4 இடியட்ஸ் விமர்சனம்… கொரோனா லாக்டவுன் கொள்ளை
4 இடியட்ஸ் விமர்சனம்… கொரோனா லாக்டவுன் கொள்ளை
ஸ்டோரி…
கடற்கரையோரம் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதை அறிந்து அதை கொள்ளை அடிக்க 4 நண்பர்கள் திட்டம் போடுகிறார்கள்..
புகழ் – திடியன் – கும்கி அஸ்வின் – இந்திரன் நான்கு நண்பர்கள் பணத்தை கொள்ளை அடிக்க உள்ளே செல்கிறார்கள்.. அப்போது அங்கு இருக்கும் செக்யூரிட்டி ரவி மரியாவிடம் மாட்டிக் கொள்கிறார்கள்..
ஒரு கட்டத்தில் இந்த நால்வரும் ரவி மரியாவும் கூட்டு சதியில் ஈடுபட்டு பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றனர்..
அதன் பிறகு என்ன நடந்தது அந்த பங்களாவின் முதலாளி வின்சென்ட் அசோகன் என்ன செய்தார்.? அவரும் ஒரு திட்டம் போடுகிறார்… அது என்ன என்பதெல்லாம் மீதி திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
புகழ் – திடியன் – கும்கி அஸ்வின் – இந்திரன்.. ஒவ்வொருவரும் கொஞ்சம் காமெடி செய்து ஹீரோயிசம் காட்ட முயற்சித்துள்ளனர்… இதில் புகழ் மற்றும் ரவி மரியாதை இருவரும் கதையின் நாயகர்களாக வருகிறார்கள்..
இது நாள் வரை வில்லன் மற்றும் காமெடி செய்து கொண்டிருந்த இவர்கள் நாயகர்களாக நடிக்கும் போது திரைக்கதையில் கவனம் எடுத்து முயற்சித்தால் மட்டுமே பல உயரங்களை அடைய முடியும்..
திரைக்கதை பலவீனத்தால் வில்லத்தனத்திலும் வின்சென்ட் அசோகன் பெரிய பலம் காட்டவில்லை..
படத்தில் ஆண்கள் மட்டும் இருந்தால் போதுமா ஹீரோயின் வேண்டாமா என்பதற்காக பிரக்யா நயனை பயன்படுத்தி இருப்பார்கள் போல.. அவரும் கொஞ்ச நேரம் வசனம் பேசி பாடலுக்கு ஆட்டம் போடுகிறார்..

டெக்னீசியன்ஸ்…
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கலர்புல்.. ஒரே வீடு பல அறைகள் இருந்தாலும் முடிந்த வரை வித்தியாசமான கோணங்களில் படமாக்கி இருக்கிறார்..
சுபாஷ் மணிரத்னத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய கவனம் பெறவில்லை..
சஜோ சுந்தர் முருகேசன் என்பவர் இயக்கியிருக்கிறார்.. படத்தின் பட்ஜெட் குறையா? அல்லது இதுதான் கதையா.. என்பது போல கொரோனா கால கதை வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்… கொரோனா லாக்டவுன் சமயத்தில் வெளியே செல்ல முடியாமல் திருடர்கள் தவிப்பது போல காட்சிப்படுத்தி ஒரு பங்களாவுக்குள் படத்தை முடித்து இருக்கிறார்கள்..
4 Idiots movie review

