அருள்வான் விமர்சனம் 4.5/5… காடர் இன குலமகளின் கல்வி புரட்சி
அருள்வான் விமர்சனம் 4.5/5… காடர் இன குலமகளின் கல்வி புரட்சி
ஸ்டோரி…
தேனி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் வசிக்கின்றனர் காடர் இன தம்பதி ஆரவ் – ரம்யா.. இவர்களது ஒரே மகள் குறிஞ்சி (கிருத்திகா).. இவர்கள் அந்த மலை விட்டு வெளியே வராமல் படிக்கவும் இல்லாமல் அங்கேயே தங்கி வாழ்கின்றனர்.. ஆனால் கிருத்திகாவுக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை.. இந்த சூழ்நிலையில் கிருத்திகா பருவ வயதை அடையவே உடனே திருமணம் செய்து வைக்க முயல்கின்றனர்..
ஆனால் தான் படிக்க வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.. தன் இன மக்களின் வாழ்க்கை தர உயர வேண்டும்.. எனவே மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட வேண்டும் என எண்ணுகிறார்.. என யாருக்கும் தெரியாமல் அந்த மலைப்பகுதியை விட்டு வெளியே சென்று விடுகிறார்..
அதன் பிறகு என்ன நடந்தது.? அவரால் தன் மலைப்பகுதிக்கு திரும்ப முடிந்ததா அல்லது கல்வியின் அவசியத்தை உணர்ந்து கலெக்டரை சந்தித்தாரா.? என்பதெல்லாம் கிருத்திகாவின் போராட்ட கதை..

கேரக்டர்ஸ்…
Arulnithi – Muthuvel
Aarav – Kanthan
Ramya Pandian – Amaravalli
Baby kritika – Kurunji
John Vijay – Pandian
Kali Venkat – Dhanraj
VTV Ganesh – Chandran
கதை நாயகி கிருத்திகா தான்.. குறிஞ்சி பூ என்பது 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் அதிசயப்பூ.. அது போல இந்த குறிஞ்சி கேரக்டரும் அற்புதம் செய்யும் என்பதை தன் கேரக்டரில் உணர்த்திருக்கிறார்.. அவரது நடிப்புக்கு நிச்சயம் விருதுகள் கிடைக்கும்..
இதுவரை ஏற்காத கலெக்டர் கேரக்டரில் கலக்கியிருக்கிறார் அருள்நிதி.. இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் படத்தின் ஆணிவேராக தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.. ஒரு கலெக்டரின் பொறுப்பினால் இந்த சமூகத்தை மாற்ற முடியும் என்பதை ஆணித்தரமாக தன் கேரக்டர் மூலம் நிரூபித்திருக்கிறார்..
ஒருவேளை முடியாவிட்டாலும் தன்னால் முடியும் என்பதை கிளைமாக்ஸ் காட்சியில் அருள்நிதி எடுக்கும் முடிவால் சாத்தியமாக்கி இருக்கிறார்..
ஆரவ் மற்றும் ரம்யா இருவரும் காடர் இன மக்களாகவே வாழ்ந்திருக்கின்றனர்.. வன அதிகாரியாக வரும் ஜான்விஜய் வழக்கம் போல எரிச்சல்.. ஓவர் ஆக்டிங் எப்போது குறைத்துக் கொள்வாரோ.?
காளி வெங்கட் மற்றும் விடிவி கணேஷ் இருவரும் படத்திற்கு சரியான பங்களிப்பை கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்..
Director : Ganesh Vinayakan
Cinematographer : M.Sukumar
Music director : G.V. Prakash Kumar
Editor : Lawrence Kishore
Art Director: Lalgudi Ilaiyaraja
PRO: Nikil Murukan

தேன் என்ற அருமையான படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த கணேஷ் விநாயகன் இந்த அருள்வான் படத்தை இயக்கியிருக்கிறார்.. சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லி இருக்கிறார்.. கல்வி ஒருவரது வாழ்க்கை மட்டுமல்ல அவரின் பரம்பரையை உயர்த்தும்.. இன மக்களுக்கு இன்பத்தை கொடுக்கும் எனக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி இருக்கிறார்..
ஜிவி பிரகாஷ் பின்னணி இசை இயற்கைக்கு இணையாக இருக்கிறது.. பாடல்கள் படத்துடன் ஒன்றீ பயணிக்கிறது.. கிருத்திகா பூப்படைந்த பின் வரும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது… வந்தாயே விடிவெள்ளி வெளிச்சம் போலே.. பாடலும் வரிகளும் அருமை..
சுகுமார் என்றாலே ஒளிப்பதிவு சுகம் தான்.. கண்களுக்கு இயற்கை அருவி குளியலை இதமாக கொடுத்திருக்கிறார்..
சுதந்திர இந்தியாவில் நமக்கு கிடைத்த கல்வி இன்னும் பலருக்கு எட்டக்கனியாகவே இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்திருக்கிறார் இயக்குனர் கணேஷ்..
ஒரு காட்சியில் கலெக்டர் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவரும் மலையை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது.. பசிக்காக மரத்தில் உள்ள பழங்களை பறிக்கும் போது கிருத்திகா தடுத்து விட்டு.. *எட்டும் தூரத்தில் இருப்பது யானைகளுக்கு உயரத்தில் இருக்கும் பழங்கள் பறவைகளுக்கு.. மறைந்து கிடக்கும் பழங்கள் மனிதர்களுக்கு என்று சொல்லும் போது மெய் சிலிர்க்கிறது…
காடுகளில் உள்ள மிருகங்களை விட நாட்டில் வாழும் மனிதர்கள் கொடூரமானவர்கள் என்ற ஒரு வரி வசனம் மனிதர்களின் சுயரூபத்தை காட்டுகிறது..
இப்படியாக படம் முழுக்க வசனங்கள் மூலம் நம் மனதையும் கல்வி போராட்டம் மூலம் நம் கண்களையும் கலங்க செய்து இருக்கிறார்..
Arulvaan movie review

