அன்பே டயானா விமர்சனம் 3.75/5… கமர்ஷியல் ரூட்டில் ஜமாய்த்த ஜமா டைரக்டர் பாரி

அன்பே டயானா விமர்சனம் 3.75/5… கமர்ஷியல் ரூட்டில் ஜமாய்த்த ஜமா டைரக்டர் பாரி

 

அன்பே டயானா விமர்சனம் 3.75/5… கமர்ஷியல் ரூட்டில் ஜமாய்த்த ஜமா டைரக்டர் பாரி

 

ஸ்டோரி…

பெரம்பூர் பகுதியில் வசிக்கிறார் பாரி.. இதே பகுதியில் வசிக்கிறார் ஆங்கிலோ இந்தியன் பெண் ரம்யா.. ரம்யாவிடம் பாரி காதலை சொல்ல நாம் நண்பர்களாக இருப்போம்.. தமிழ் பையனை என்னால் காதலிக்க முடியாது என்கிறார்..

இப்படியான சூழ்நிலையில் திடீரென பாரியின் அம்மா ரோஜா அவரது தம்பி மகளை நிச்சயம் செய்து வைக்கிறார்..

ஆனால் அந்த நேரத்தில் பாரியின் காதலை உணர்ந்த ரம்யா திடீரென காதலிக்க தொடங்க என்ன செய்வது என தவிக்கிறார் பாரி..

அதன் பிறகு என்ன நடந்தது..? தனக்கு பிடித்தமான ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்தாரா அல்லது மாமா மகளை மணந்து கொண்டாரா.? அவரது முடிவு என்ன என்பதெல்லாம் சுவாரசியமான கல்யாண கலாட்டா…

கேரக்டர்ஸ்….

பாரி இளவழகன் – CSK சிருமாமில்ல சீதா கிருஷ்ணா
ரம்யா ரங்கநாதன் – மேஜிக் கோன்சால்வ்ஸ்
சேத்தன் – சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர்
ரோஜா செல்வமணி- சரளா
பரிதாபங்கள் கோபி – பெங்களூர் பாபா
செல் முருகன் – மங்கபாபு
நிகிலா சங்கர் – தனிஷா
இஸ்மத் பானு – சத்தியவதி
சுதர்சன் காந்தி – சிருமாமில்ல சிரஞ்சீவி சங்கர்

ஜமா என்ற படத்தில் தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்தவர் பாரி இளவழகன்.. அந்தப் படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்காத நிலையில் திடீரென கமர்சியல் ரூட்டுக்கு திரும்பி விட்டார் பாரி.. அவரின் கமர்சியல் ரூட் தற்போது பாரிக்கு சக்சஸ் ரூட்டாக மாறிவிட்டது.. கிளைமாக்ஸ் காட்சியில் சென்னை தமிழ் ஹிந்தி தெலுங்கு இங்கிலீஷ் என அனைத்திலும் அசால்டாக பேசி அசத்தியிருக்கிறார்..

ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்து மணமுடிக்க அவர் அலைவதும் ஒரு கட்டத்தில் எங்கே நம்ம குடும்பத்திற்கு ஒத்து வருவாளா என்ற சந்தேகிக்கும் காட்சியிலும் பாரி பட்டையை கிளப்பி இருக்கிறார்..

அப்பாவும் மகனும் சேர்ந்து சைட் அடிப்பது.. தாய்க்கு பயந்து நடுங்குவது.. தம்பியை மிரட்டுவது.. அக்காவிடம் பாசமாக இருப்பது.. என ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் பாரி..

சேத்தன் & ரோஜா ஜோடி பொருத்தம் பக்கா.. நான் சொல்றது தான் நீங்க கேட்கணும் என காது கேட்கும் மெஷினை வைத்துக் கொண்டு பேசுவதும் அதன் பிறகு கழட்டி விட்டு யாருடைய பேச்சும் கேட்காமல் சேத்தன் சேட்டை செய்திருக்கிறார்..

மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் ரோஜா.. கண்டிப்பான அம்மா கேரக்டரில் ரோஜா வாசனை சூப்பர்..

ஆங்கிலோ இந்திய பெண்ணாக ரம்யா ரங்கநாதன்.. லோக்கல் தமிழ் பையனை எப்படி காதலிப்பது என தயங்கி பின்னர் ஒரு கட்டத்தில் காதலுக்கு ஓகே சொல்வதெல்லாம் செம ஃபன் செய்திருக்கிறார்.. பாரியின் தந்தை சேத்தனை மிரட்டும் போது.. உங்க அம்மா எனக்கு எப்படியோ.. அதே போல உன் லவ்வர் உனக்கு சூப்பர் என சொல்லும் போது தியேட்டரில் சிரிப்பலை..

பாரியின் தம்பியாக சுதர்சன் அவரும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.. அப்பாவி பிள்ளையாக கவர்கிறார்.. இவர்களுடன் பரிதாபங்கள் கோபி, செல் முருகன் உள்ளிட்டோரும் கலக்கி இருக்கின்றனர்..

பரிதாபங்கள் கோபியின் பெங்களூர் பாஷை ஒரு கட்டத்தில் எரிச்சலை கிளப்புகிறது.. நிகிலா ஷங்கர் & இஸ்மத் பானு உள்ளிட்டோரும் நடிப்பில் தனி கவனம் பெறுகின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

பேனர்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்,  நியோ கேசில் கிரியேஷன்ஸ்  &  Era Entertainment
தயாரிப்பு நிறுவனம்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் &  Era Entertainment
தயாரிப்பாளர்கள்: சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன்

எழுதி, இயக்கி, நிகழ்த்தியவர்: பாரி இளவழகன்
இசை: பரத் சங்கர்
ஒளிப்பதிவாளர் :  ஷெல்லி கேலிஸ்ட்
படத்தொகுப்பு : பார்த்தா MA
கலை இயக்குனர்: மகேந்திரன்

ஆடை வடிவமைப்பாளர்: அபிநந்தினி எம்
தலைமை ஒப்பனை கலைஞர்: F. சசி குமார்
சண்டைக் காட்சி: டான் அசோக்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

பரத் சங்கர் இசையில் அனைத்து பாடல்களும் கானா ரகமே.. கொஞ்சம் வேறு மெட்டுயும் போட்டு இருக்கலாம்.. பெரம்பூருக்கு இதுதான் மெட்டு என நினைத்து விட்டாரோ..? ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணிகளில் சிறப்பு..

படத்தின் ஹீரோ பாரி இளவழகன் தான் படத்தின் இயக்குனரும்.. ஒரு பாரம்பரியமிக்க ஜாதி தெலுங்கு குடும்பத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண் நுழையும் போது அவளின் நடவடிக்கை எப்படி இருக்கும்… தன் குடும்பத்திற்கு ஏற்று நடந்து கொள்வாரா.? என்ற பல விஷயங்களை புகுத்தி அதில் சுவாரஸ்யம் காட்டி ஒரு நகைச்சுவை கலாட்டா கொடுத்து இருக்கிறார்… ஆனால் அன்பே டயானா என்ற இந்த தலைப்புக்கும் படத்திற்கும் தான் என்ன சம்பந்தம்?

 

கிளைமாக்ஸ் காட்சியில் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.. நிச்சயம் சிரித்து மகிழ்ந்து தியேட்டரை விட்டு வெளியே வருவீர்கள்..

 

Anbe Diana movie review