சாரா விமர்சனம்… செல்லக்குட்டி… செல்லாத கட்டி
சாரா விமர்சனம்… செல்லக்குட்டி… செல்லாத கட்டி
ஸ்டோரி…
ஒரு பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் விஜய் விஷ்வா மற்றும் சாக்க்ஷி அகர்வால் இருவரும் பணிபுரிகின்றனர்.. கட்டிட வேலையில் செக்யூரிட்டி மற்றும் உதவியாளர் வேலைகளில் இயக்குனர் செல்லக்குட்டி, ரோபோ சங்கர், யோகி பாபு, தங்கதுரை ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்..
இவர்கள் சாக்க்ஷியை கடத்த திட்டமிடுகின்றனர்.
எல்லாரிடத்திலும் அன்பானவர் அக்கறையானவர் என்று பெயர் பெற்ற சாக்க்ஷியை இவர்கள் கொல்ல திட்டம் போடுவது நோக்கம் என்ன.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
இதில் சாக்க்ஷியின் பெயர்தான் சாரா அதுவே படத்தின் தலைப்பாக மாறி இருக்கிறது..

கேரக்டர்ஸ்…
விஜய் விஸ்வா மற்றும் சாக்க்ஷி அகர்வால்.. நாயகன் & நாயகி.. இருவரும் செம ஸ்மார்ட்.. ரொமான்டிக்கில் இன்னும் முயற்சித்து இருக்கலாம்.. காதலில் வலுவில்லை..
யோகி பாபு என்ற பெயர் விளம்பர பிராண்ட் ஆக பயன்படுத்தப்பட்டுள்ளது.. ரோபோ சங்கர் டபுள் மீனிங் காமெடி எடுபடவில்லை.. இவரும் தங்கதுரை நம்மையும் கடுப்பேற்றி இருக்கின்றனர்.
இயக்குனர் செல்ல குட்டி நடித்திருக்கிறார் அம்பிகாவின் மகனாக வருகிறார்.. இவர் தான் இயக்குனர் என்பதால் இடைவேளைக்குப் பிறகு முழுவதையும் ஆக்கிரமித்து இருக்கிறார்.. இவரின் சைக்கோத்தனமான நடிப்பு கடுப்பு.. இவர் இயக்கதோடு நிறுத்தி இருந்தால் இந்த சாரா பிழைத்து இருப்பாள்..
இவரது உடைகள் இவரின் கோமாளித்தனத்தை காட்டியிருக்கிறது.. ஒரு குத்துப்பாடலில் ஜட்டி போட்டு அதன் மேல் கோவணம் கட்டி கழுத்தில் டை கட்டி எல்லாம் சேட்டைகளும் செய்திருக்கிறார்..
சிறந்த நடிகையான அம்பிகாவும் இதில் ஏதோ கடமைக்கு தனது அம்மா கேரக்டரை செய்திருப்பதாகவே தெரிகிறது..

டெக்னீசியன்ஸ்…
இயக்கம் – செல்லக்குட்டி
இசை – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – லெஷ்மண் ஜெ
சண்டைப் பயிற்சி – மிரட்டல் செல்வா
ஒளிப்பதிவு இசையும் ஓரளவுக்கு ஓகே என்று அளவிலேயே உள்ளது.. அதுவும் பிளடி ஃபுல் என்ற பாடல் இயக்குனருக்காகவே எழுதப்பட்டதா.?
அம்மாவின் அன்பு விற்காக எதையும் செய்யத் துணிந்த மகனின் கதை தான் இந்த சாரா.. ஆனால் அதில் திரைக்கதையில் தன்னை பொருத்திப் பார்க்க நினைத்து தோல்வி அடைந்திருக்கிறார் இயக்குனர் செல்லக்குட்டி..
Saaraa movie review

