ஜோரா கைய தட்டுங்க விமர்சனம்..

ஜோரா கைய தட்டுங்க விமர்சனம்..

ஜோரா கைய தட்டுங்க விமர்சனம்..

 

ஸ்டோரி…

தன் தந்தையிடமிருந்து மேஜிக் கலையை கற்ற யோகி பாபு மேஜிக் ஷோ நடத்தி வருகிறார்.. இவரது திறமையை பார்க்கும் நாயகி சாந்தி ராவ் இவரை காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் யோகி பாபு மேஜிக் ஷோ நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தைக்கு எதிர்பாராத விதமாய் ஆபத்து ஏற்படுகிறது.

இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.. அதன் பிறகு மேஜிக் ஷோவை தொடர்ந்து செய்தாரா.? அல்லது கைவிட்டாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

மேஜிக் கதையில் ஹாரர் திரில்லரை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை இயக்கியிருந்தாலும் அதில் பெரிய சுவாரசியம் இல்லை..

நடிகர்களின் தேர்வும் திரைக்கதையை மோசமாகிவிட்டது.. யோகி பாபு மற்றும் சாந்தி ராவ் கேரக்டர்கள் மட்டுமே படத்திற்கு பலம்..

அருணகிரி இசை ஓகே ரகம்.. பாடல்கள் ஈர்க்கவில்லை. ஜித்தின் ரோஷனின் பின்னணி இசை சுமார்.

ஒளிப்பதிவில் இந்திய அளவில் பெயரெடுத்த மது அம்பட் ஒளிப்பதிவு செய்திருப்பது பெரும் ஆறுதல்.. படத்தின் காட்சிகள் சிறப்பு..

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் இது போன்ற மேஜிக் ஷோக்கள் படங்கள் வருவதில்லை.. வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் என்று எண்ணி சென்ற ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தையே தருகிறது..

மலையாள இயக்குனரான வினீஷ் மில்லினியம் என்பவர் ‘ஜோரா கைய தட்டுங்க..’ என்ற இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. டைட்டில் மட்டும் தான் கைத்தட்டல் இருக்கிறது..

யோகி பாபுவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது என்பதால் இந்த படத்தை இயக்கிவிட்டாரோ இயக்குனர் என்று நினைக்கத் தோன்றுகிறது. படத்தில் மேஜிக்கும் பெருசாக இல்லை..

 

Jora Kaiya Thattunga movie review