸ்டோரி….

நயன்தாரா ஒரு போலீஸ்.. இவரது கனவில் குதிரைகள் ஓடுவதும்… அதில் வரும் சிலர் இவரை மைலாஞ்சிக்கு செல்ல வேண்டும் என உத்தரவிடுவதும் தினம் தினம் நடக்கிறது.. ஒரு கட்டத்தில் மைலாஞ்சிக்கு என்ற ஊருக்கு செல்கிறார்..

அங்கு 2000 வருடங்கள் பழமையான மண்ணில் புதைந்து போன ஒரு கோயிலை நயன்தாரா கண்டுபிடிக்கிறார்..

அப்போது முதல் 2000 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பழிக்கு பழி பகையை தீர்த்துக் கொள்ள நயன்தாராவை துரத்துகிறார் ரெஜினா.. அவரது காதலன் துனியா விஜய்யும் வருகிறார்..

நயன்தாராவை இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பழிவாங்க அவர்கள் துடிக்க என்ன காரணம்.? இவர்களுக்குள் இருந்த பகை என்ன என்பதெல்லாம் திரைக்கதை..

 

கேரக்டர்ஸ்…

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் அம்மனாக வேடம் ஏற்ற நயன்தாரா இதிலும் அம்மனாக ஜொலிக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு மகா அப்பாவியாக இடைவேளைக்குப் பிறகு மகா சக்தி யாக அதிரடி காட்டி இருக்கிறார் நயன்தாரா..

அம்மன் நயன்தாராவுக்கு பக்கபலமாக அம்மன்களாக குஷ்பு மற்றும் சினேகா இருவரும் சில நிமிடங்கள் வந்து அம்மன் பரவசத்தில் ரசிகர்களை ஆட வைக்கின்றனர்…

கவர்ச்சியான வில்லியாக ரெஜினா.. வில்லியாக மிரட்டி இருந்தாலும் இவரது எகிப்து அரசி உடை பொருந்தவில்லை.. கதை களத்திற்கு பொருந்தவில்லை..

ரெஜினாவின் ஆசை காதலனாக நடிகர் துனியா விஜய்..

ஊர்வசி, யோகி பாபு, வெங்கட் ராகவன், மைனா நந்தினி, லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோரும் உண்டு.. ஆனால் இவர்களிடம் எதிர்பார்த்த காமெடி இல்லை..

 

டெக்னீசியன்ஸ்..

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்.. பெரிய நட்சத்திர பட்டாளத்தை அவர்களுக்கான இடம் கொடுத்து கலர்ஃபுல்லாக படம் பிடித்திருக்கிறார்..

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.. பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார் அம்மன் பாடல்கள் பரவசப்படுத்துகிறது..

படத்தொகுப்பாளர் ஃபேனி ஆலிவர்.. எடிட்டிங் செய்திருக்கலாம்..

அம்மா மகள் குடும்ப செண்டிமெண்ட்… பழிவாங்கல் கதை முன் ஜென்ம பகை… கனவில் பறக்கும் குதிரைகள்… மண்ணில் புதைக்கப்பட்ட அம்மன் கோயில்.. படித்திருக்க மீண்டும் மீண்டும் பிறந்து வரும் அபூர்வ சக்தி.. இப்படியாக பேண்டஸி கமர்சியல் படங்களுக்கு உரிய அனைத்தையும் கலந்து தீபாவளி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி…

 

Mookuthi Amman 2 Mahasakthi movie review

 

—-