Jailer 2 Super Show – நெல்சனுக்கே தெரியாம ‘ஜெயிலர் 2’ லீட்..; வித்யா கூட முழு படம்.. ரம்யா தப்பா நினைக்காத… மிஸ்ஸிங் தமன்னா… – ரஜினி

Jailer 2 Super Show – நெல்சனுக்கே தெரியாம ‘ஜெயிலர் 2’ லீட்..; வித்யா கூட முழு படம்.. ரம்யா தப்பா நினைக்காத… மிஸ்ஸிங் தமன்னா… – ரஜினி

 

Jailer 2 Super Show – நெல்சனுக்கே தெரியாம ‘ஜெயிலர் 2’ லீட்..; வித்யா கூட முழு படம்.. ரம்யா தப்பா நினைக்காத… மிஸ்ஸிங் தமன்னா… – ரஜினி

 

 

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர் 2’. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

மேலும் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.. இந்தப் படத்திற்கு பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா எதுவும் நடைபெறவில்லை..

ஆனால் படக்குழுவினர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் விழா ஏற்பாடு செய்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்..

அதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது.. இந்த சூப்பர் ஷோ நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசும்போது..

“இது வழக்கமான ஆடியோ லான்ச் போல் அல்லாமல் பிரம்மாண்ட மேடையில் வைக்காமல் ஒரு சூப்பர் ஷோவாக நடத்த வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் விரும்பியது.. என் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தம் தான்.. ஆனால் அடுத்த நிகழ்வுகளில் இது சரியாகும் என நினைக்கிறேன்..

பொதுவாக எனக்கு ஒரு ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் விருப்பமில்லை.. பாட்ஷா பார்ட் 2 ஆர். எம் வீரப்பன் அதற்காக ஒரு திரைக்கதையை அமைத்திருந்தார்.. பாட்ஷா உயிரோடு இருப்பதை தெரிந்து கொண்ட ஒரு பக்கம் போலீஸ்காரர்களும் மறுபக்கம் கேங்ஸ்டர்களும் அவரை அழிக்க நினைப்பார்கள்.. பக்கா ஸ்க்ரீன் ப்ளே அமைத்திருந்தார். ஆனாலும் நான் மறுத்து விட்டேன்..

அதுபோல கார்த்திக் சுப்புராஜ் ‘பேட்ட’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க நினைத்தார்.. நான் தந்திரம் செய்து விஜய் சேதுபதியை ஏமாற்றுவதாக படத்தில் கிளைமாக்ஸ் காட்சி இருக்கும் விஜய் சேதுபதியை வைத்து அந்த கேரக்டரை பெரிதாக செய்திருந்தார்.. அதற்கும் நான் ஓகே சொல்லவில்லை..

www.rightnewsraja.com

ஜெய்லர் படத்தை மீண்டும் நான் ஓடிடி-யில் பார்த்த போது சில விஷயங்கள் எனக்குத் தோன்றியது. நெல்சன் அவருக்கே தெரியாமல் சில காட்சிகளில் இரண்டாம் பாகத்திற்கான லீடு வைத்திருந்தார்…

வர்மன் கேரக்டர் அவருக்கு பின்னால் ஒரு பெரிய கேங் இருப்பதாக காட்சிகளில் சொல்வார்.. அதுமட்டுமில்லாமல் ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருள்கள் ஜெயிலர் வசம் உள்ளது.. எனவே அதனை தேடி ஒரு குரூப் வரும் இப்படியாக அடுத்த பாகத்திற்கான கதை அதில் ரெடியாக இருந்தது…

மேலும் என் 75 வயதுக்கு ஏற்ற கேரக்டராகவும் ஜெய்லர் கேரக்டர் அமைந்திருந்தது…

www.rightnewsraja.com

75 வயதில் ஹீரோ கேரக்டர் பண்ணுவது சிரமம்.. அதற்கு ஏற்ற டைரக்டர் தயாரிப்பு நிறுவனம் எல்லாம் அமைய வேண்டும்.. அது அமையாத காரணத்தினால் தான் பெரிய நட்சத்திரங்கள் கூட இது போன்ற படங்களில் நடிப்பதில்லை..

ஒரு நாள் நெல்சனை அழைத்து ஜெயிலர் 2 பற்றி பேசுவதற்காக அழைத்தேன்.. அவருக்கு ஹிந்தி & தெலுங்கு மொழி படங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.. ஒரு பெரிய ஹீரோ படத்தையும் அவர் இயக்க வேண்டும் என ஒரு தயாரிப்பு நிறுவனம் அணுகியது… ஆனால் அவர் புத்திசாலி.. இப்போது ஒரு பெரிய அப்பார்ட்மெண்டில் 18வது மாடியில் ஒரு அழகான வீடு வாங்கி இருக்கிறார்.. எனக்கே அது பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது..

சிகரெட் தண்ணி அடிக்கும் பழக்கங்கள் அவரிடம் கிடையாது… அவர் பெரிதாக செலவு செய்ய மாட்டார் ஷாப்பிங் போனால் கூட வெறுமனே பார்த்துக் கொண்டு மட்டும் வருவார்..

