தி டார்க் ஹெவன் விமர்சனம் 4/5…. Unusual Thriller Subject
தி டார்க் ஹெவன் விமர்சனம் 4/5…. Unusual Thriller Subject
ஸ்டோரி..
தமிழகம் கேரளா எல்லை பகுதியில் கதை நடக்கிறது.. ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு பணிக்கு வருகிறார் நாயகன் சித்து..
அப்போது ஜூன் மாதம் என்பதால் அங்குள்ள மக்கள் பலரும் என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் உள்ளனர்..
ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜூன் மாதம் வரும்போது மட்டும் மக்கள் பயத்தில் உறைகின்றனர்.. அப்படி என்னதான் ஜூன் மாதத்தில் நடக்கப் போகிறது என்ற சூழ்நிலையில் நாயகன் வர அங்கு அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தப்பி வந்த சைக்கோ கொலைகாரனின் திட்டமோ என்ற போலீஸ் அவனைத் தேடும் போது பல திருப்பங்கள் நடக்கிறது.. ஒரு கட்டத்தில் நாயகன் சித்துவின் மனைவியும் கொல்லப்படுகிறார்..
கொலைகாரன் யார்.? அவனை எப்படி நாயகன் சித்து கண்டுபிடித்தார்.? என்பதெல்லாம் அதிரடியான பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
சித்து – தர்ஷிகா – ரித்விகா – ஜெயக்குமார் உள்ளிட்ட பலர்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலிக்கும் சந்தானம் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட வரிசையில் இணைந்திருக்கிறார் சித்து..
இவருக்கு சீரியஸ் கேரக்டர் என்று டைரக்டர் சொல்லி இருப்பாரோ அதுபோலவே படம் முழுவதும் சீரியஸாக இருக்கிறார்.. மனைவியிடம் கூட சிரித்துப் பேசவில்லை .. இனி இவர் சீரியஸ் சித்து என்று அழைத்தாலும் தப்பில்லை.. சினிமா போலீஸ் போல அல்லாமல் எதார்த்த போலீஸ் போல கம்பீரம் காட்டி தேடுதல் வேட்டையை கச்சிதமாக முடித்து இருக்கிறார்..
வலுவான கேரக்டருக்காக காத்திருந்த ரத்விகாவுக்கு இந்த படத்தில் ரொம்பவே வலு’வான கேரக்டர்தான்.. சாந்தமாக வந்து ட்விஸ்ட் காட்டி இருக்கிறார்.. தர்ஷிகா அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்..
போலீஸ் ஜெயக்குமார்.. பொறுப்பான போலீசாகவும் பொறுப்பான அப்பாவாகவும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.. அழகு கேரட்டில் வரும் போலீஸ்காரர் அதிரடி காட்டி இருக்கிறார்.. விரைவில் இவரையும் நாயகனாக பார்க்கலாம்..

டெக்னீசியன்ஸ்…
படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.. முக்கால்வாசி படம் இருட்டில் பயணித்தாலும் அது அழகாக கண்களுக்கு தெளிவாக காட்சியாக இருக்கிறார் ஒளிப்பதிவாளர்..
ஒரு திரில்லர் அனுபவத்தை இசையால் தான் கொடுக்க முடியும் என்பதை இசை மூலம் நிரூபித்திருக்கிறார் இசையமைப்பாளர்..
இதற்கு முன்பு D3 என்ற தரமான படத்தை கொடுத்த பாலாஜி இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.. அவர்தான் இந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர்.. எனவே தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.. எங்கும் சமரசம் இல்லாமல் படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக்கி இருக்கிறார்..

அடுத்த பாகத்தின் ஷூட்டிங்கையும் பாதி முடித்து விட்டார்.. எனவே படத்தில் முதல் பாகத்தில் சில திருப்பங்களுக்கு விடை இல்லாமல் இருக்கிறது.. ஆனால் அடுத்த பாகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பாலாஜி.. வாழ்த்துக்கள்..
The Dark Heaven movie review

