அகத்தியா விமர்சனம் 3.5/5.. தமிழர் பெருமை.. சித்தா சிறப்பு
அகத்தியா விமர்சனம் 3.5/5.. தமிழர் பெருமை.. சித்தா சிறப்பு
ஸ்டோரி…
சினிமா துறையில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறார் ஜீவா.. இவரது காதலி ராஷி கண்ணா.. ஒரு படத்திற்காக பிரம்மாண்ட செட் போடப்பட்ட நிலையில் திடீரென ஷூட்டிங்கை நிறுத்தி விடுகிறார் தயாரிப்பாளர்.. அதில் தன்னுடைய பணிக்காக கிட்டத்தட்ட 30 லட்சத்தை முதலீடு செய்திருக்கும் ஜீவா இதனால் பாதிக்கப்படுகிறார்..
எனவே வேறு வழி இன்றி அதை ஸ்கேரி ஹவுஸ் ஆக மாற்றி மக்களின் பார்வைக்காக வைக்கிறார்.. அதன்படி அங்கே உள்ளே பல அரங்குகளை அமைத்து மக்களிடம் கட்டணம் வசூலித்து சம்பாதித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் காதல் ஜோடி ஒன்று உள்ளே புகுந்து சில்மிஷம் செய்ய திடீரென்று அந்த காதலன் காணாமல் போகிறார்.. இதனால் இந்த பிரச்சனை காவல்துறைக்கு தெரிய வருகிறது.. இப்படியான சூழ்நிலையில் இந்த ஸ்கேரி ஹவுஸ்சை மூட வேண்டும் என அரசு உத்தரவிடுகிறது.
இந்த சூழ்நிலையில் அந்த ஸ்கேரி ஹவுஸில் ஒரு ரகசிய பியானோ அறையில் ஒரு மர்ம பொருள் ஒன்று கிடைக்கவே அதனுள் ஒரு படம் திரையிடப்படுகிறது.. அதன்படி 1940 ஆம் ஆண்டுகளுக்கு கதை நகருகிறது.. அதில் சித்தா டாக்டர் அர்ஜுனின் கதை திரையிடப்படுகிறது எலும்புருக்கி நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதையும் அங்கு உள்ள பிரிட்டிஷ் அரசர் ஒருவர் அர்ஜுனை கொல்வதும் காட்டப்படுகிறது.
இதே போன்ற எலும்புருக்கி நோய் தன் தாய் ரோகிணிக்கு இருப்பதை அறிகிறார் ஜீவா.. அதன்படி 1940 ஆம் ஆண்டு அர்ஜுன் கண்டுபிடித்த அந்த ஃபார்முலாவை தேட முற்படுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.? அந்த பார்முலா அவருக்கு கிடைத்ததா.? எலும்புருக்கி நோய் சிகிச்சையை செய்தாரா? தன் தாயை காப்பாற்றினாரா என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
Jiiva as Aghathiyaa
Raashii Khanna as Veena
Arjun as Siddharthan
Edward Sonnenblick as Edwin Duplex
Matylda as Jacqueline
Yogi Babu as Yogi Babu
அர்ஜுன் மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரின் காட்சிகள் அழகு.. அர்ஜுனின் கெட்டப் இன்றைய கெட்டப்பை நினைவுபடுத்துகிறது.. 1940 இல் இருந்த தோற்றம் போல காட்டியிருக்கலாம்..
ஜீவா ராசி கண்ணா இருவரும் கெமிஸ்ட்ரி விட அர்ஜுன் & ஜாக்குலின் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.
வில்லன் எட்வின் கேரக்டர் மிரட்டல் ரகம்.. இவர் கூடவே வரும் ராதாரவி நடிப்பும் கவனிக்க வைக்கிறது..
யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் இருவரும் கெஸ்ட் ரோலில் நடிகர்களாக வந்து செல்கின்றனர்.. கொஞ்சம் கூட சிரிப்பு வரவில்லை..

டெக்னீசியன்ஸ்…
Production House: Vels Film International and WAMINDIA
Producer : Ishari K. Ganesh, Aneesh Arjun Dev
Writer & Director : Pa.Vijay
Music : Yuvan Shanker Raja
Dop : Dipak Kumar Padhy
Editor : San Lokesh
Art Director : P.Shanmugam
Choreographer : Kalaimaamani Sridhar
DI : iGene
Lyrics : Pa.Vijay
தயாரிப்பு – வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் & வாம் இந்தியா
இயக்கம் – பா விஜய்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.. பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.. பல இடங்களில் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது..
1940 இல் காட்டப்படும் காட்சியில் 1980ல் வந்த என் இனிய பொன் நிலாவே பாடல் தேவையில்லாத ஒன்று.. தன் தந்தை இளையராஜா இசையமைத்த பாடல் என்பதற்காகவே யுவன் இதை பயன்படுத்திக் கொண்டாரா..?
தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.
ஹாரர், ஹிஸ்டாரிக்கல், தமிழர்களின் பெருமையான சித்த மருத்துவம், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தையும் கலக்கி கமர்சியல் விருந்தாக கொடுத்துள்ளார் இயக்குனர் பா விஜய்..
அதிலும் கிளைமாக்ஸ் இல் காட்டப்படும் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்திருக்கிறது.. அனைத்தும் அருமை
1940 காலத்தையும், 2024 காலத்தையும் கனெக்ட் செய்யும் விதமாக சித்த மருத்துவ மகத்துவத்தை கொடுத்து அதில் தமிழர்களின் பெருமையை காட்டி இருக்கிறார் இயக்குனர் பா விஜய்…
கோடிக்கணக்கில் செலவழித்து சிகிச்சை எடுத்தாலும் ஆங்கில மருத்துவத்தை விட தமிழர்களின் கண்டுபிடிப்பான சித்த மருத்துவத்திற்கு என்றுமே பவர் உண்டு என்பதை ஆணித்தரமாக சொல்லி அகத்தியா மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பா விஜய்..
Aghathiyaa movie review

