பெத்தி விமர்சனம்..; பெத்தி… பெத்தி.. மத்தவங்க எல்லாம் ஒத்தி.. ஒத்தி..!
பெத்தி விமர்சனம்..; பெத்தி… பெத்தி.. மத்தவங்க எல்லாம் ஒத்தி.. ஒத்தி..!
ஸ்டோரி…
1990 காலகட்டங்களில் நடக்கும் கதை.. மலைவாழ் மக்களின் நம்பிக்கையான ஒருவன் பெத்தி.. எந்த வேலையாக இருந்தாலும் எந்த விளையாட்டாக இருந்தாலும் அடித்து தூள் கிளப்புகிறார்..
ஒரு ஆட்டத்தில் ஆட்டநாயகன் பார்த்திருப்போம்.. ஆனால் எந்த ஆட்டமானாலும் இவர்தான் ஆட்டநாயகன்..
ஆனால் இவர்களின் ஊருக்கு அடையாளமும் இல்லை இவர்களுக்கான ஆதாரமும் இல்லை.. இப்படியான சூழ்நிலையில் கூலி வேலை செய்து வருகிறார் நாயகன் ராம்சரண்.. எனவே தனக்கும் தன மக்களுக்குமான அடையாளத்தை தேடி அலைகிறார்..
எதுவும் எவருக்கும் எளிதாக கிடைக்காத இந்திய திருநாட்டில் இவர் தன் வலிமையான விடாமுயற்சியால் எப்படி பெறுகிறார் என்பது தான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
பெத்தி… பெத்தி.. மற்றவர்கள் எல்லாம் ஒத்தி.. ஒத்தி.. என்னுமளவுக்கு ஆல்ரவுண்டராக அட்டகாசம் செய்து இருக்கிறார் ராம்சரண்.. கிரிக்கெட் பிளேயராக.. குஸ்தி வீரனாக.. ஓட்டபந்தய வீரனாக எதற்கும் சளைக்காமல் தன்னை பொருத்திப் பார்த்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார் ராம்சரண்..
மல்யுத்த வீரனாக ஒரே ஆட்டத்தில் இரு பயில்வான் உடன் ராம்சரண் மோதும் போது நம்மால் நம்பாமல் இருக்க முடியாது.. அப்படி கம்பீர தோற்றத்துடன் பட்டைய கிளப்பியிருக்கிறார்.. தன்னால் இனிமேல் நடக்கவே முடியாது என்பதை அறியும் தருணத்தில் ராம்சரணின் உணர்ச்சிமிகு நடிப்பு அவருக்கான விருதை பெற்று தரும் என நம்பலாம்..

அட்டகாசமான ஆட்டம்.. அதிரடியான ஆக்சன் என இரண்டிலும் பல நடிகர்களுக்கு சவால் விட்டுள்ளார் ராம்சரண்.. சபாஷ் ராம் காரு..
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.. கதைக்கு தேவைப்படாமல் சதைக்கு மட்டுமே தேவைப்பட்டிருப்பார் போல.. இரண்டு பாடலுக்கு ஆட்டம் போட்டு கவர்ச்சியாக வந்து செல்கிறார்..
குஸ்தி வாத்தியாராக சிவராஜ்குமார்.. கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் ஒரு வாத்தியாரின் நிதானத்துடன் சிறப்பு..
30 வருடங்களாக தங்கள் ஊரில் ரயிலை நிறுத்தச் சொல்லி சிவப்பு கொடி காட்டும் பெரியவராக ஜெகபதி பாபு.. கண் கலங்க வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
இசை – ஏ ஆர் ரஹ்மான்.. கமர்சியல் படத்திற்கு ஏற்ற இசையை கொடுத்து பின்னணியில் மிரட்டி இருக்கிறார்.. சிக்கிரி பாடலுக்கு இவரது மெட்டு சிக்ஸர் ரகம்.. படத்தின் திரைக்கதை விறுவிறுப்பு குறையும்போதெல்லாம் ரகுமானும் ராம் சரணம் தூக்கி நிறுத்தி இருக்கின்றனர்..
ஒளிப்பதிவாளர் – ஆர்.ரத்னவேலு
1990 காலகட்டங்களை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார்.. இவரது ஒளிப்பதிவுக்கு கலை இயக்குனரின் கைவண்ணமும் மிகப்பெரிய பலம்..
கிரிக்கெட்.. குஸ்தி மைதானம்.. ரன்னிங் ரேஸ் என அனைத்திலும் ஒளிப்பதிவில் மெய்சிலிர்க்க வைக்கிறார் ரத்னவேலு..
படத்தில் நடன இயக்குனர் மற்றும் சண்டை பயிற்சியாளர் இருவரும் படத்தை விறுவிறுப்பாக எடுத்துச் செல்லும் குதிரை எனலாம்.. அப்படியொரு வேகம்.. சபாஷ்..

ஷாம் கௌஷல், மைபம் நபகன்டா & சுப்ரீம் சுந்தர் ஆகியோர் சண்டைக் காட்சிகளை வெறித்தனமாக வடிவமைத்துள்ளனர்… வாயில் டார்ச் லைட் வைத்துக் கொண்டு மோதும் காட்சி.. அதுபோல பிணத்தை தூக்கிக்கொண்டு மோதும் ட்ரெயின் பைக்காட்சி இரண்டும் அதிரடி ரகம்..
இயக்குநர் – புஜ்ஜி பாபு சனா… தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனர் இவர்.. ராம் சரண் ரசிகர்களுக்காகவே படத்தை செதுக்கியிருக்கிறார்.. அதற்கு ஏற்ப அர்ப்பணிப்பு மிக்க நடிகராக திகழ்கிறார் ராம் சரண்.. எந்த ஆட்டமாக இருந்தாலும் அதில் சாம்பியன் நான் என்ற கதை திரைக்கதை புதுசு.. தெலுங்கு சினிமா இந்தியாவில் முன்னோடி என்ற சொல்லும் அளவிற்கு படத்தின் பிரம்மாண்டம் மேக்கிங் வியக்க வைக்கிறது..
என்னதான் இருந்தாலும் படத்தின் மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக்.. இந்தியாவை உலக அரங்கில் அறியச் செய்த ராம்சரண் வரலாற்று பக்கங்கள் எப்படி ஸ்போர்ட்ஸ் கமிட்டியில் இருக்கும் ஒருவருக்கு தெரியாமல் போனது.?? அதுபோல அடையாளமே இல்லாத ஒரு கிராமத்திற்கு ரயில்வே வந்ததும் தெரியாமல் போனது எப்படி சாரே..?

தெலுங்கு நடிகர்களின் அர்ப்பணிப்பை பார்த்து இயக்குனர்களின் மேக்கிங் கை பார்த்து நாம் இந்திய சினிமா ரசிகனாக பெருமை பட்டுக் கொள்ளலாம்..
Ram Charans Peddi movie review

