கூரன் விமர்சனம் 3.25/5… டாஸ்மாக் அரசுகளுக்கு நாய்க்கடி..
கூரன் விமர்சனம் 3.25/5… டாஸ்மாக் அரசுகளுக்கு நாய்க்கடி..
நாய் : நீதிக்காக போராடுவதால் ’கூர்மையான அறிவுத்திறன்’ என்பதன் சுருக்கமே ‘கூரன்’
ஸ்டோரி…
குடிபோதையில் ஒருவன் கார் ஓட்டி செல்லும் போது ஒரு குட்டி நாயின் மீது ஏற்றி அதை கொன்று விடுகிறார்.. இதனை எடுத்து அந்த நாயின் அம்மா நீதிக்கேட்டு காவல் நிலையம் செல்கிறது.
அங்கு வழக்கறிஞர் எஸ்ஏ சந்திரசேகரை சந்திக்க வந்த நாய் தன்னுடைய வழக்கை எடுத்து வாதாட சொல்கிறது.. முதலில் நாயை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் SAC பின்னர் ஒவ்வொன்றாக அதன் உணர்வுகளை புரிந்து நாய்க்காக நீதிமன்றத்தில் போராடுகிறார்.
ஒரு நாயின் தாய்மையை புரிந்து கொண்டதா நீதிமன்றம்.? நாய்க்கு நீதி கிடைத்ததா? எல்லா ஜீவராசிகளும் ஒன்றுதான் என்பதை இந்த சட்டமும் நீதியும் உணர்ந்து கொண்டதா.? என்பதெல்லாம் வழக்கமான எஸ்ஏ சந்திரசேகர் பார்முலா..

கேரக்டர்ஸ்…
ஜான்சி மற்றும் பைரவா என்ற இரு வேறு பெயர்களில் இந்த நாய் அழகாக உணர்வை காட்டி இருக்கிறது.. அதன் கண்களில் கூட உணர்வை காண முடிகிறது.. நாய் பிரியர்களுக்கு இந்த வாரம் கூரன் ஸ்பெஷல் தான்..
கதை திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.. சட்டம் நீதிமன்றம் உள்ளிட்ட கதை படங்கள் என்றாலே எஸ்.ஏ.சி.க்கு எப்போதும் கொண்டாட்டம்தான்.. இதை வித்தியாசமாக இன்றைய பாணியில் டாஸ்மாக்கிற்கு எதிராக அவர் வாதாடும் ஒவ்வொரு பாயிண்டும் ரசிக்க வைக்கிறது..
கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையற்ற ஜார்ஜ் மரியன் கேரக்டரை வைத்து அவர் வாதாடும் விதகும் ரசிக்க வைக்கிறது..
இந்திரஜாவின் குண்டம்மா கேரக்டர் பல காட்சிகளில் ஓவர் ஆக்டிங் தவிர்த்து இருக்கலாம்..
நீதிபதியாக ஒய் ஜி மகேந்திரன்.. நாய் வழக்கு என்று அலட்சியம் காட்டாமல் அதுவும் மனிதனைப் போன்ற ஒரு ஜீவராசி தான்.. இந்த பூமியில் எல்லா ஜீவராசிகளும் ஒன்று தான் என்பதை உணர்ந்து அவர் சொல்லும் நீதி மனிதர்களுக்கு ஒரு பாடம்..
நாயின் உணர்வுகளை சொல்ல அதற்கு டப்பிங் ஏதும் கொடுக்காமல் கம்ப்யூட்டரில் பதிவு செய்து அதை சத்யன் சொல்ல சொல்ல உணர்வை வெளிப்படுத்திய விதம் அருமை.. நாயிக்கும் பிளாஷ்பேக் கொடுத்திருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை..
பாலாஜி சக்திவேல், கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் உண்டு..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ்.. இசையமைப்பாளர் சித்தார்த் விபி.. ஆகிய இருவரும் தங்களது உழைப்பை நாய்க்காகவே கொடுத்திருப்பதை காண முடிகிறது..
நிதின் வேமுபதி என்பவர் இயக்கியிருக்கிறார்.. குடிபோதையால் இந்த சமூகம் எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது.. அது மனிதர்களை மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளையும் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துகிறது என்பதை காட்சிகளில் உணர வைத்திருக்கிறார் இயக்குனர்.. டாஸ்மாக் கடைகளில் அரசுக்கு எவ்வளவு பணம் வருகிறது என்பதை மட்டுமே கணக்கில் எடுக்கிறது.. ஆனால் பிணத்தை கணக்கெடுக்கவில்லை என்பதையும் நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்..
இனியாவது இந்த திமுக & அதிமுக அரசுகள் டாஸ்மாக்கை விட்டு ஒழித்தால் அதுவே இந்த நாட்டுக்கும் நமக்கும் பெருமையாகும்..
Kooran movie review

