மாமன் விமர்சனம்.. மாறாத பாசம்
மாமன் விமர்சனம்.. மாறாத பாசம்
ஸ்டோரி….
அக்கா ஸ்வாசிக்கா.. தம்பி சூரி.. அக்காவுக்கு திருமணம் ஆகி 10 வருடத்திற்கு பிறகு தான் குழந்தை பிறக்கிறது.. எனவே அக்கா மீதும் மருமகன் மீதும் மிகுந்த பாசத்துடன் இருக்கிறார் சூரி..
அக்காவுக்கு மருத்துவம் பார்த்த உதவி டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமியை காதலிக்கிறார் சூரி.. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்..
திருமணம்… முதல் இரவு வரை இடையில் இந்த அக்கா மகன் நுழைந்து கொண்டே இருக்கிறான்.. ஒரு கட்டத்தில் இதுவே ஐஸ்வர்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.. ஹனிமூன் செல்லக்கூட அந்த பையன் தடையாக இருப்பதால் குடும்பத்தில் பிரச்சனை எழுகிறது..
இதுவே சூரிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பிரிவை ஏற்படுத்துகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.? தாய்மாமன் உறவு விட்டுப்போனதா.? மனைவிக்காக என்ன செய்தார்.? அக்கா குழந்தைக்காக என்ன செய்தார் சூரி.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சுவாசிகா, பாபா பாஸ்கர், பால சரவணன், ஜெயப் பிரகாஷ், மாஸ்டர் ப்ரீத் சிவன், சாயாதேவி, நிக்கிலா மற்றும் பலர்..
காமெடி மட்டுமல்ல என்னால் கலங்க வைக்கும் நடிப்பையும் தர முடியும் என்பது உடல் மொழி மூலம் உணர வைத்திருக்கிறார் சூரி.. அக்காவிடம் பாசம் பொழிவது முதல் மருமகன் மீது அன்பை காட்டுவது என அனைத்திலும் இன்பா கேரக்டரில் இன்பமயமாக வாழ்ந்திருக்கிறார்..
ஐஸ்வர்ய லட்சுமியும் தன் கேரக்டருக்கு பெரும் பங்களிப்பை கொடுத்து சூரி மனைவியாக ஜொலிக்கிறார்..
ராஜ்கிரண் – விஜி சந்திரசேகர் தம்பதி மூலம் வயதான காலத்திலும் காதல் வலிமை சொல்லி இருக்கிறார் இயக்குனர்..
சூரி இப்போ ஹீரோவாகிட்டாரு.. காமெடி பண்ண கூடாது என்று நினைத்து விட்டாரோ என்னவோ.. அவருக்கு பதிலாக பால சரவணன் அந்த இடத்தை நிறைவாக செய்திருக்கிறார்..
மாஸ்டர் ப்ரீத் சிவன்.. இந்த சிறுவனை சுற்றியே கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கிறது.. இவன் இயக்குனரின் மகன் என்பதாலோ கூடுதலான நடிப்பை கொடுத்து (குண்டு பையனாக) நம்மைக் கவர்கிறான்..
அம்மாவாக கீதா கைலாசம், அக்கா கணவராக பாபா பாஸ்கர், ஜெயபிரகாஷ் ஆகியோரும் தங்கள் நடிப்பில் நிறைவு..

டெக்னீசியன்ஸ்…
தயாரிப்பு : லார்க் ஸ்டுடியோஸ்
இயக்கம் : பிரசாந்த் பாண்டியராஜ்
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு சிறப்பு.. ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் அருமை.. சென்டிமென்ட் காட்சிகளில் பின்னணி இசை உயிரோட்டம் கொடுத்துள்ளது..
வன்முறை, அரிவாள் வெட்டு, போதை கலாச்சாரம் என தமிழ் சினிமா பயணித்துக் கொண்டிருக்கும் பாதையை மீண்டும் குடும்ப செண்டிமெண்ட் ரூட்டுக்கு பல இயக்குனர்கள் அழைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதில் பிரசாந்த் பாண்டியராஜன் இணைந்து இருக்கிறார்.
இன்றைய 90ஸ் கிட்ஸ்.. 2கே கிட்ஸ் மறந்து போன அக்கா – தம்பி உறவு, தாய்மாமன் உறவை உணர்வுப்பூர்வமாக அழகாக சொல்லி இருக்கிறார் டைரக்டர்.. சில காட்சிகளில் செண்டிமெண்ட் ஓவர் டோஸ் கொடுத்திருப்பதை குறைத்து இருக்கலாம் டைரக்டர்..
உறவுகள் செல்போன் காலத்திற்கு மாறினாலும் தாய்மாமன் உறவு (செல்) என்றும் மாறாது என்பதை சூரி உடன் இணைந்து அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் டைரக்டர் பிரசாந்த் பாண்டியராஜ்..
Maaman movie review

