பிளாஸ்ட் BLAST விமர்சனம்… 4.25/5.. Power House Family

பிளாஸ்ட் BLAST விமர்சனம்… 4.25/5.. Power House Family

 

பிளாஸ்ட் BLAST விமர்சனம்… 4.25/5.. Power House Family

 

 

ஸ்டோரி…

அர்ஜுன் – அபிராமி..இவரது மகள் ப்ரீத்தி முகுந்தன்.. இவர்கள் அனைவரும் கராத்தே பயின்றவர்கள்.. அர்ஜுன் கராத்தே பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.. இவரது தம்பி விவேக் பிரசன்னா ஒரு மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்..

கராத்தே என்பது தற்காப்புக்கு மட்டுமல்ல.. யாருக்காவது அநியாயம் நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும் என தன் மகளை சிங்கப் பெண்ணாக வளர்த்து வருகிறார் அர்ஜுன்..

ஒரு கட்டத்தில் போலீஸ் பிடியில் இருக்கும் வில்லனின் தம்பி (ஜான் கொக்கேன் தம்பி) அங்கிருந்து தப்பித்து வெளியே வருகிறார்.. அவரது காலில் குண்டடி பட்டு இருப்பதால் அதற்கு மருந்து வாங்க மெடிக்கல் ஷாப்புக்கு அடியாளை அனுப்புகிறார்.

அப்போது முதல் வில்லனுக்கும் அர்ஜுன் குடும்பத்திற்கும் மோதல் ஆரம்பம்.. என்ன நடந்தது.? எப்படி இவர்களுக்கு சம்பந்தம்.? என்பதெல்லாம் சுவாரசியமான ஸ்க்ரீன் பிளே..

கேரக்டர்ஸ்…

ஆக்சன் கிங் கம்பேக் என்ற சொல்லலாம்.. சில படங்களில் வில்லனாக வந்த அர்ஜுன் இதில் மீண்டும் மாஸ்காட்டி தான் என்றும் ஆக்சன் கிங் தான் என்பதை நிரூபித்து இருக்கிறார்.. அதிலும் அபிராமி பிரீத்தி இருவருக்கும் ஆக்ஷனை கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்..

அழகான நடிகைகள் ஆக்சன் காட்டினால் ரசிக்காமல் இருக்க முடியுமா.? அழகிலும் ஆக்ஷனிலும் அபிராமி & ப்ரீத்தி அசத்தல்..

தம்பியாக விவேக் பிரசன்னா, வில்லனாக வரும் ஜான் கொக்கேன், அடியாளாக வரும் வினோத் சாகர், போலீசாக வரும் திலீபன் என ஒவ்வொரு கேரக்டருக்கும் பக்கா ஸ்பேஸ் கொடுத்து அனைத்து நடிகர்களையும் அடையாளப்படுத்தி இருக்கிறார்..

அர்ஜுன் சிதம்பரம், பாலா ஹாசன், பவண் என ஒவ்வொரு கேரக்டரரும் சரியான தேர்வு என்று சொல்லும் அளவுக்கு இயக்குனர் வேலை வாங்கி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, பிரதீப் ஈ ராகவ்வின் எடிட்டிங்.. குறை சொல்ல முடியாத பணியை கொடுத்துள்ளனர்..

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தை ஒரு படி மேலே தூக்கி இருக்கிறது… ஆக்‌ஷன் காட்சிகளில் இவரது இசை அர்ஜுன் சொல்லுவது போல தெறிக்க விட்டுள்ளார்..

சண்டைப் பயிற்சியாளர் பீனிக்ஸ் பிரபு… இவரைப் பாராட்டாமல் இந்த விமர்சனத்தை முடிக்க முடியாது.. படம் முழுவதும் பைட்.. ஆனால் எங்கும் போர் அடிக்காமல் பெண்கள் சண்டை போட்டாலும் நம்பும் படியாக கொடுத்திருப்பது இவரின் பணியை பாராட்ட செய்துள்ளது..

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.. இவர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.. முதல் படத்திலேயே எங்கும் சோர்வடையாத ஒரு திரைக்கதையை அதுவும் ஆக்ஷன் கலந்த குடும்பப் படத்தை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது..

குடும்பத்திற்காக எதையும் செய்யும் ஹீரோக்களை (திரிஷ்யம் மோகன்லால் – ஜெயிலர் ரஜினி.) பார்த்திருப்போம்.. ஆனால் குடும்பத்திற்காக நாங்களே நிற்போம் என ஃபுல் ஆக்ஷன் வைத்திருப்பது பவர் ஹவுஸ் ரகம்..

பெரிய பெரிய ரவுடிகளை அடிக்கும் அளவுக்கு லாஜிக் இல்லை என்றாலும் அவர்கள் கராத்தே குடும்பம் என்பதால் அதை நம்மால் மறுக்க முடியவில்லை.. அப்படி ஒரு பவர்ஃபுல் பர்பாமன்ஸை அர்ஜுன் அபிராமி பிரீத்தி விவேக் பிரசன்னா கொடுத்துள்ளனர்..

அர்ஜுன் வில்லனை எப்படி நெருங்குகிறார் அதற்கான விளக்கமான காட்சிகள் இல்லை.. இதுபோல சின்ன லாஜிக்..?!

எங்கும் பிசிறு தட்டாத ஒரு அழகான திரைக்கதையை நம்பும் படியாக எதார்த்தமாக ஆக்சன் கலந்து ஒரு பக்ரீத் பண்டிகைக்கு பக்கா பிளாஸ்ட் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சுபாஷ்..

ஏஜிஎஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அவர்களின் வெற்றி பட வரிசையில் பிளாஸ்ட் நிச்சயமாக இணையும்.. வாழ்த்துக்கள்..

Arjuns Blast movie review