சாவீ விமர்சனம் 3.25/5 – தூக்கமின்மையால் துக்க வீட்டில் அடுத்த துயரம்
சாவீ விமர்சனம் 3.25/5 – தூக்கமின்மையால் துக்க வீட்டில் அடுத்த துயரம்
‘சாவு வீடு’ என இதுநாள் வரை அழைக்கப்பட்ட இந்தப்பட தலைப்பு தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கை காரணமாக ‘சாவீ’ என மாற்றப்பட்டுள்ளது..
ஸ்டோரி…
ஒரு குடும்பம்.. அதில் மூன்று அண்ணன் தம்பிகள் ஒரு தங்கை.. இவர்களின் வாரிசுகள்.
இந்த சூழ்நிலையில் அண்ணன் தம்பிகள் அடுத்தடுத்து மரணங்கள் நடப்பதால் இந்த வீடு சாவு வீடாக மாறுகிறது..
ஒரு விபத்தில் மரணம் அடைகிறார் இவர்களில் ஒருவர்.. இறந்தவர் பிணத்தை அடுத்த நாள் எடுக்க அனைவரும் காத்திருக்க அன்று இரவு அந்த பிணம் காணாமல் போகிறது..
அந்த பிணத்தை கடத்தியவரின் நோக்கம் என்ன.? என்ன நடந்தது.? என்பதை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா..
அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்ய டார்க் காமெடி தான் இந்த சாவு வீடு.. மன்னிக்கவும் இந்த ‘சாவீ’ படக்கதை.

கேரக்டர்ஸ்…
உதயா தீபா பட நாயகன்.. 2வது நாயகன் ஆதேஷ் பாலா.. இருவரும் தங்கள் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி கொடுத்திருக்கின்றனர்.
வழக்கமாக தாடியுடன் தோன்றும் ஆதேஷ் பாலா இந்த படத்தில் கிளீன் ஷேவ் போலீஸ் கேரக்டரில் அசத்தல் பாலா.. கமர்சியல் சினிமா போலீஸ் போல இல்லாமல் யதார்த்த போலீஸ் சிறப்பு.. அதே சமயத்தில் சில இடங்களில் கத்தி பேசுவதை குறைத்து இருக்கலாம்..
பொண்டாட்டி இருக்கும் போதே அடுத்த பெண்ணுக்கு ரூட் போடும் ஆதேஷ் பாலாவுக்கும் கொஞ்சம் ரொமான்ஸ் சீன்ஸ் வைத்திருக்கலாம்.
மற்றும் அண்ணன் தம்பி கேரக்டரில் வரும் ஒவ்வொருவரும் எதார்த்த நடிப்பில் இந்த சாவு வீடு கேரக்டர்களுக்கு பலம் சேர்த்து உள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…
DIRECTOR : ANTONY AJITH
MUSIC : SARAN RAGHAVAN, VJ RAGHURAM
DOP : BOOPATHI VENKATACHALAM
EDITOR : SUNDAR S, RAKESH LENIN
பூபதி ஒளிப்பதிவு செய்ய சரண் ராகவன் மற்றும் ரகுராம் இசை பணியை கவனித்துள்ளனர்..
சாவு வீட்டில் நடக்கும் கதையை சுவாரசியமாக டார்க் காமெடியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆன்டன் அஜித்..
தூக்கமின்மையால் துக்க வீட்டில் நடந்த துயரத்தை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார்..
இன்றைய இளைய சமூகம் செல்போனுக்கு மட்டுமல்ல போதைக்கும் அடிமையாகி உள்ளதை காட்சிப்படுத்தி விழிப்புணர்வு மெசேஜ் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு காலத்தில் ‘தூங்காதே தம்பி தூங்காதே…’ என்று சொல்லப்பட்ட அட்வைஸ் என்று ‘தூங்கு தம்பி தூங்கு..’ என்று சொல்லும் அளவுக்கு உறக்கமின்றி இரவில் செல்போனோடு தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள்…
Saa Vee movie review

