ஒன்ஸ் மோர் விமர்சனம்… அதிதியின் அதீத காதல் கதை
ஒன்ஸ் மோர் விமர்சனம்… அதிதியின் அதீத காதல் கதை
ஸ்டோரி..
காதல் தோல்வியில் இருப்பதால் நாயகன் யாரிடமும் பேசாமல் சீரியஸ் ஆகவே காணப்படுகிறார் அர்ஜுன் தாஸ்.. அப்போது என்ட்ரி கொடுக்கிறார் அவரது காலேஜ் ஜூனியர் அதிதி சங்கர்.. பார்த்த அந்த நிமிடமே நான் உன்னை காதலித்தேன் நீ தான் கண்டுகொள்ளவில்லை.. இப்போதும் உன்னை காதலிக்கிறேன்.. திருமணம் செய்து கொள்ள சம்மதமா.? என்று கேட்கிறார்..
ஏற்கனவே லவ் பிரேக்கப்பில் இருப்பதால் முதலில் ஓகே சொல்ல மறுக்கும் அர்ஜுன் தாஸ் அதிதியின் அதீத காதலால் ஓகே சொல்கிறார்.. பெற்றோர்களின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடக்கிறது..
அப்போது அர்ஜுனின் முன்னாள் காதலி சோனாவின் அழைப்பு வருகிறது.. சந்திக்க வேண்டும் என்கிறார்.. அதன் பிறகு அர்ஜுன் நிலை என்ன.? தனக்கு பிடித்தவரை மணந்து கொண்டாரா.? தன்னை விரும்பும் பெண்ணை மணந்து கொண்டாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
அர்ஜுன் தாஸ் — ரகுவரன்
அதிதி சங்கர் — அஞ்சலி
சோனா ஒலிக்கல் — இந்திரா வாசுதேவன்
இடைவேளை முன்பு வரை சீரிஸ்.. இடைவேளைக்குப் பிறகு ஜாலி கேரக்டரில் வருகிறார் அர்ஜுன் தாஸ் ஆனால் சீரியஸ் கேரக்டர் தான் இவருக்கு பர்பெக்ட்.. .. ஜாலி கேரக்டரில் இன்னும் எனர்ஜி தேவை.. அட்லீஸ்ட் காலேஜ் பையன் லுக்குக்கு கொஞ்சம் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி தாடியை ட்ரீம் செய்திருக்கலாம்..
சோனாவுடன் காதல் திடீரென வருகிறது… திடீரென முடிகிறது அதற்கான போதுமான அழுத்தமான காட்சிகள் இல்லை..
அர்ஜுனை துரத்தி துரத்தி பேசி காதலிக்கிறார் அதிதி… அவரது இளமைத்துள்ளான நடிப்பு ரசிகர்களை கவரும்.. க்யூட் எக்ஸ்பிரஷன் கொடுத்து அதிதி ரசிக்க வைக்கிறார்..
சோனா ஒலிக்கல்.. மற்றொரு ஹீரோயின்.. மலையாள பெண் போல காண்பிக்கப்பட்டாலும் ஒரு வார்த்தை கூட மலையாளம் இல்லை.. கண்களாலும் கவிதை பேசி கவர்ந்து இருக்கிறார்..

டிராவிட் செல்வம் — இப்ராஹிம்
அனுஷா பிரபு — சாரா
ஜகபர் — கீகீ
சித்ரா லட்சுமணன் — பாடக லிங்கம்
தேவதர்ஷினி சேதன் — தெரபிஸ்ட் லாவண்யா
ஜென்சன் திவாகர் — ஃபாதர் எட்வின்
தயாளன் — ரகுவின் தந்தை
மகேஸ்வர் — அஞ்சலியின் தந்தை
ரமா ராஜேந்திரா — ரகுவின் தாய்
லட்சுமி சரவணன் — அஞ்சலியின் தாய்
அபிரா பிரவீன் — இளம் இந்திரா
பல படங்களில் காமெடியில் கலக்கிய ஜென்சன் திவாகர் இந்த படத்தில் சர்ச் பாதிரியார்.. அவரது தோற்றத்திற்கும் இந்த கேரக்டருக்கும் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை.. பரிதாபங்கள் டிராவிட் கேரக்டர் முற்றிலும் வீணடிக்கப்பட்டுள்ளது..
டெக்னீசியன்ஸ்…
எழுதி இயக்கியவர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்
தயாரிப்பாளர் : யுவராஜ் கணேசன்
தயாரிப்பு நிறுவனம்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
DOP: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டர்: நாஷ்
கலை : ராஜ் கமல்
பாடல் வரிகள்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்
ஒலி வடிவமைப்பு: ரஞ்சித் வேணுகோபால், எம்.சரவண குமார்
ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்
நடன இயக்குனர்: அப்சர்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: A .பாலமுருகன்
தயாரிப்பு நிர்வாகி: R. நாகராஜன்
தயாரிப்பு மேலாளர்: D பிரசாந்த், D பார்த்திபன்
விளம்பர வடிவமைப்புகள் : கௌதம் j
ஸ்டில்ஸ் : மணியன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஹரிஷ் துரைராஜ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் எம்.பி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
DOP: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டர்: நாஷ்
படத்தின் மிகப்பெரிய பலம் இசை..
இதயம் சொன்னால் கேக்காதா..?
இவளை நெஞ்சம் ஏற்காதா.?
வா படபட எந்தன் கண்ணம்மா..
தா தடதட உந்தன் நெஞ்சம்மா…
அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தாலும் இந்த இரண்டு பாடல்கள் காதலர்களின் ஃபேவரைட் ஆக அமையும்..
நீண்ட நாள்களுக்கு பிறகு வார்த்தைகள் புரியும் படி ஓர் இதமான இசை.. கவிதை வரிகள்.. பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டுக்கள்..
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல் அழகு..
எழுதி இயக்கியவர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்… கிட்டத்தட்ட முக்கோண காதல் கதையை சொல்லி இருக்கிறார்.. முன்னாள் காதலியா இந்நாள் காதலியா என அர்ஜுன் குழம்புவதைப் போலவே திரைக்கதையும் கொஞ்சம் குழப்பியிருக்கிறார்..
யாரை மணக்க போகிறார் என்று திருப்புமுனை ஏற்படுத்துவதற்காக காட்சிகளை தேவையில்லாமல் பேசிப் பேசியே நீட்டி இருக்கிறார்.
அர்ஜுனுக்கு காந்த குரல் கம்பீரக் குரல்.. ஆனால் அவர் வாய்க்குள்ளே பல வசனங்களை பேசுவதால் நிறைய வசனங்களை புரிந்து கொள்ள முடியவில்லை… அதை கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாமே சார்…
Once more movie review

