ஜனநாயகன் விமர்சனம்.. Farewell Treat for Vijay Fans

ஜனநாயகன் விமர்சனம்.. Farewell Treat for Vijay Fans

 

ஜனநாயகன் விமர்சனம்.. Farewell Treat for Vijay Fans

 

ஸ்டோரி…

மதுரை மத்திய சிறையில் கைதியாக இருக்கிறார் விஜய்.. அங்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.. எனவே போலீஸ் கௌதம் வாசுதேவ்வின் நன் மதிப்பை பெறுகிறார்.. அதன்படி விடுதலை ஆகிறார்..

ஒரு சூழ்நிலையில் ஒரு விபத்தில் கௌதம் வாசுதேவ் இறந்து விட அவரின் மகளை எடுத்து வளர்க்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறார் விஜய்.. மமீதாவும் இவரை (சித்தா) சித்தப்பா என்று அழைக்கிறார்..

இந்த நிலையில் மமீதாவுக்கு வில்லன் பாபி தியோல் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது.. எனவே வில்லனை எதிர்க்கிறார் விஜய்.. அப்போதுதான் விஜய்க்கும் பாபிக்கும் ஏற்கனவே முன்பகை இருப்பது தெரிகிறது..

அப்படி என்றால் இவர்கள் இருவரும் யார்.? இவர்களின் பின்னணி என்ன.? என்ன குற்றம் செய்து சிறைக்கு வந்தார் விஜய்.? என்பதெல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

One last time – விஜய் படங்கள் என்றாலே ஆக்சன் ரொமான்ஸ் சென்டிமென்ட் ஆட்டம் பாட்டம் சோசியல் மெசேஜ் இவை அனைத்தும் இருக்கும்.. இதில் ரொமான்ஸ் தவிர படத்தில் அனைத்தும் உள்ளது..

ஒரு காட்சியில் ஹீரோயின் பூஜாவை பார்த்து ஹாய் ஆன்ட்டி என்கிறார் விஜய்.. நான் ஆண்டியா.? 40 + என்றாலே ஆண்டி தானே என்கிறார்.. நீங்க மட்டும் நான் இளைய தளபதியா என்று கேட்கிறார்.. அதன் பிறகு ரொமான்ஸ் இருக்கும் என்று நினைத்தால் அதுவும் இல்லை..

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று இயக்குனர் நினைத்தாரா விஜய் நினைத்தாரோ தெரியவில்லை.. படத்தில் ஏகப்பட்ட சோசியல் மெசேஜ்.. பெண் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் முதல்.. பாலியல் தொல்லை பிரச்சனை… கண்ணகி சிலை முன்பு போராட்டம்.. கள்ளச்சாராய சாவு, அரசியல்வாதிகளின் அதிகாரத் திமிரு, தமிழகத்தில் நுழைய நினைக்கும் மத்திய கட்சி, ஜாதி மத கலவரம்… ஹிந்து முஸ்லிம் வன்முறை, பெண்களுக்கு ராணுவ பயிற்சி, தீவிரவாதிகள் ஊடுருவல்.. இப்படியாக விஜய்க்கு பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் வினோத்..

 

பூஜா கொஞ்சம் கவர்ச்சிக்காக விஜய்க்கு துணையாக வருகிறார்.. வில்லனாக ஹிந்தி நடிகர் பாபி தியோல்.. நடிப்பிலும் தோற்றத்திலும் மிரட்டி இருக்கிறார்.

மமிதாவுக்கு இந்த படம் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். காரணம் விஜய் படத்தில் அவருக்கு நிகராக பல காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார் மமீதா.. முக்கியமாக இடைவேளைக்குப் பிறகு ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்திருக்கிறார் மமீதா பைஜூ..

