COLD CALL கோல்ட் கால் விமர்சனம்..

COLD CALL கோல்ட் கால் விமர்சனம்..

 

COLD CALL கோல்ட் கால் விமர்சனம்..

 

 

ஸ்டோரி…

கோல்ட் கால் என்பது நமக்கு தெரியாத ஒரு நபரிடம் இருந்து மார்க்கெட்டிங் சம்பந்தமாக போன் அழைப்பு வந்தால் அது கோல்ட் கால்..

ரேப்பிட் என்ற நிறுவனத்தில் நான்கு மார்க்கெட்டிங் நபர்கள் 4 பேர் வேலைக்கு சேர்கிறார்கள்.. முன்பின் அறிமுகம் இல்லை என்றாலும் இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சேர்வதால் இவர்கள் நண்பர்களாக பயணிக்கின்றனர்.

இவர்களுக்கு அடுத்தடுத்து வரும் பிரச்சனைகளை இவர்கள் எப்படி சமாளித்து அந்த பணியில் சிறப்பாக பணியாற்றினார்கள் என்பதுதான் திரைக்கதை..

ஆனால் என்னதான் கம்பெனிக்காக உழைத்தாலும் நண்பர்களின் நிலை என்ன.? அந்த நிறுவனத்தின் நிலை என்ன? தொழிலாளர்களின் நிலை என்ன என்பதை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்..

கேரக்டர்ஸ்…

சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி.

நான்கு ஹீரோஸ் நண்பர்களாக படத்திற்கு பெரிய பலம்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.. இருவருக்கு காதலி.. இருவருக்கு காதல் இல்லை.. ஆனாலும் இவர்களுக்குள் இடையான நட்பு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது..

ஒரு பக்கம் பணிச்சுமை.. ஒரு பக்கம் நட்பு.. என படத்தின் கதை ஓட்டத்திற்கு தங்கள் கேரக்டர் மூலம் சிறப்பு சேர்த்திருக்கின்றனர்..

அதுபோல அந்த கம்பெனியில் உள்ள ஹெச் ஆர்.. மேனேஜர்.. ரிஷப்னிஸ்ட்.. முதலாளி பாஸ் என அனைவரும் அந்ததந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

எழுத்து & இயக்கம்: தம்பிதுரை

ஒளிப்பதிவு : சரவணன்

இசை: பிரணவ் கிரிதரன்

படத்தொகுப்பு: சுரேஷ் ஆறுமுகம்

சண்டைப் பயிற்சி: ஜாகுவார் சன்னப்பா

பாடல்கள்: பா. அரவிந்தன், ஆர்மியஸ்

வசனம்: பாலாஜி ராஜசேகர், தம்பிதுரை, நுதன், நிதின் சாம் ரெஜினோல்ட்.

தயாரிப்பாளர்: கேசவ மூர்த்தி

விநியோகஸ்தர்: ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஷ்.

தயாரிப்பு நிறுவனம்: Walkthrough Entertainment

PRO: திரு

படத்தின் பெரும்பால காட்சிகளை (ஆபீஸ்) அலுவலகத்தில் வைத்து முடித்து இருக்கின்றனர்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஐடி நிறுவனத்திற்கு சென்று வந்த உணர்வை தருகிறது.. அதே சமயத்தில் அவர்கள் என்ன பொருளை விற்பனை செய்கிறார்கள்..? என்ன மார்க்கெட்டிங் செய்கிறார்கள்.? என்பதை கடைசி வரை இயக்குனரும் சொல்லவில்லை.. அந்த கதாபாத்திரங்களும் சொல்லவில்லை என்பதுதான் காமெடி..

பாடல்களும் பின்னர் இசையும் ஓகே ரகம்தான்.. ஒளிப்பதிவு படத்திற்கு சிறப்பு.

நாம் என்னதான் மார்க்கெட்டிங் செய்து ஓடி ஓடி உழைத்தாலும் கம்பெனி நம்மை ஒரு கட்டத்தில் தூக்கி எறியும்.. நம்முடைய உழைப்பு தான் நமக்கு பலம் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை..

 

Cold Call movie review