Hi ஹாய் விமர்சனம்.. அறிமுகம் இல்லாத நல்இதயங்களின் Hi பயணம்

Hi ஹாய் விமர்சனம்.. அறிமுகம் இல்லாத நல்இதயங்களின் Hi பயணம்

 

Hi ஹாய் விமர்சனம்.. அறிமுகம் இல்லாத நல்இதயங்களின் Hi பயணம்

 

ஸ்டோரி…

ஹீரோ – கவின்..; ஹீரோயின் – நயன்தாரா

காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது ஹீரோவின் எண்ணம்.. இதனால் 30 வயதை கடந்த போதும் இவருக்கு திருமணம் ஆகவில்லை.. காதலும் கைகூடவில்லை. எனவே பெற்றோர் பாக்யராஜ் – ராதிகா இருவரும் கவினுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர்.. இதனால் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி விடுகிறார் கவின்.

இதே போல பொள்ளாச்சியில் வசிக்கும் நயன்தாரா தனக்குப் பிடிக்காத கட்டாய திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மறுத்து அவரும் சென்னைக்கு ஓடிவந்து விடுகிறார்..

வேற என்ன அடுத்தது.? சென்னையில் இருவரும் சந்திக்கின்றனர்.. ஹாய் சொல்லிக் கொள்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நயன்தாரா – தேவயானி
கவின் – மயில்சாமி

ஹீரோ கவினை விட வயதில் மூத்தவர் நயன்தாரா.. ஆனால் பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை.. இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி.. கொஞ்சம் காதல்.. நிறைய பிரண்ட்ஷிப்…

நயன்தாராவை காதலிக்க தூண்டி பொய் சொல்லி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி கேரக்டரில் கலக்கி இருக்கிறார் கவின்.. 30 வயதாகியும் திருமணமாகாத இளைஞர்களின் உணர்வை அழகாக பிரதிபலிக்கிறார் கவின்..

கிராமத்து அப்பாவி பெண் போல அறிமுகமானாலும் அதிரடியாக அரிவாள் எடுத்து சிங்க பெண்ணாக ஜொலிக்கிறார் நயன்தாரா.. ஓடிப்போன அன்னையால் தாய் அன்பு கிடைக்காத பெண்… பொறுப்பில்லாத குடிகார தந்தை.. என ஒரு மகளின் வலியை அழகாக கடத்தியிருக்கிறார் நயன்தாரா..

ராதிகா – பரிமளா
பாக்யராஜ்.கே – வாத்தியார்
பிரபு – இந்திரன்

பாக்யராஜ் – ராதிகா மற்றும் பிரபு – சுகாசினி ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் சிறப்பு.. கிளைமாக்ஸ் காட்சி வந்து செல்கிறார் சுகமாக சுகாசினி..

அம்ருதா சீனிவாசன் – லக்ஸ்
Vtv கணேஷ் – மருத்துவர்.சண்முகி
ஃபெப்சி விஜயன் – பரிசுதம்
ரெஞ்சி பணிக்கர் – தாசன்
சத்யன் – யோகேந்திரன்
ஆதித்ய கதிர் – கணபதி
குரேஷி – கோபி
காவியா அறிவுமணி – மைதிலி
மிர்ச்சி கெமி – தன்யா

ஆகியோரும் உண்டு..

இதில் கவின் உடன் வரும் ஆதித்யா கதிர் கணபதி காமெடியில் கலக்கி இருக்கிறார்.. சத்யன் & குரேஷி ஆகியோரின் காமெடியும் எடுபட்டுள்ளது..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவு இயக்குனர்: ராஜேஷ் சுக்லா
எடிட்டர்: பிலோமின் ராஜ்
இசையமைப்பாளர்: ஜென் மார்ட்டின்

ஜென்மார்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம்.. இறைச்சல் இல்லாமல் இதமான இசையுடன் பயணிக்கிறது.. எடிட்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் சிறப்பு..

கலை இயக்குனர்: கண்ணன்.எஸ்
நடன இயக்குனர்: பிருந்தா, தினேஷ், காவ்யா.ஜி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

எழுதி இயக்கியவர்: விஷ்ணு எடவன்
தயாரிப்பு: எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் உமேஷ் குமார்

விஷ்ணு எடவன் என்பவர் இயக்கி இருக்கிறார்.. இவர் கேரளா எல்லைப் பகுதி கோவையில் இருப்பதால் மலையாள மனம் மணக்க படத்தை தொடங்கி இருக்கிறார்..

மகன் / மகளுக்கு அவர்கள் விருப்பம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்து வைத்துவிட்டால் தங்களின் கடமையை முடிந்தது என நினைக்கும் பெற்றோருக்கு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன்..

திருமணம் ஆகாத இளைஞர்களின் வலியை உணர்வுப்பூர்வமாக கவின் மூலம் கடத்தி இருக்கிறார்.. அதுபோல பொறுப்பில்லாத பெற்றோர்களால் பாதிக்கப்படும் ஒரு மகளின் வலியை நயன்தாரா கேரக்டர் மூலம் உணர வைக்கிறார்..

ஆக குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு சென்று ஹாய் சொல்லி படம் பார்க்கலாம்..

 

Kavin Nayanthara in Hi movie review