APPA KUTTY விஜய் ஆண்டனி உடன் இணைந்த ‘அயோத்தி’ பட ஹீரோயின்
APPA KUTTY விஜய் ஆண்டனி உடன் இணைந்த ‘அயோத்தி’ பட ஹீரோயின்
சசி இயக்கத்தில் சுவாசிக்கா உடன் விஜய் ஆண்டனி கதையின் நாயகனாக நடித்த ‘நூறு சாமி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது..
தற்போது விஜய் ஆண்டனி அடுத்த பட ‘அப்பா குட்டி’ ரிலீஸ் அப்டேட் கிடைத்துள்ளது
இதில் பிரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்பிரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக்மெயில்’ படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.
இப்படத்துக்கு ராஜீவ் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தந்தை – மகளுக்கு இடையே உள்ள நிபந்தனையற்ற அன்பு, தியாகம் மற்றும் பிணைப்பை மையமாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப் பட்டுள்ளது..

இந்நிலையில் இப்படத்தின் 2-வது தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளனர். “உணர்வுப்பூர்வமான தருணங்கள், அதிரடிக் காட்சிகள் மற்றும் ஆழமான கதைகூறல் என ஒட்டுமொத்த குடும்பத்தினருக்குமான சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் தரும்” என்கிறது படக்குழு..
Vijay Antony in Appa Kutty release update news

