TOXIC டாக்ஸிக் விமர்சனம்.. யப்பா யாஷ் முடியலப்பா.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது..
TOXIC டாக்ஸிக் விமர்சனம்.. யப்பா யாஷ் முடியலப்பா.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது..
ஸ்டோரி…
சுதந்திர இந்தியா காலத்தில் 1947ஆம் ஆண்டு கதை தொடங்குகிறது.. நாயகன் யாஷ்.. இவரது அக்கா நயன்தாரா.. அந்தப் பகுதியில் மிகப் பெரிய டான் இவர்கள்..
அங்குள்ள மற்றொரு டானின் மகளை திருமணம் செய்ய விரும்புகிறார் யாஷ்.. ஆனால் அங்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி பெண் கியாரா அத்வானியை காதலிக்கிறார.. அவரிடம் காமம் கொள்கிறார் உடல் உறவு கொள்கிறார்..
இதனால் இரண்டு டான்களுக்கும் பிரச்சனை மோதல் வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் திரைக்கதையா என்ன? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்..

டாக்சிக் அலசல்.. சாரி சாரி டார்ச்சர் அலசல்..
ஒரு மாஃபியா கதையாகத் தொடங்கி, அக்கா – தம்பி பாச பயணத்தில் கொஞ்ச நேரம் பயணிக்கிறது கதை.. அதன் பின்னர் ஒரு காதலுடன் காம கதை உருவாகி அதில் கொஞ்ச நேரம் தொடர்கிறது.. அடுத்ததாக அடுத்த பெண் அடுத்த காதல் அடுத்த காமம் என்று கொஞ்ச நேரம் கதை நீடிக்கிறது..
இதனிடையில் அடிக்கடி துப்பாக்கி சண்டை கத்தி சண்டை ரத்தம் சொட்ட சொட்ட தெறிக்கும் தோட்டாக்கள்.. நான் ராணி நீ ஒரு சாணி என்ற சம்பந்தமே இல்லாத வசனங்கள்.. இப்படியாக செல்லும் கதையில் திடீரென தந்தை – மகன் பழிவாங்கும் கதையாக மாறுகிறது..
கடைசியாக ஒரு சைக்காலஜிகல் திரில்லர் ஆக இருக்குமோ என்று நாமே நினைக்கும் வகையில் திரைக்கதை பயணிக்கிறது..
தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீது.. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற படத்தில் இவரை நீங்கள் பார்த்து இருக்கலாம்.. அதன் பின்னர் வளர்ந்து தமிழில் நலன் தமயந்தி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.. தற்போது இவர் இந்த பிரம்மாண்ட படத்தை இயக்கி இருக்கிறார்..
பெரும்பாலும் இது போன்ற பிரம்மாண்ட படங்களை ஆண் இயக்குனர்களே இயக்கியிருப்பார்கள்.. அந்த வகையில் ஒரு பெண் இயக்குனர் இயக்கியிருப்பதால் அவருக்கு பாராட்டுக்கள் கொடுக்கலாம்..

ஆனால் கேஜிஎப் படத்தை பார்த்து அதன் பாகத்தை தான் இயக்குகிறார் என்று நினைத்து விட்டாரா என்னவோ அதே பாணியில் படத்தை நகர்த்தி இருக்கிறார்..
ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் கூட மெனக்கடல் இல்லை.. என்ன நடக்கிறது யார் எதற்காக பழிவாங்கல் என்னென்ன பிரச்சனை என்று எதுவுமே சரியாக சொல்லப்படவில்லை..
பெரும்பாலும் நாயகன் தவறு செய்தால் அது நியாயப்படுத்த முயற்சிப்பார்கள்.. ஆனால் தப்பு செய்தால் அவன் தண்டனைக்கு உள்ள ஆவான்.. அவனுக்கும் கர்மா இருக்கும் என்பது போலவே காட்சிப்படுத்தி இருக்கிறார் என்று நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது..
கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யாஷுடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..
யாஷ். தந்தை ராயா மற்றும் மகன் ரூமி என்ற கேரக்டர்களில் வருகிறார்..
ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைத்திருக்கிறார்.. பிரம்மாண்ட இசையில் பில்டப் கொடுத்திருக்கிறார்.. மாஸ் காட்சிகளுக்கு பொருந்தினாலும் படம் முழுவதும் ஓவர் பில்டப் எரிச்சலை உண்டாக்குகிறது..
முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.. பெரும் பொருட்செலவில் எந்த குறையும் இல்லை.. கிட்டத்தட்ட ₹ 500 கோடிக்கு படம் தயாரிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் பிரம்மாண்டம்..

நான் ராணி மாதிரி வாழ்றேன், நீ சாணி மாதிரி வாழ்ற”.. யோவ் என்னய்யா வசனம் இது..
“யாரோட ரூட் மேப்ல இருக்கியோ, அவங்களோட ரூட்டை சந்தேகப்படாதே; இல்லன்னா ரூட்டோட ”.. இந்த வசனங்களை என்ன நினைத்து எழுதினாரோ ஒருவேளை காமெடி டைம் பார்த்து இருப்பாரோ..
பாகுபலி என்ற படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபாஸ்.. பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து விட்டதால் அவர்களுக்கு பில்டப்பும் அதிகமாகிவிட்டது.. அதனால் அவரது அடுத்தடுத்த படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது..
ஆனால் அவர் தேர்ந்தெடுத்த நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை படு தோல்வியை தழுவியது.. பிரம்மாண்டத்தை மட்டுமே நடிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் கூட கவனம் செலுத்தவில்லை என்பதையே இந்தப் படமும் காட்டுகிறது..
பிரபாஸ் வரிசையில் இப்போது யாஷ் இணைந்திருக்கிறார்.. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து அடுத்த படத்தில் கவனம் செலுத்த வேண்டுகிறோம்..
கிளைமாக்ஸ் காட்சியில் அந்நியன் போல ஒரு வித்தியாசமான சைக்காலஜிக்கல் முயற்சியை சொல்ல நினைத்திருக்கிறார் கீது.. மூன்று மணி நேரத்திற்கு பிறகு இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை சொல்ல நினைத்து என்ன பயன்.. ஏற்கனவே படத்தை விட்டு பாதி ரசிகர்கள் ஓடி இருப்பார்கள் அல்லவா கீது.??
Yash in Toxic movie review
—

