ஏன் என்னை ஏதோ செய்தாய் விமர்சனம்… மதுவால் மதி கெட்டு மாதுவை இழந்த மனிதன்

ஏன் என்னை ஏதோ செய்தாய் விமர்சனம்… மதுவால் மதி கெட்டு மாதுவை இழந்த மனிதன்

 

ஏன் என்னை ஏதோ செய்தாய் விமர்சனம்… மதுவால் மதி கெட்டு மாதுவை இழந்த மனிதன்

 

ஸ்டோரி…

நாயகன் – அந்தோணி… நாயகி – மதுமிதா..

மதுவும் மாதுவும் இல்லாவிட்டால் நாயகனுக்கு ஒரு நாள் கூட நகராது.. அதன்படி புரோக்கருக்கு போன் செய்து ஒரு பெண் கேட்கிறார்.. அவர் மதுமிதாவை அனுப்பி வைக்க இவர்கள் தினம் தினம் சந்திக்க நெருக்கம் ஏற்படுகிறது.. ஒரு கட்டத்தில் மதுமிதாவை காதலித்து வைத்துக் கொள்ள விரும்புகிறார் அந்தோணி..

ஆனால் இவரின் குடிப்பழக்கத்தை வெறுக்கிறார் மதுமிதா… இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்படவே வார்த்தைகள் முற்றுகிறது.. நீ ஒரு குடிகாரன் என்று இவள் திட்ட.. நீ ஒரு விபச்சாரி என்று அவன் திட்ட இவர்களின் காதல் முறிகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் திரைக்கதை..

கேரக்டர்ஸ்….

D Anthony
Madhumita Das
Jeeva Ravi
Regin Rose
Navya Suji

பஞ்சாப் நாயகி மதுமிதா.. பஞ்சாபி பால்கோவா போல உருக வைக்கிறார்.. விபச்சாரி கேரக்டர் என்றாலும் துளி கூட ஆபாசம் கவர்ச்சி இல்லாமல் கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்..

அந்தோணியின் தந்தையாக ஜீவா ரவி வருகிறார்.. படத்தில் மொத்தமே ஐந்து வார்த்தைகள் பேசி இருப்பார் போல..

ரெஜின் ரோஸ், நவ்யா இருவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

Written, Directed & Edited by: D Anthony
Producer : D Anthony
DOP : Pietro Villani
Music Composer (Songs) : Jaikar Harinath & Ashok Sridharan
Music Composer (RR) : Joey Reda
Lyricist : Karthik Netha, Tamil Mani
Singer : RK Adithya, Sanjana Kalmanje, Deepak Blue & Jaikar Harinath

இயல் இசை என்ற பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.. மற்ற பாடல்கள் கதையுடன் பயணிப்பதால் சிறப்பு…

ஹீரோ – டைரக்டர் – ப்ரோடுயூசர் – எடிட்டர் உள்ளிட்ட பணிகளை நாயகனே செய்து இருக்கிறார்.. எனவே யாரிடமும் எந்த ஐடியாவும் கேட்கவில்லை போல.. ஆரம்பத்தில் தொடங்கி… பேசுகிறார் பேசுகிறார் பேசுகிறார் பேசுகிறார் பேசிக்கொண்டே இருக்கிறார்.. சீரியல் போல காதலர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் அதெல்லாம் சரிதான் ஆனால் ரசிகர்களுக்கும் கொஞ்சம் புரியும் படி செய்திருக்கலாம்…

வார்த்தைகளை முழுவதுமாக உச்சரிக்காமல் விழுங்கி விடுகிறார்.. ஏன் என்னை ஏதோ செய்தாய் என்று அருமையான தலைப்பு தமிழில் வைத்து படத்தை முழுவதும் ஆங்கில பட போல பல வசனங்களை ஆங்கிலத்திலேயே பேசி இருக்கின்றனர்..

லைவ் ரெக்கார்டிங் செய்து இருப்பார்கள் போல.. அது வித்தியாசமான முயற்சி என்றாலும் நமக்கு சோர்வையே தெரிகிறது..

படம் முடிந்துவிட்டது என்று நாம் நினைத்து சீட்டை விட்டு எழுந்திருக்கும் போதும் 20 நிமிடத்திற்கு ஓட்டிக்கொண்டே இருக்கிறார். இவர் தான் எடிட்டர் என்பதால் அதைக் கூட கட்டிங் செய்யவில்லை போல..

விபச்சாரியாக வந்தவளை தன் வீட்டுக்காரியாக மாற்ற முயற்சிக்கும் ஒரு மனிதன் என்ற கருத்தை சொல்ல வருகிறார்.. அதுபோல அவளின் மகளையும் தன் குழந்தையாக பாவிக்கிறார்.. உள்ளிட்ட சில விஷயங்களை மெசேஜ் ஆக கொடுத்து நினைத்து இருக்கிறார் இயக்குனரும் கதாநாயகனும் தயாரிப்பாளருமான அந்தோணி..

 

Yen Ennai Edho Seidhai movie review

—-