‘ஹைக்கூ’ ஹீரோ ஏகனுக்கு நான் பிடி மாஸ்டர்..; ஈகோ-வை உடைக்கும் காதல்… – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

‘ஹைக்கூ’ ஹீரோ ஏகனுக்கு நான் பிடி மாஸ்டர்..; ஈகோ-வை உடைக்கும் காதல்… – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

 

‘ஹைக்கூ’ ஹீரோ ஏகனுக்கு நான் பிடி மாஸ்டர்..; ஈகோ-வை உடைக்கும் காதல்… – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

 

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘ஹைக்கூ’.

இதில் தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி, மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் நாயகிகளாக நடித்துள்ளனர்.

அதிர்ச்சி அருண், மைம் கோபி, இந்துமதி, ஜென்சன், இஸ்மத்தா பானு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்ய சித்துக்குமார் இசை அமைத்துள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 23-ல் ரிலீஸ் ஆகிறது..

ஹைக்கூ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 10ஆம் தேதி இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது..

இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசும்போது…

“நான் இங்கே வந்தபோது என்னை கமலா தியேட்டர் விஷ்ணு வரவேற்றார்… இங்கு தளபதி விஜய் அவர்களின் பல படங்கள் 100 நாட்கள் ஓடியது.. லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னபோது மகிழ்ச்சி ஏற்பட்டது..

தற்போது இதே கமலா திரையரங்கில் எனது தம்பி ஏகன் ‘ஹைக்கூ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது..

தயாரிப்பாளர் அருள் அவர்களின் மகன் அவர்.. பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்கள்… அதுபோல ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையானவர் ஏகன்.. நாங்கள் எல்லாம் கலா காணும் காலங்கள் சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த போது அதில் நான் பிடி மாஸ்டர்.. ஏகன் உள்ளிட்டோர் மாணவர் கேரக்டரில் நடித்தனர்..

இன்று ஹைக்கூ படத்தின் இசை நாயகன் சித்து.. பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது..

ஹைக்கூ ஓரிரு வரிகளில் ஒரு மிகப்பெரிய தத்துவத்தை சொல்லும் கவிதையாகும்.. எனக்கு இப்போது ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது… “இஸ்திரி போடும் தொழிலாளி வயிற்றில் சுருக்கங்கள்.. என்ற ஹைக்கூ நினைவுக்கு வருகிறது..

பெற்றோர்களின் அன்பு என்பது ஒரு நன்றி கடன் போல.. நண்பர்களின் நட்பு என்பது பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் வருவது..

ஆனால் ஆண் பெண் நட்பு – காதல் என்பது எல்லோ ஈகோவையும் உடைக்கும் அதே சமயம் ஈகோவையும் வளர்க்கும் ஒரு இடமாகும்… இந்த உணர்வுகளை சொல்லும் படமாக ஹைக்கூ வளர்ந்துள்ளது.

படத்தை நான் பார்த்துவிட்டேன் அனைவருக்கும் பிடிக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்..” என்று பேசினார் அமைச்சர் ராஜமோகன்.

 

TN minister Rajmohan praises Aegan and Haiku movie team