I Am Game விமர்சனம் 4.25/5… வம்பிழுக்கும் (துல்கர்) வலது கை.. மிரட்டும் மிஷ்கின்..
I Am Game விமர்சனம் 4.25/5… வம்பிழுக்கும் (துல்கர்) வலது கை.. மிரட்டும் மிஷ்கின்..
ஸ்டோரி…
பெரிய பணக்காரர் துல்கர் சல்மான்.. பல சூதாட்டங்களில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து விடுகிறார்.. பணத்தை கொடுக்க முடியாமல் கிளப்பில் இருந்து தப்பி ஓடும்போது பெரிய விபத்தில் சிக்கி தன் வலது கையை இழந்து விடுகிறார்.. அவர் சுயநினைவு இல்லாத போது வேறு ஒருவரின் கையை அவருக்கு பொருத்தி வைக்க சம்மதிக்கின்றனர் துல்கர் பெற்றோர் ..
பத்து மாதங்களுக்குப் பிறகு அந்த கை தன் வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறது.. தன் கையை துல்கரால் கண்ட்ரோல் செய்ய முடியாமல் போகிறது..
வில்லன் மிஷ்கினை அந்த கை கொல்லத் திட்டமிடுகிறது.. மிஷ்கின் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறார் துல்கர்..
எனவே அவர் அதை தடுக்க முயற்சிக்கிறார்.. அந்த கை மிஷ்கினை கொல்ல திட்டமிடுவது ஏன்.? அவர்களுக்கு என்ன பிரச்சனை? அந்த பிரச்சனையில் இருந்து துல்கர் தன்னை எப்படி காப்பாற்றிக் கொண்டார்? என்பதெல்லாம் அதிரடியான ஸ்கிரீன் ப்ளே..

கேரக்டர்ஸ்…
துல்கர் சல்மான் – டான் ஜான்
கயாடு லோஹர் – ஈஷா
மிஷ்கின் – டேவிட் ஆபிரகாம்
ஆண்டனி வர்கீஸ் – விக்னேஷ் “விக்கி” தாஸ்
சம்யுக்தா விஸ்வநாதன் – தாரிணி
வினய் ஃபோர்ட் – ஃப்ரெட்டி
கதிர் – ஜேசன் ஆண்டனி

இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் திரை வடிவத்திற்கு முழு ஆற்றலை கொடுத்து துல்கர் சல்மான் அடித்த தூள் கிளப்பி இருக்கிறார்.. இடைவேளை வரை தான் துல்கரின் அட்டகாசம்.. எனவே அதை உணர்ந்து தன்னுடைய கையை மட்டும் நடிக்க வைத்து அதற்கு கை மொழி கொடுத்திருக்கிறார்..
கையை வைத்து கட்டம் கட்டி அடிக்கும் நடிகர்கள் மத்தியில் கையை வைத்து ஒரு தயாரிப்பாளராகவும் கல்லா கட்டுகிறார் துல்கர் சல்மான்…
இடைவேளைக்குப் பிறகு ஆண்டனி வர்கீஸ் மற்றும் வில்லன் மிஷ்கின் இருவரும் செஞ்சுர் அடித்து இருக்கிறார்கள்.. போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் சில இடங்களில் மிஷ்கின் ஓவர் ஆக்டிங் போல தென்பட்டாலும் தமிழில் இப்படி ஒரு படத்தை அவர் செய்ததில்லை என்று சொல்லலாம்..

கிரிக்கெட் பிளேயராக கதிர்.. கிளைமாக்ஸ் காட்சியில் செஞ்சி அடித்து கதிரும் கலக்கியிருக்கிறார்..
ஆண்டனி வர்கீஸ் ஜோடியாக சம்யுக்தா.. துல்கர்க்கு ஜோடியாக கயாடு லோகர்.. சென்டிமென்ட்க்கு சம்யுக்தா.. அழகான எனர்ஜிக்கு கயாடு லோகர்.. இருவரும் நடிப்பில் நல்ல பங்களிப்பை கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…
இயக்கம்: நஹாஸ் ஹிதாயத்
தயாரிப்பு: துல்கர் சல்மான் & ஜோம் வர்கீஸ்
கதை: நஹாஸ் ஹிதாயத்
திரைக்கதை: சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர்
ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
படத்தொகுப்பு: சாமன் சாக்கோ
இசை & பின்னணி இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஆடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா
நடன அமைப்பு: சாண்டி
ஜேக்ஸ் பிஜாய் பின்னனி இசையில் மிரட்டி இருக்கிறார்.. பாடல்களும் பக்கா.. துல்கர் சல்மான் பாடியுள்ள லூசர் பாடலும் அதிரடி ..
நடனங்களை சாண்டி அமைத்திருக்கிறார்.. பாடல் காட்சிகள் பிரம்மாண்டமான அழகை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித்…
ஒருவர் உடலுக்குள் மற்றவரின் ஆவி சென்று நிறைவேறாத ஆசையை அவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும்… இது போன்ற பல கதைகளை பல வருடங்களாக உலக சினிமாவில் பார்த்து வருகிறோம்.. ஆனால் இதில் ஒரு வித்தியாசம் வெறும் கை மட்டும் தான் வேறு ஒருவருடையது.. (அதாவது கை தான் பேய்.) ஆனால் எந்த சூழ்நிலையிலும் ஒரு பேய் படம் போல அல்லாமல் கமர்சியல் விருந்தாக பிரம்மாண்டமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத்..

ஒரு கை மட்டும் நம் பேச்சைக் கேட்காமல் தனியாக முடிவெடுத்து செயல்பட்டால் நம் நிலைமை என்ன.? அதுவும் வேற ஒருவரை பழிவாங்க திட்டமிட்டு அந்த பழி நம் மீது வந்தால் என்னவாகும்… இப்படி ஒரு வித்தியாசமான கற்பனையில் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்..
I Am Game movie review