இப்போது விஜய் அமைச்சரவையில் இருக்கும் பல முக்கிய அமைச்சர்கள் இந்த படத்தில் ஓரிரு காட்சிகளில் தலை காட்டியுள்ளனர். அது போல விஜய்யின் ராசியான இயக்குனர்கள் நெல்சன் அட்லி லோகேஷ் உள்ளிட்டோரும் விஜய்க்கு பிரியா விடை கொடுத்து இருக்கின்றனர்..

இசையமைப்பாளர் அனிருத், இந்த படத்தின் தயாரிப்பாளரும் வந்து செல்கின்றனர்..

கௌதம் வாசுதேவ், நிழல்கள் ரவி பிரியாமணி, நாசர், பிரகாஷ்ராஜ், ரேச்சல், நரேன், சுனில், ரேவதி, ஜி. எம். சுந்தர், ஷரத் ரவி, அர்ஷத் உள்ளிட்டோரும் உண்டு..

ஆனால் இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.. காரணம் ஏகப்பட்ட நட்சத்திரங்களுக்கு விஜய்யின் கடைசி படத்தில் வாய்ப்பு மட்டுமே கொடுத்திருக்கிறார் இயக்குனர் வினோத்..

டெக்னீசியன்ஸ்…

அனிருத் இசை அமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.. ஆக்ஷன் காட்சிகளில் அசாதாரண உழைப்பு தெரிகிறது..

ராவண மவன்டா… கச்சேரி ஆரம்பம்… உன் பேரே வரலாறு உள்ளிட்ட பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கு பக்கா கமர்சியல் விருந்து.. தியேட்டரில் திருவிழா கோலம்… ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அனிருத் தெறிக்க விட்டுள்ளார்..

படத்தொகுப்பு: பிரதீப் இ. ராகவ்
கலை இயக்கம்: வி. செல்வகுமார்
சண்டைக் காட்சிகள்: அனல் அரசு

எடிட்டர் பிரதீப் ராகவ்.. காட்சிகளை ட்ரிம் செய்து இரண்டரை மணி நேரமாக குறைத்து இருக்கலாம்.. படம் மூன்று மணி நேரம் என்பதால் அயற்சியை தருகிறது..

அனல் அரசு சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.. ஒவ்வொரு சண்டைக் காட்சிகளிலும் 100 பேரை கொன்று குவிக்கிறார் விஜய்.. கிளைமாக்ஸ் காட்சி ஹாலிவுட் நிகராக எடுக்கப்பட்டுள்ளது.. ரோபோடிக் சண்டை ஆனால் அதை நம்பும்படி எடுத்து இருக்கலாம்…

சிறைக்கைதி.. பாசமான சித்தப்பா… பொறுப்பான சமூக சிந்தனையாளர்.. பெண்களின் காவலன்.. தாடி வைத்த ஸ்டைலிஷ் போலீஸ்… ஜனநாயக முறைப்படி வாக்களிக்கும் ஜனநாயகன்… நான் ஆணையிட்டால் பாணியில் அரசியல்வாதிகளை தோலுரித்து இருக்கிறார்.. இப்படியாக விஜய்க்கு பல்வேறு பரிணாமங்களை காட்டியிருக்கிறார் வினோத்..

விஜய்யின் கடைசி படம் என்பதால் மெனக்கெட்டு திரைக்கதை அமைத்து இருக்கலாம்.. ஆனால் அதற்கு மாறாக தெலுங்கில் பாலையா நடித்த பகவத் கேசரி படத்தை ரீமேக் செய்து கொஞ்சம் விஜய்க்காக ஆல்ட்ரேஷன் செய்திருக்கிறார்..

படத்திற்கு சென்சாரில் ஏ சர்டிபிகேட் கிடைத்திருப்பதால் விஜய் அங்கிளை குழந்தைகள் பார்த்து ரசிக்க முடியாது.. வெட்டுக்குத்து ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகளை குறைத்து இருக்கலாம்…

ஆனால் முழுக்க விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட கமர்சியல் விருந்தாக இந்த ஜனநாயகனை கொண்டாடலாம்..

 

CM Vijay in Jana Nayagan movie review