7 ஸ்டார் பாய்ஸ் விமர்சனம் 3.75/5… கால்பந்து ஆட்டத்தில் கலக்கல் பாய்ஸ்
7 ஸ்டார் பாய்ஸ் விமர்சனம் 3.75/5… கால்பந்து ஆட்டத்தில் கலக்கல் பாய்ஸ்
ஸ்டோரி…
ஆத்தங்கரை என்ற பகுதியில் வசிக்கும் ஏழு சிறுவர்கள் கால்பந்து ஆட மைதானம் தேடி அலைகின்றனர்.. ஃபுட்பால் பற்றிய அறிவும் திறமையும் இருந்தாலும் இவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை
எந்த அணியிலும் இடம் இல்லை என்பதால் இவர்களே செவன் ஸ்டார் ஆத்தங்கரை ஒரு குழுவை உருவாக்கி போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புகின்றனர்..
இந்த சூழ்நிலையில் நாயகன் ஆன்டனி வர்கீஸ் இவர்களின் ஆர்வத்தை பார்த்து உலக ஃபுட்பால் ஜாம்பவான் விஜயனிடம் அறிமுகம் செய்கிறார்..
அவரும் இந்த ஏழு பேருக்கும் பயிற்சி கொடுக்க அவர்கள் களம் இறங்கி வெற்றி பெற்றார்களா என்பது தான் படத்தின் GOAL
கேரக்டர்ஸ்…
ஆண்டனி வர்க்கீஸ் – இஸ்மாயில் (Ismail)
• ஐ. எம். விஜயன் – ஐ. எம். விஜயன் (I M Vijayan)
• ஜுமானா அப்து ரஹ்மான் – ரஹீனா (Raheena)
• லுக்மான் அவரான் – முனீர் (Munir)
• பாலு வர்க்கீஸ் – தீபக் (Dhepak)
• தனிஷ் பி.கே – உமர் (Umar)
• அமல் – குஞ்சு (Kunju)
• பாசித் – பர்ஹான் (Barhan)
உமர் என்ற கேரக்டரில் நடித்துள்ள தனிஷ் என்ற பையனை நீங்கள் பார்த்தால் நிச்சயம் உம்மா கொடுக்காமல் வர மாட்டீர்கள்.. அப்படி ஒரு அழகுடன் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறான் சுட்டி பையன்..
குஞ்சு என்ற கேரக்டரி நடித்துள்ள கிரிக்கெட் அணி கேப்டன் அமலும் நடிப்பில் அமர்க்களம் செய்திருக்கிறான்..
கால்பந்து பயிற்சியாளராக உலக கால்பந்து ஜாம்பவான் விஜயன் நடித்திருக்கிறார்.. இவரை பல தமிழ் படங்களில் வில்லனாக பார்த்திருப்பீர்கள்..
RDX காட்டாளன் என்ற பல படங்களில் நடிப்பில் மிரட்டிய ஆண்டனி வர்கீஸ்.. இதில் சிறுவர்களுக்கு கை கொடுக்கும் அண்ணனாக களம் இறக்கி இருக்கிறார்.. கூடவே இவருக்கு இஸ்லாமிய காதலையும் ஜுமானா கை கொடுத்துள்ளார்…
டெக்னீசியன்ஸ்…
இசை: ஜேக்கஸ் பிஜய்
ஒளிப்பதிவு: பாய்ஸ் சித்திக்
புட்பால் காட்சிகளில் நாமே மைதானத்தில் இறங்கி விளையாட வேண்டும் என்ற உணர்வை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. அதற்கு ஏற்ப வர்ணனையாளரும் தன் பங்குக்கு கேம் எனர்ஜி கொடுத்திருக்கிறார்..
தயாரிப்பு: டி அசோக்
இயக்கம்: நிகில் பிரேம் ராஜ்
பிஆர்ஓ : வேலு
மலையாளத்தில் உருவான படம் என்றாலும் தமிழுக்கு ஏற்றவாறு திருநெல்வேலி மொழியை கலந்து தமிழுக்கு சுவாரஸ்யம் கூட்டி இருக்கின்றனர்.. பெரும்பாலும் காட்சிகளும் தமிழ் சினிமாவை ஒத்து இருப்பதால் தமிழர்களுக்கு பிடிக்கும்.. அத்துடன் இஸ்லாமியர்கள் பற்றி திரையில் சொல்லப்படாத வாழ்வியலையும் இதற்கு கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்..
காதல் படங்கள்… போதை கலாச்சாரம் வன்முறை சம்பவங்கள்.. ஃபேமிலி சென்டிமென்ட் என பல படங்கள் வந்தாலும் இப்போதெல்லாம் குழந்தைகளுக்கான படங்கள் வருவதே இல்லை.. இதனால் குழந்தைகளும் தியேட்டர் பக்கம் வருவதில்லை.. குழந்தைகள் இல்லாமல் பெரியோர்களும் வருவதில்லை..
ஆனால் இந்த படம் தியேட்டருக்கு குழந்தைகளை அழைத்து வரச் செய்யும் ஒரு புதிய அரிய முயற்சி ஆகும்..
தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கிரிக்கெட் கலாச்சாரம் பெருகிவிட்ட சூழ்நிலையில் கால்பந்து கலாச்சாரத்திற்கு இந்த படம் ஒரு ஆணிவேராக அமையும்..
பெரும்பாலும் கேரள மாநிலம் தவிர தென்னிந்தியாவில் கிரிக்கெட் தான் பிரபலம்.. கேரளாவில் எப்போதும் ஃபுட்பாலுக்கு என்று பெரிய மவுசு வண்டு அதனை பயன்படுத்தி இந்த கதைகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் நிகில் பிரேம் ராஜ்..
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கால்பந்து என்பதால் அதில் சுட்டித்தனமும் கலந்திருப்பதா இந்த கால்பந்து கலகலப்புக்கு உத்தரவாதம்…
7 Star Boys movie review