நான் அவரிடம் ஜெயிலர் 2 கரு சொன்ன போது அவர் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.. வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.. ஆனால் சில மாதங்கள் கழித்து நெல்சன் மீண்டும் வந்து அவகாசம் வேண்டுமென்றார்.

நானும் அதற்கு பிறகு சில படங்களில் நடித்து பிசியாக இருந்தேன்.. வேட்டையன் லால் சலாம் கூலி ஆகிய படங்களை முடித்துவிட்டு வருவதற்குள் நெல்சன் கதையை ரெடியாக வைத்திருந்தார்.. அதன் பிறகு அது அழகாக உருவாக்கியுள்ளார் நான் இன்னும் ஜெயிலர் 2 படத்தை பார்க்கவில்லை..

www.rightnewsraja.com

நான் கவுண்டமணியுடன் நடிக்கும் போது என்னால் சிரிக்க சிரிப்பை அடக்க முடியாது.. இந்த படத்திலும் ஒரு பெரிய நடிகர் அப்படி ஒரு கேரக்டர் அமைந்துள்ளது..

வர்மன் (விநாயகன்) கேரக்டருக்கு இணையாக சுராஜ் செய்துள்ளார்.. வித்யா மிகவும் திறமையான நடிகை.. அவருடன் முழு படம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.. ரம்யா நீங்க தப்பா நினைக்க கூடாது..

எஸ் ஜே சூர்யா ஒரு நடிப்பு அரக்கன்.. அவர் நடிக்கும் போது நாங்கள் எல்லாம் நின்று பார்த்துக் கொண்டிருப்போம்.. நெல்சன் உடனே ஓகே சொல்ல மாட்டார்… அப்படியே அவர் ஓகே சொன்னாலும் சூர்யா ஒன் மோர் கேட்டு அவர் அடித்துக் கொண்டிருப்பார்.. எனக்கு 75 வயசு ஆச்சு ஆனாலும் என்ன உட்கார சொல்ல மாட்டார்..

www.rightnewsraja.com

ஜெயிலர் முதல் பாகத்தில் யோகி பாபுவுக்கு சின்ன கேரக்டர்.. ஆனா இந்த படத்தில் நீண்ட நேரம் வருவார்..

ரம்யா கிருஷ்ணன் சொல்லவே வேண்டாம்… அவர் வரவர இன்னும் அழகாகிக் கொண்டே இருக்கிறார்..

மிதுன் சக்கரவர்த்தி வில்லனாக நடிக்கிறார்.. அவர் முதலில் நான் ரஜினியிடம் அடி வாங்க மாட்டேன்.. ரஜினி என் நண்பர்.. அவருக்கு நான் வில்லனா என்றார்.. பின்பு ஒருநாள் நாங்கள் ஒரு நிகழ்ச்சி சந்திக்கும்போது இது பற்றி பேசினேன்.. அதன் பிறகு அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்..

காவால போல தமன்னா பாட்டு ஒன்று வேண்டும் என்றேன்.. உங்களுக்கு பிடிச்சிருக்கு என்பதற்காக பாட்டு வைக்க முடியாது என்றார் நெல்சன்… எனக்கு பிடித்ததற்காக நான் கேட்கவில்லை.. ரசிகர்களுக்காக நான் கேட்கிறேன்… ரசிகர்களுக்கு பிடித்ததை செய்து கொண்டிருப்பதால் தான் நான் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறேன்..

75 வயசு ஆச்சு. இன்னும் ஹீரோவா நடிக்கிறீங்களான்னு பல பேரு கேக்குறாங்க.. என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் அன்பும் ஆதரவு தான் என்னை இன்றும் ஹீரோவாக நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.. அதற்கு நான் என்ன நன்றி கடன் செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை, உங்கள் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன்.. ஜெயிலர் படம் நன்றாக வந்துள்ளது… நானும் உங்களை போல பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்..”

இவ்வாறு பல பல விஷயங்களை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்..

www.rightnewsraja.com

( எப்படி எளிமையாக இருக்கிறீர்கள் என நெல்சன் ரஜினி இடம் கேள்வி கேட்டபோது… நான் ரஜினி சூப்பர் ஸ்டார் என்பதை எண்ணவில்லை…நான் இப்போதும் ஒரு கண்டக்டர் ஆகவே என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. அந்த காக்கி உடை பார்க்கும்போது என்னில் ஒரு ஈர்ப்பு வரும்.. அதனால்தான் இன்னும் கண்டக்டர் என்பது போல பெரிய மனிதர்களிடம் அடக்கமாக நடந்து கொள்கிறேன்..

www.rightnewsraja.com

எப்படி ஒரு விஷயத்தை 50 வருடங்களாக போர் அடிக்காமல் செய்து கொண்டிருக்கிறீர்கள் என நெல்சன் ரஜினி இடம் கேட்டார்… நமக்கு பிடித்த விஷயத்தை செய்தால் அது போர் அடிக்காது… அது ஒரு வேலையாக நினைக்க கூடாது.. ” என்று ரஜினிகாந்த் சொன்னார்)

 

Jailer 2 Super Show Rajini shares super experience

 

 

—-

 

Related articles