ஈடி பேமிலி பிசினஸ் அவார்ட்ஸ் – சிறந்த குடும்ப நிறுவனம் விருது பெற்றது அப்போலோ
ஈடி பேமிலி பிசினஸ் அவார்ட்ஸ் – சிறந்த குடும்ப நிறுவனம் விருது பெற்றது அப்போலோ
31 ஜூலை 2026: இந்தியாவின் மிகப்பெரிய குடும்ப நிறுவனங்களுக்கு இடையே வளர்ச்சி, சிறந்த நிர்வாகத் திறன், தலைமுறைத் தொடர்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கும் வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான தி எகனாமிக் டைம்ஸ் பேமிலி பிசினஸ் விருதுகளில், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் “ஆண்டின் சிறந்த குடும்ப நிறுவனம் – மெகா” என்ற விருதைப் பெற்றுள்ளது.
இந்த அங்கீகாரம், அப்போலோ மருத்துவமனையை ரெட்டி குடும்பத்தினர் வழிநடத்தி வரும் சிறப்பான முறையைக் கொண்டாடுகிறது. இதன் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் முன்னோடி தொலைநோக்குப் பார்வையில் தொடங்கி, பிரீதா ரெட்டி (நிர்வாகத் துணைத் தலைவர்), டாக்டர் சங்கீதா ரெட்டி (இணை மேலாண்மை இயக்குனர்), சுனிதா ரெட்டி (மேலாண்மை இயக்குனர்), ஷோபனா காமினேனி (நிர்வாகத் துணைத் தலைவர்) ஆகியோரின் கூட்டுத் தலைமைத்துவம் வரை இந்த அங்கீகாரம் பெருமைப்படுத்துகிறது. இவர்கள் அனைவரும் இணைந்து, மருத்துவ மேலாண்மை, நோயாளிகளை மையமாகக் கொண்ட மருத்துவக் கவனிப்பு, நோய்த்தடுப்பு நலவாழ்வு, அறிவியல்-தொழில்நுட்பம் சார்ந்த புதுமைகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவின் முதன்மையான ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனங்களில் ஒன்றாக அப்போலோவின் பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர்.
டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, நிறுவனர் மற்றும் தலைவர், அப்போலோ மருத்துவமனைகள் குழுமம்:
“ஒவ்வொரு இந்தியருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. என் மகள்கள் அந்தக் கனவைத் தங்களுடையதாக்கிக் கொண்டு, அப்போலோவை இன்று இருக்கும் நிலைக்கு உயர்த்துவதற்காகத் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான பார்வையைத் தந்து, நமது பயணத்தின் வெவ்வேறு பிரிவுகளை வழிநடத்துகிறார்கள்.
எங்கள் தலைமைத்துவக் குழு, மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் ஒவ்வொரு அப்போலோ ஊழியர்களுடனும் இணைந்து, இந்தியாவின் மருத்துவத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவிய ஒரு மாபெரும் நிறுவனத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.”
இந்த அங்கீகாரம், அந்நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமல்லாமல், அதன் பயணத்தை வடிவமைத்த நோக்கத்தின் தொடர்ச்சி, தொழில்முறை நிர்வாகம், நீண்டகால நிறுவனக் கட்டமைப்பு ஆகியவற்றையும் பிரதிபலிக்கிறது..
Apollo hospital won ET family Business Best award

