Bethlehem Kudumba Unit விமர்சனம்

Bethlehem Kudumba Unit விமர்சனம்

 

Bethlehem Kudumba Unit விமர்சனம்

 

ஸ்டோரி…

கேரளாவில் உள்ள சர்ச்சுகளில் வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு பெயர் உண்டு.. அதில் ஒரு பிரிவினருக்கு தான் இந்த Bethlehem Kudumba Unit என்ற பெயர்..

நிவின் பாலி வசிக்கும் வீட்டு அருகே அடுத்த வீட்டில் வசிக்கிறார் காலேஜ் கேர்ள் மமிதாபைஜூ.. நிவின் பாலியல் நற்குணங்களை கண்டு அவர் மீது காதல் கொள்கிறார்.. ஆனால் அவருக்கும் இவருக்கும் 14 வயது வித்தியாசம்.. இதனால் கல்லூரி பெண் மீது காதல் கொள்ள தயக்கம் காட்டுகிறார் நிவின்..

ஒரு கட்டத்தில் மமிதாவின் காதலுக்கு அவரது குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க அவர் என்ன செய்தார் என்பதெல்லாம் சுவாரசியமான ஜாலியான திரைக்கதை…

 

கேரக்டர்ஸ்…

நிவின் பாலி – ஜஸ்டின்
மமிதா பைஜு – ஆஷ்லி
சங்கீத் பிரதாப் – ஜோயல்
பிந்து பணிக்கர் – குஞ்சான்டி
சுரேஷ் கிருஷ்ணா – பைஜு S
வினய் ஃபோர்ட் – அலெக்ஸ்

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் யதார்த்த இளைஞனாக பிரகாசிக்கிறார் நீவின்பாலி.. 35 வயதான தன்னை ஒரு கல்லூரி இளம் பெண் காதலிப்பதை நினைத்தும் அவர் மகிழும் காட்சிகளில் வெட்கம் கூட அழகு.. தன் தம்பி காதலை கண்டித்து விட்டு இவர் காதலில் விழும் காட்சிகள்… அண்ணன் தம்பியின் பாச சண்டைக் காட்சிகள் ரசிக்கும் ரகம்…

விஜய்யுடன் ஜனநாயகன்… சூர்யாவுடன் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்… என கலக்கிய மமீதாவுக்கு இந்த படம் ஹாட்ரிக் வெற்றி.. அதிக வயது வித்தியாசம் சூர்யாவை காதலித்த மமீதாவுக்கு இதிலும் கிட்டத்தட்ட அந்த வேடம்தான்.. ஆனால் இரண்டிலும் அழகான வேறுபாட்டை கொடுத்திருக்கிறார்.. வழக்கம்போல க்யூட்டான நடிப்பின் மூலம் நம்மை மயக்கி விடுகிறார் மமீதா பைஜு..

நிவின் பாலி என் தம்பியாக வரும் சங்கீத் பிரதாப் துள்ளலான நடிப்பு.. இவர் ஏற்கனவே பிரேமலு படத்தில் கலக்கி இருந்தார்.. ஷார்ட் ஃபிலிம்ஸ் எடுத்துக் கொண்டு அந்த ஹீரோயினை காதலிக்கும் இவரது கேரக்டரும் வேற லெவல் ரகம்..

நிவின் பாலி நண்பர்கள்… மமீதாவின் அங்கிள் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் சிரிப்புக்கு கேரண்டி.. மமீதாவை ஒருதலையாக காதலிப்பவர் காமெடிக்கு கேரண்டி கொடுத்துள்ளார்..

ஸ்ரிந்தா – ரேஷ்மா
ஷமீர் கான் – பிரிண்டோ
மீனாட்சி ரவீந்திரன் – ரியா
அயசங்கர் கரிமுட்டம் – தங்கச்சாஜ்
தங்கம் மோகன் – ரோசிலி
வெட்டுக்கிளி பிரகாஷ் – டேவிஸ்

டெக்னீசியன்ஸ்…

இயக்கம் – கிரிஷ் AD
தயாரிப்பாளர்கள் – திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில், ஷ்யாம் புஷ்கரன்
இசை – விஷ்ணு விஜய்
எழுத்தாளர்கள் – கிரிஷ் AD, கிரண் ஜோசி
ஒளிப்பதிவு – அஜ்மல் சாபு
படத்தொகுப்பு – ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்
கலை இயக்கம் – ஆஷிக் எஸ்
ஆடை வடிவமைப்பு – தன்யா பாலகிருஷ்ணன்
ஒலி வடிவமைப்பு – சங்கரன் ஏ.எஸ்., கே.சி. சித்தார்தன்
பாடல் வரிகள் – சுஹைல் கோயா, விநாயக் சசிகுமார்
சண்டைக் காட்சிகள் – சந்தோஷ்
தயாரிப்பு நிர்வாகி – ஜம்ஷீர் புரக்காட்டிரி
VFX – எக் வைட் VFX
நிர்வாக தயாரிப்பாளர்கள் – பென்னி கட்டப்பனா, ஜோஸ் விஜய்
PRO – யுவராஜ்

விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் சிறப்பு… முக்கியமாக பின்னணி இசை காமெடி காட்சிகளுக்கும் கூட வெகுவாக கை கொடுத்துள்ளது..

அஜ்மல் சாபு என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. வீட்டின் ஜன்னல் வழியே பேசும் ரொமான்டிக் காட்சிகள்… சர்ச் காட்சிகள்… கல்லூரி கலை நிகழ்ச்சி கலாட்டாக்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்..

தென்னிந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆன பிரேமலு படத்தை இயக்கிய கிரிஷ் இந்த Bethlehem Kudumba Unit படத்தை இயக்கியிருக்கிறார்.. எந்த ஒரு கவர்ச்சி ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் அனைவரும் வசிக்கும் வகையில் இந்த குடும்ப படத்தை கொடுத்திருக்கிறார்..

இப்போதெல்லாம் அங்கிள் மீது காலேஜ் கேர்ள்ஸ் (க்ரஷ் கொள்வதை) சுவாரசியமாக கொடுத்திருக்கிறார் கிரிஷ்..

மலையாளத்தில் ஓணம் பண்டிகைக்கு வந்து சூப்பர் ஹிட்டான படம் தமிழில் இப்போது வெளிவந்துள்ளது… ஆனாலும் தமிழ் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தன்னுடைய ஒவ்வொரு வசனங்கள் மூலம் பரவசப்படுத்தி இருக்கிறார் ஆர் பி பாலா.. இவர் மோகன்லாலின் புலிமுருகன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதி தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்தப் படத்தை பிரபல நடிகர் பகத் பாசில் தன் நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்..

 

Bethlehem Kudumba Unit movie review