ராபர் விமர்சனம் 3.75/5… ஆடம்பர ஆபத்து

ராபர் விமர்சனம் 3.75/5… ஆடம்பர ஆபத்து

 

ராபர் விமர்சனம் 3.75/5… ஆடம்பர ஆபத்து

ஸ்டோரி….

வேலை தேடி சென்னைக்கு வருகிறார் நாயகன் ‘மெட்ரோ’ சத்யா.. ஐடி நிறுவனத்தில் வேலை ஆனாலும் பெண்கள் மீதான மோகம்.. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பைக்கில் சென்று நகை பறிப்பில் வழிப்பறியில் ஈடுபடுகிறார்..

இப்படியான ஆடம்பர வாழ்க்கையில் நாயகன் ஈடுபடும்போது ஒரு கட்டத்தில் நகையை பறிகொடுத்தவர் நாயகனுக்கு எதிராக எடுக்கும் முடிவே மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சாதாரண சத்யா பின்னர் அசாதாரண சக்தியாக மாறும் காட்சிகளும் அதன் பிறகு அவர் படும் அவஸ்தைகளும் சிறப்பு.. முகத்தை மூடியே நடித்திருப்பதால் முகபாவனைகளை பெரிதாக காண முடியவில்லை..

நாயகிக்கு வேலை இல்லை.. ஊறுகாய் அளவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்..

நாயகனின் அம்மாவாக தீபா.. எந்த தாயும் தன் மகனை தவறான வழியில் அனுமதிக்க மாட்டார் என்பதை தீபா கேரக்டர் உணர்த்தும்.. மகளைப் பறிகொடுத்த தந்தையாக ஜெயப்பிரகாஷ்.. இவர் போடும் ஆட்டமும் வசனமும் படத்தின் ஹைலைட்.

டேனி & சென்ராயன் உள்ளிட்டோர் கேரக்டர் படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது..

டெக்னீசியன்ஸ்…

கேரக்டர்களை விட டெக்னீசியன்ஸ் இந்தப் படத்தில் அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கின்றனர்.. முக்கியமாக நகை கொள்ளை அடிக்கப்படும் காட்சிகள் அதன் பிறகு சேசிங் காட்சிகள்.. ஜெயப்பிரகாஷ் மகள் தூக்கி எறியப்படும் காட்சி உள்ளிட்டவை ஒளிப்பதிவாளரின் (என்.எஸ்.உதயகுமார்) கைவண்ணம்..

ஜோகன் சிவனேஷ் இசையமைத்திருக்கிறார் படத்தின் விறுவிறுப்புக்கு குறையாமல் ஈடு கொடுத்து இசையில் மிரட்டி இருக்கிறார்..

அந்தோணி தாசன் பாடி ஆடிய பாடல் குத்து பாடலாக இருந்தாலும் திணிக்கப்பட்ட ஒன்று.. எடிட்டர் ஸ்ரீகாந்த் பணி சிறப்பு.. விறுவிறுப்பு குறையாமல் ஷார்ப்பாக கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் பத்திரிகையாளர் கவிதா தயாரிப்பாளராகி இருக்கிறார்.. முதல் படத்திலேயே பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி கருத்து கவிதாவாக மாறி இருக்கிறார்..

ஜெயபிரகாஷ், தீபா சங்கர் உள்ளிட்ட ஒரு சிலரே மக்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும் மற்றவர்கள் நடிப்பில் முத்திரை பதித்திருப்பதன் மூலம் கவனம் பெறுகின்றனர்..

இது மெட்ரோ பட கதை போல இருக்கிறதே.. காரணம் இந்த படத்திற்கும் அதே இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் எஸ்.எம். பாண்டி இயக்கி இருக்கிகிறார்.. முதல் படம் என்று குறை சொல்ல முடியாத அளவுக்கு பாராட்டுக்களை பெறுகிறார்.. அடுத்தவர் நகையை கொள்ளையடித்து வாழும் ஆடம்பர வாழ்க்கை எப்போதுமே ஆபத்து தான் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார் டைரக்டர் பாண்டி..

கிளைமாக்ஸ் காட்சியில்.. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் இப்படி தான்..’  என போலீஸ் சொல்வது போல காட்சி இருக்கிறது.. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் போலீஸ்சும் லஞ்சம் வாங்கலையா?  நகை திருடனின் பங்கும் காவல்துறைக்கே’ என்ற கேள்வியும் எழுகிறது..

இந்தக் கதையை லைவ்வாக சொல்லாமல் பிளாஷ்பேக் காட்சிகளாக மாற்றி இருக்கிறார் இயக்குனர்.. சிறைக்கைதி சென்ராயன் அங்கு உள்ள சக கைதிகளுடன் சொல்லும் கதையாக மாற்றி எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்திருப்பது டைரக்டர் பாண்டி டச்..

Robber movie review