சுழல் 2 விமர்சனம் – 4/5.. சுழன்று அடிக்கும் க்ரைம் திரில்லர்
சுழல் 2 விமர்சனம் – 4/5.. சுழன்று அடிக்கும் க்ரைம் திரில்லர்
ஸ்டோரி..
தூத்துக்குடி அருகே கடலோரப் பகுதியில் பிரபலமான வழக்கறிஞர் லாலுக்கு சொந்தமான ஒரு காட்டேஜ் இருக்கிறது.. அங்கு நாளை காலை வந்து விடு என கதிரிடம் சொல்லிவிட்டு செல்கிறார் லால்..
அதன்படி சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் கதிரும் அடுத்த நாள் காலை காட்டேஜுக்கு செல்ல அங்கு சுட்டு கொல்லப்பட்டு பிணமாக கிடைக்கிறார் லால்.. மற்றொரு போலீஸ் சரவணனுக்கு போன் செய்து ஸ்பாட்டுக்கு வர வைக்கிறார் கதிர்..
காட்டேஜ் இன் அனைத்து அறைகளும் உள்ளே பூட்டப்பட்டிருப்பதால் லால் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சரவணன் யூகிக்க.. ஆனால் அவர் கையில் துப்பாக்கி இல்லை.. அப்படி என்றால் அவரை சுட்டுக் கொன்றது யார்? என சந்தேகம் வருகிறது.
இந்த சூழ்நிலையில் மற்றொரு அறையில் வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டு உள்ளே கௌரி இருப்பதை அறிகிறார் கதிர்.. அப்படி என்றால் அந்த கதவை பூட்டி சென்றது யார்? என போலீஸ் விசாரணையில் இறங்குகிறது.
இந்த சூழ்நிலையில் ஒரே நேரத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் 7 பெண்கள் நாங்கள்தான் சுட்டுக் கொன்றோம் என்ற சரணடைகின்றனர்.. இதனால் போலீசுக்கு மேலும் குழப்பம் ஏற்படுகிறது.
ஆக மொத்தம் 8 பெண்களும் ஒரே நேரத்தில் லால் சுட்டுக் கொன்றது இவர்கள்தான் என்று முறையிட? காவல்துறை என்ன செய்தது?என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…
Kathir, Aishwarya Rajesh, Lal, Saravanan, Manjima Mohan, Kayal Chandran, Gouri Kishan, Samyuktha Vishwanathan, Monisha Blessy, Shrisha, Abhirami Bose, Nikhila Sankar, Rini, Kalaivani Bhaskar, Chandini Tamilarasan, Ashwini நம்பிர்
எட்டு எபிசோடில் பல கேரக்டர்கள் வந்து சென்றாலும் முக்கியமாக கௌரி சம்யுக்தா உள்ளிட்ட 8 பெண்கள்… லால்.. மஞ்சிமா மோகன்.. சரவணன் மற்றும் சரோஜா ஆகிய கேரக்டர்கள் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்..
பெரும்பாலும் சிறைச்சாலை என்றாலே ஆண்களை மையப்படுத்திய பல திரைப்படங்களை பார்த்திருக்கிறோம்.. இதில் முழுக்க முழுக்க பெண்களின் ஜெயிலே காட்டி இருப்பது சுவாரஸ்யமான ஒன்றாகும்.. ஜெயிலில் குழந்தை பெற்றுக் கொள்ளும் கர்ப்பிணிகள்.. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் கொடுமைகள்.. அவர்களும் ஆண்களைப் போல நடந்து கொள்ளும் விதம் அங்கும் அரசியல் கலவரம் என்று காட்டப்படும் ஆச்சரியங்களும் படத்தின் ஹைலைட்.
சுழல் முதல் சீசனில் வந்த கதிர் ஐஸ்வர்யாவின் கேரக்டர்கள் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.. கதிர் மற்றும் ஐஸ்வர்யா மிகையில்லாத நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..
கலையரசின் கேரக்டரும் அவரது முடிவும் எதிர்பாராத ஒன்று.. லால் நல்லவரா கெட்டவரா? சாந்தினி யார்?என பல திருப்புமுனைகளை கொடுத்து நம்மை யூகிக்க முடியாதபடி இயக்குனர்கள் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…
Directed By : Bramma and Sarjun KM
Music By : Sam C.S
Produced By : Wallwatcher Films – Pushkar and Gayathri
Created by : Pushkar and Gayathri
வழக்கம்போல பின்னணி இசையில் அதிர விட்டிருக்கிறார் சாம்சிஎஸ்.. திருவிழா காட்சிகள்.. எட்டு சிறுமிகள் மஞ்சுமாவுடன் இணைந்த காட்சிகள் என அனைத்தும் அருமை..
ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப் & ஆர்ட் டைரக்டர் இருவரும் வேற லெவல்.. படத்தில் ஹைலைட்டாக காட்டப்படும் குலசை தசரா திருவிழா.. அதில் காட்டப்படும் காளி ஆட்டங்கள் அனைத்தும் அருமை.. அதற்கு போடப்பட்டுள்ள செட்டு அரங்கும் ரசிக்க வைக்கிறது.. ஒரு திருவிழாவை நேரில் பார்த்த உணர்வை ரசிகர்களுக்கு தரும்..
புஷ்கர் மற்றும் காயத்ரி கதை, திரைக்கதைக்கு காட்சிகளை வடிவமைத்து உள்ளனர் பிரம்மா மற்றும் சர்ஜுன்.கே.எம்..
இருவரும் கிட்டத்தட்ட தலா 4 எபிசோடுகளை இயக்கி உள்ளனர்.. இதில் அதிகம் ஸ்கோர் செய்வது பிரம்மா தான் முதல் இரண்டு கதைகளும் அதுபோல கடைசியில் காட்டப்படும் மூன்று எபிசோடுகளும் நம் மனதை விட்டு நீங்க மறுக்கிறது..
அடடடா இத்தனை திருப்புமுனையா இத்தனை ட்விஸ்ட் டா? எதிர்பார்க்கவே இல்லையே.. இப்படி எல்லாம் யூகிக்க முடியுமா என்பது போல காட்சிகளை நகர்த்தி நம்மை எட்டு எபிசோடுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்க்க வைத்து விடுகின்றனர் படக்குழுவினர்.
Suzhal 2 web series review

