PARIS CAFE பாரிஸ் காஃபே விமர்சனம்… கணவனே ஆனாலும் குற்றம் குற்றமே

PARIS CAFE பாரிஸ் காஃபே விமர்சனம்… கணவனே ஆனாலும் குற்றம் குற்றமே

 

PARIS CAFE பாரிஸ் காஃபே விமர்சனம்… கணவனே ஆனாலும் குற்றம் குற்றமே

 

ஸ்டோரி…

குரு சோமசுந்தரம் – அனுமோல் இருவரும் தம்பதிகள்.. குரு ஒரு அரசு டாக்டர்.. இவர் உடல்களை பரிசோதனை போஸ்ட் மாடம் செய்து சான்றிதழ் வழங்குபவர்.. இவரது மனைவி அனு.. ஒரு சிவில் இன்ஜினியர்.. அது மட்டுமில்லாமல் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டுபவர்..ஒரு பெண்ணியவாதி.

நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் இவர்களுக்கு ஒரே ஒரு மகள்.

அவர் பாரிஸ் நகரில் வசிக்க அங்கே அவருக்கு ஒரு காதலனும் இருக்கிறார்.. அவர்தான் விஜய் விஷ்வா..

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் தன் தந்தைக்கு போன் செய்யும்போது அம்மா தந்தையை விட்டு பிரிந்து சென்றதை அறிகிறார்.. இதனால் தன் பெற்றோர்களை சேர்த்து வைக்க உடனே இந்தியாவுக்கு திரும்புகிறார்.

அப்போது ஒரு ஆணவ கொலை வழக்கில் அதை தற்கொலை என தந்தை சான்றிதழ் கொடுத்து விட்டதை அறிகிறார்.. இதனால் தான் தன் அம்மாவுக்கு அவர் மீது கோபம் என்பதையும் அறிந்து கொள்கிறார்..

உன் அப்பா ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்து விட்டார்.. அவருடன் வாழ முடியாது என மறுக்கிறார்.. இந்த சூழ்நிலைகள் மகள் என்ன செய்தார்.? என்பதுதான் மீதி திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

குரு சோமசுந்தரம் – அனு ஒரு தம்பதி இவர்களது மகள் அர்ச்சனா மற்றும் விஜய் விஷ்வா..

பிளாஸ் பேக்கில் காதலர்களாக வருபவர்கள்.. சாய் விக்கி மற்றும் நயனா. இப்படி மூன்று காதலர்கள் சுற்றியே கதைக்களம் நகர்கிறது..

சொல்லப் போனால் குரு & அனு கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஒரு தம்பதிகளின் வாழ்க்கை முறையை அழகாக சொல்லி இருக்கிறார்..

அதே சமயத்தில் கணவனே ஆனாலும் ஒரு தவறு செய்தால் அவனை வெறுக்கும் ஒரு இல்லத்தரசியாக ஒரு பெண்ணியவாதியாக அனுமோல் அசத்தியிருக்கிறார்.

தன் குடும்பத்திற்காக தான் செய்த தவறு எப்படி தவறாகும் என்ற மனவேதனையில் இருக்கும் குரு சோமசுந்தரம் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்வு பூர்வமாக செய்து இருக்கிறார்..

காதலை விட தன் பெற்றோர்களின் நலனே முக்கியம் என்ற கேரக்டரில் அழகான மகளாக அர்ச்சனா..

விஜய் விஷ்வா தன் PhD படிப்பை நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் நபராக சிறப்பு..

பிளாஷ்பேக் தம்பதிகளாக நயனா மற்றும் சாய் விக்கி இருவரும் இருவருக்கும் பக்கா பொருத்தம்..

 

டெக்னீசியன்ஸ்…

பெரும்பாலும் ஆணவக் கொலைகளை கிராமத்து பாணியில் மட்டுமே பார்த்திருப்போம்.. இதில் நகரத்து பாணியில் ஒரு ஆணவ கொலை செயலை சொல்லி இருக்கிறார்..

அதில் ஆணவக் கொலை ஆதரிக்கும் ஒரு கணவருக்கு அவர் எதிர்க்கும் ஒரு மனைவி என்ற போர்வையில் அழகான சமூக கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சாரல் ஜீவன்..

படத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்.. பின்னணி இசையும் படத்துடன் ஒன்றி பயணிக்கிறது.. முக்கியமாக பாடல்களும் சிறப்பு சேர்க்கிறது..

இதுதான் திரைக்கதை இப்படித்தான் நகரும் என்ற சூழ்நிலையை நாம் புரிந்து கொள்ளுமாறு கதையை அமைத்திருக்கிறார். அதை கொஞ்சம் திருப்புமுனையுடன் சொல்லி இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடி இந்த பாரிஸ் காஃபே இன்னும் மணக்கச் செய்திருக்கும்..

பாரிஸ் காபி என்ற ஒரு இடத்தில் அவருக்கு ஒரு புதிய சிந்தனை வரும் என்பதாக கதை வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இந்த கதைக்கும் பாரிஸ் காஃபே என்றும் சொல்லுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்..

 

Paris Cafe movie review