பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – (Fauzi) டிசம்பர் 3 ஆம் தேதி ரிலீஸ்
*ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – (Fauzi) டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி ( (Hanu Raghavapudi) இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘ஃபௌஜி’ திரைப்படம் – எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட பிரம்மாண்டமான போஸ்டர் பிரபாஸை இதுவரை காணாத ஒரு புதிய தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறது
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘ஃபௌஜி’ திரைப்படம் – பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியிலான அதிரடி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வெளியீட்டு தேதி அறிவிப்புடன் வெளியிடப்பட்ட புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ‘ஃபௌஜி’ திரைப்படத்தின் தீவிரமான தன்மையையும்… அதன் பிரம்மாண்டமான அளவையும்… உணர்வுபூர்வமான ஆழத்தையும்… வெளிப்படுத்துகிறது. இதில் பிரபாஸ் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கரடு முரடான தோற்றத்தில் உணர்ச்சிகரமாக காட்சியளிக்கிறார்.
கடுமையான போருக்குப் பிறகு ரத்தக்கறை படிந்தும்.. காயங்களுடனும்… மிகுந்த சோர்வுடனும்.. காணப்படும் அவர் – போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் வீரர்களுக்கு மத்தியில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். தலை குனிந்த படி துப்பாக்கியை இறுக்கமாக பிடித்திருக்கும் அவரது தோற்றம்- விதிக்கு அடிபணிய மறுக்கும் ஒரு போர் வீரனின் தியாகம்- வலி- மன உறுதி- ஆகியவற்றை நேர்த்தியாக உணர்த்துகிறது.
நீண்ட கலைந்த தலைமுடி- அடர்த்தியான தாடி -போரினால் காயம் பட்ட உடல்வாகு மற்றும் ரத்தம் தோய்ந்த வெள்ளை வேட்டி என அவரது தோற்ற மாற்றம்.. பார்வையாளர்கள் இதுவரை காணாத வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு வார்த்தை கூட பேசாமல் தனது கம்பீரமான திரை தோற்றத்தின் மூலம் துக்கம் -உறுதி- தைரியம் மற்றும் தளராத மனப்பான்மை ஆகியவற்றை பிரபாஸ் நுட்பமாக வெளிப்படுத்துகிறார்.
அவரை சுற்றியுள்ள சூழல் படத்தின் மீதான தாக்கத்தை கூடுதலாக அதிகரிக்கிறது. போர்க்களம் முழுவதும் புகை மண்டலமாக சூழ்ந்திருக்க… வெகு தூரம் வரை பரவியிருக்கும் வீரர்களின் சடலங்கள்- கதையின் பின்னணியாக அமைந்திருப்பது.. அந்த பயங்கரமான போரின் கோர முகத்தை விவரிக்கிறது. பிரம்மாண்டமான அளவில் அமைக்கப்பட்ட அதிரடி காட்சிகளையும், அதே தருணத்தில் ஆழமான உணர்ச்சிகளையும் இப்படம் வழங்கும் என்பதையும் இந்த போஸ்டர் எடுத்துரைக்கிறது. இந்த திரைப்படம்- திரையரங்குகளில் மிகப்பெரிய ஈர்ப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது. அதிலும் மிக முக்கியமான சண்டை காட்சியில் இருந்து தான் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். ஃபௌஜி திரைப்படம் – சாதாரணமான போர் சார்ந்த திரைப்படம் மட்டுமல்ல… இது பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளும் அழுத்தமான கதைக்களமும் இணைந்த ஒரு உணர்வுபூர்வமான சினிமா அனுபவமாக இருக்கும் என்பதையும் குறிப்பிடுகிறது.
வெளியீட்டுத் தேதி அறிவிப்பு – இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது ஒரு போஸ்டரே இவ்வளவு உற்சாகத்தை ஏற்படுத்தும் போது… திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் அனுபவம் சிறப்பானதாகவும் அதிரடியானதாகவும் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுவரை வெளியாகி உள்ள தகவல்கள்- பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள்- நெஞ்சை தொடும் உணர்வுகள்- கண்கவர் காட்சிகள் மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத் திறன் கொண்ட ஒரு திரைப்படமாக இது அமையும் என்பதையே காட்டுகிறது.
ஃபௌஜி படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை அனில் விலாஸ் ஜாதவ் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாள்கிறார்.
வெளியீட்டு தேதி உறுதியாகிவிட்ட நிலையில்.. பிரபாஸின் இதுவரை காணாத புதிய தோற்றம் குறித்த எதிர்பார்ப்பு மற்றும் ஒவ்வொரு நிலையிலும் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் போஸ்டர் ஆகியவற்றால்… ஃபௌஜி இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் இந்திய திரைப்படமாகவும்… வசூல் சாதனை படைக்கும் படமாகவும்… உருவெடுத்து வருகிறது.
நடிகர்கள்: பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா ,பானுச்சந்தர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : ஹனு ராகவபுடி
தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
வழங்குபவர்கள் : குல்சன் குமார் – பூஷன் குமார் – டி சீரிஸ் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி- ஒய் ரவிசங்கர் – பூஷன் குமார்
ஒளிப்பதிவு : சுதீப் சட்டர்ஜி
இசை : விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு வடிவமைப்பு :அனில் விலாஸ் ஜாதவ்
படத்தொகுப்பு : கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்
வி எஃப் எக்ஸ்- VFX- ஆர். சி
கமலா கண்ணன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
Prabhas starrer Fauzi Releasing Worldwide On 3rd December
*Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’ Most-Awaited Pan India Project Fauzi Releasing Worldwide On December 3rd, Epic Release Date Poster Presents Prabhas In Never-Seen-Before Avatar*

