பெருசு விமர்சனம்.. அடங்காத ஆண்குறிக்கு அடக்கம்..?
பெருசு விமர்சனம்.. அடங்காத ஆண்குறிக்கு அடக்கம்..?
எப்படியா இந்த படத்துக்கு எல்லாம் விமர்சனம் எழுதுறது என்ற யோசிக்கையில்..
யோவ் என்னையா விமர்சனத்துல இப்படி ஒரு டைட்டில் வச்சிருக்கே அப்படின்னு நீங்க யோசிக்கலாம்.. சென்சார் சர்டிபிகேட் வாங்கிட்டாங்க.. ஆண்குறி மேட்டர் தான் படமே.. அப்படி என்பதால் இந்த விமர்சனத்தை அப்படியே தொடங்குகிறோம்..
ஸ்டோரி….
நிஜ வாழ்க்கையில் அண்ணன் தம்பியான சுனில் & வைபவ்.. இந்த படத்திலும் அண்ணன் தம்பி.. இவர்களது தந்தை வயாகரா மாத்திரை ஓவர் டோஸ் எடுத்துக் கொண்டதால் திடீரென இறந்து விடுகிறார்.. அவர் இறந்தாலும் அவரது ஆண்குறி மட்டும் அடங்காமல் விரைப்பாக நிற்கிறது..
இதனால் இந்த குடும்பமே அதை வெளியில் சொல்ல முடியாமல் பிணத்தையும் எடுக்க முடியாமல் தடுமாறும் படமே இந்த முழுபடம்.. இறுதியில் என்ன ஆனது?ஆண்குறி அடங்கியதா? எப்படி அடங்கியது? எப்படி அடக்கம் செய்தனர்? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
பொறுப்பான ஹெட் மாஸ்டர் சுனில்.. இது வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.. குடிகார மகனாக வைபவ்.. அடிக்கடி உளறி கொட்டுவது டபுள் மீனிங் ஹைலைட்..
பால சரவணன் வழக்கம்போல ஒன்லைன் காமெடியில் பாராட்டுகளை பெறுகிறார்.
சாந்தினி நிஹாரிகா இருவரும் அழகிலும் நடிப்பிலும் கவனம் பெறுகின்றனர்..
பெருசுவின் தனம் கேரக்டர் ஒப்புக்கொண்டாலும் தீபாவின் கேரக்டர் கொஞ்சம் புரியாத புதிராகவே இருப்பதை புரியும் படியாக விளக்கி இருக்கலாம் இயக்குனர்.
கிளைமாக்ஸ் காட்சியில் தனம், சுபத்ரா ஆகிய இருவரும் சபாஷ் சரியான போட்டி என்ற அளவில் நடித்திருக்கின்றனர்..
பக்கத்து வீட்டு ரமா நடிப்பில் செயற்கை தனமே இருக்கிறது.. சாமிநாதன், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், முனீஸ் காந்த், உள்ளிட்ட சில காட்சிகள் வந்து நாங்கள் காமெடிக்கு கேரண்டி என உத்திரவாதம் அளித்துள்ளனர்..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் சத்யா திலகம்.. படத்தில் 90% ஒரே வீட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.. அதை பல கோணங்களில் படம் பிடித்து சிறப்பு.. படத்தொகுப்பாளர் சூரிய குமரகுரு. கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்..
அருண்ராஜின் பின்னணி இசை காமெடி காட்சிகளில் களைக்கட்டி இருக்கிறது.. ஆனால் பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் இசையமைப்பாளர்..
இப்படி ஒரு கதையை தமிழ் சினிமா பார்த்திருக்குமா என்று சொன்னால்? அது சந்தேகமே.. அடங்காத ஆண்குறியை வைத்து அதை அடக்கம் செய்ய பாடுபடும் ஒரு குடும்பத்தின் கதைதான்.. இதற்கு சென்சாரில் எப்படி சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்? ஆனால் அருவருப்பு இல்லாமல் திரைக்கதை அமைத்திருந்தாலும் படம் முழுக்க மேட்டர் தான் கதை என்பதால் சிலர் தியேட்டரில் நெளியக்கூடும்.. ஆனால் நண்பர்களோடு செல்லும் இளைஞர்கள் மற்றும் தோழிகள் சிரித்து நிச்சயம் கொண்டாடுவார்கள்..
படம் தொடங்கிய முதல் காட்சியிலேயே இந்த அடங்காத ஆண்— வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.. அதற்கு முன்பு கொஞ்சம் காட்சிகளை வைத்து அந்த குறி மேட்டரை சிறுசுப்படுத்தி இருக்கலாம். அதற்கு மாறாக பெருசு மேட்டரை பெருசாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர் இளங்கோ ராம்..
Perusu movie review

