Immortal விமர்சனம் 3.75/5… சாகாவரம் பெற்ற ஜந்துவின் சாகசம்
Immortal விமர்சனம் 3.75/5… சாகாவரம் பெற்ற ஜந்துவின் சாகசம்
ஸ்டோரி…
ஹவுஸ் ஓனர் வீட்டை காலி செய்ய கெடு விதித்ததால் அவசரமாக வீடு தேடி அலைகிறார் ஜிவி பிரகாஷ்… அப்போது தன் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் ஷேர் செய்து கொள்ள அழைப்பு விடுக்கிறார் கையாடு லோகர்..
அவரது அழகில் மயங்கும் ஜீவி பிரகாஷ் அடுத்த நொடிய யோசிக்காமல் அவரது வீட்டில் தங்குகிறார்..
நாட்கள் செல்ல செல்ல ஜிவி பிரகாஷ் நினைப்பதையே முன்கூட்டியே செய்கிறார் கையாடு லோகர்… ஒரு கட்டத்தில் அவரது கட்டுப்பாட்டுக்குள் இவர் வந்து விடுகிறார்..
அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறார்.. அங்கே பல நூறு வீடுகள் இருந்தாலும் எந்த வீட்டிலும் யாரையும் காண முடியாமல் குழப்பம் அடைகிறார் ஜிவி பிரகாஷ்..
அப்படி என்ன நடந்தது.? கையாடு லோகர் யார்.? அவருக்கும் இவருக்குமான பிரச்சனை என்ன என்பதெல்லாம் கற்பனை செய்ய முடியாத மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
முதல் பாதிரி ரொமlமான்ஸ்.. இரண்டாம் பாதி ஆக்சன் என ஜிவி பிரகாஷ் வெரைட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. பேபி என்ற ரொமான்ஸாக அழைக்கும் போது பேபி என்று பயந்து அழைக்கும் போது என இரு நடிப்பை கொடுத்திருக்கிறார்..
ஜிவி பிரகாஷ் மற்றும் கையாடு லோஹர் ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி வேற லெவல்.. இளசு முதல் பெருசு வரை மனங்களை கசக்கி பிழிகிறார் கையாடு.. கண்களில் ஒரு போதை.. உதட்டில் ஒரு போதை உடையில் ஒரு போதை.. உடலில் ஒரு போதை என வெரைட்டி காட்டி இருக்கிறார் கையாடு லோஹர்..
இடைவேளைக்குப் பிறகு பெரிய ட்விஸ்ட் கொடுத்து கையாடு நம் இதயங்களை கனமாக்கி விடுகிறார்..
நண்பராக வரும் ஆதித்யா கதிர் கிடைத்த கேப்பில் எல்லாம் காமெடியை திணித்து ரசிக்க வைக்கிறார்.. மாமாவாக வரும் மாறனும் கிடைத்த கேப்பில் ரசிக்க வைக்கிறார்..
கையாடு வீட்டில் சிக்கிக்கொண்ட தாத்தா கேரக்டர் கார்த்தி இதுவரை செய்யாத கேரக்டரை செய்து இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
ஒத்தையில நானு.. ஒத்த மரம் காடு.. பாடல் வரிகளும் படமாக்கப்பட்ட விதமும் அழகோ அழகு..
தேசிய விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கதாநாயகன்.. எனவே அவரது இசை அனுபவத்திற்கு ஏற்ப நாம் இசை கொடுக்க வேண்டும் என சாம் சி எஸ் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.. பாடல் காட்சியிலும் சரி பின்னணி இசையிலும் சரி மிரட்டி இருக்கிறார்..
இன்டர்வல் வரை ரொமான்ஸ் ஆக நகரும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு அதிரடியாக மான்ஸ்டர் கதைகளத்தில் செல்கிறது.. தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு ஜந்துவை வைத்து மிரட்டி இருக்கிறார் இயக்குனர் மாரியப்பன் சின்னா..
இதற்காக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மிகுந்த பொருட்செலவை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் அருண்குமார்… ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த கற்பனை கதையுடன் படத்தை நகர்த்தி இருக்கின்றனர்..
பெரும்பாலான காட்சிகள் அப்பார்ட்மெண்டில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.. அதை பல கோணங்களில் பிடித்து பிரம்மாண்ட கலர்ஃபுல் ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் அருண்.. இவர்தான் அர்ஜுன் அபிராமி நடித்த பிளாஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதும் கூடுதல் தகவல்..
வித்தியாசமான படங்களுக்கு தானே முன் வந்து விநியோகம் செய்பவர் சக்திவேலன்.. இம்மார்ட்டல் படத்தால் இம்ப்ரஸ் ஆன் சக்திவேலன் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது..
Immortal movie review

