BEEP பீப் விமர்சனம்… ஒரு கொலை.. இரண்டு விசாரணை…
BEEP பீப் விமர்சனம்… ஒரு கொலை.. இரண்டு விசாரணை…
BEEP சொல்லக்கூடாத வார்த்தைகள்… மியூட் செய்யப்பட்ட வார்த்தைகள் என்று எடுத்துக் கொள்ளலாம்..
ஸ்டோரி…
நாயகன் ராகவ்.. ஒரு பிளேபாய்.. பெண்களை வீழ்த்தி சுகம் காண்பவர்.. பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகுகிறார்… ஒரு கட்டத்தில் அந்த பெண் மர்மமான முறையில் இறந்து போகிறார்.. எனவே கொலை பழி இவர் மீது திரும்புகிறது..
ஆனால் கொலை தான் செய்யவில்லை என்று எத்தனை முறை சொன்னாலும் போலீஸ் அதிகாரி நிதிஷ் வீரா இவர் மீது விசாரணை வைக்கிறார்..
இந்த சூழ்நிலையில் தனக்கு இருக்கும் ஒரு அபூர்வ சக்தி மூலம் சில விஷயங்களை காவல்துறைக்கு சொல்கிறார்… அதன்படி காவல் துறையும் இவரது விசாரணை படி செயல்பட வைக்கின்றனர்.
ராகவ்வின் அபூர்வ சக்தி என்னவென்றால்… ஒரு போட்டோ இருந்தால் அந்த புகைப்படத்தின் முன்பின் நடந்த விஷயங்களை சொல்வது வழக்கம்…
அதன்படி அவருக்கு இந்த கொலையில் கிடைக்கும் ஒரு போட்டோவை வைத்து தீவிர விசாரணை இறங்குகிறார்..
அதன்படி குற்றவாளியை கண்டுபிடித்து தான் நிரபராதி என்பதை நிரூபித்தாரா.? என்பதுதான் திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
Raghav – ilanDevan
Sunaina – Yamini Lakshmanan
Kavya – Prerna Khanna
Nayana Kapoor – ItI Acharya
Suraj – Arun Mohan
Santa – Shravan Ramakrishnan
Helen – Juhi Sharma
Laya – Priyadharshini
Inspector – Nithish Veera
SI – Balaji
Vinodh – Rajavel
Harsh – Atul
Yohaan – G. Sivakumar
Hero Father – Venkat Ramesh
Prof Father in Law – Col R Ganesan
Prof Chidhambaram – L Shanmuga Sundar
ஸ்மார்ட்டான ராகவ்.. இளந்தேவன் கேரக்டருக்கு இளமையான நாயகனாக சிறப்பு சேர்த்திருக்கிறார்.. ஒரு கொலை வழக்கை வித்தியாசமான கோணங்களில் இவர் அணுகும் போது அந்த பதட்டம் நம்முடன் தொற்றிக் கொள்கிறது..
நாயகி யாமினி செழிப்பான உடல அழகை காட்டி கவர்கிறார்.. நடிப்பிலும் பாஸ் மார்க்..
சில வருடங்களுக்கு முன்பு மறைந்த நித்திஸ் வீரா காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.. சினிமாத்தனம் இல்லாத போலீஸ் அதிகாரியாக வருகிறார்… ஒருவர் தன்னை நிரபராதி என நிரூபிக்க அவருக்கு அவகாசம் கொடுப்பது என தன் கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்..
கல்லூரி பேராசிரியராக சண்முக சுந்தர் நடித்திருக்கிறார்… இவர் தான் படத்தின் திருப்புமுனை கேரக்டர்.. இவர்தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
Director – L. Shanmuga Sundar
Executive Producer – Col R Ganesan
Cinematography – Pradeep Padma Kumar
Music Director – Prashanth Vihari
Art Director – Umesh Kumar
Editors – Abishek, Vignesh RL
Stunt Master – Ram Kumar
Costume Design – Vino Supraja, Preetha Raaghav, Divya Niranjan
PRO – A. John
படத்தின் ஒளிப்பதிவு சுமார் ரகம் தான் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது.. டி ஐ கலரிங் செய்து சுவாரஸ்யம் கூட்டி இருக்கலாம்.. பின்னணி இசை படத்துடன் ஒன்றி பயணிக்கிறது..
ஒருவன் கொலை செய்ய நினைத்தால் அதை திட்டமிட்டு தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை… எதிர்பாராத விதமாக நடந்த கொலைக்கு அவன் உடந்தையாக இருக்கலாம்… எதிர்பாராமல் நடந்த விபத்துக்கு அவர் பின்னணியில் இருக்கலாம் என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சண்முகசுந்தர்..

ஒரு விலைமாது கொல்லப்படுகிறார்.. அதனை இரண்டு விதங்களில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்..
ஒரு விசாரணையை போலீஸ் அவரது பாணியில் எப்படி விசாரிக்கிறார்.. ஒரு சாமானியன் எப்படி அணுகுகிறார் என்பதை இருவித கோணங்களில் சொல்லும்போது படத்தின் மீதான சுவாரசியம் ஒவ்வொரு காட்சியிலும் கூடுகிறது..
Beep movie review

