நாங்க கேட்காமலே ஒரு கோடி கொடுத்தவர் நெப்போலியன்…; ‘அமெரிக்க ஆவி’ பட விழாவில் நாசர் புகழாரம்

நாங்க கேட்காமலே ஒரு கோடி கொடுத்தவர் நெப்போலியன்…; ‘அமெரிக்க ஆவி’ பட விழாவில் நாசர் புகழாரம்

 

நாங்க கேட்காமலே ஒரு கோடி கொடுத்தவர் நெப்போலியன்…; ‘அமெரிக்க ஆவி’ பட விழாவில் நாசர் புகழாரம்

 

 

நடிகர் சங்க துணை தலைவராக இருந்தபோது நெப்போலியன் பட்ட சிரமங்களை மறக்க முடியாது… அமெரிக்க ஆவி விழாவில் தயாரிப்பாளர் டி சிவா பேச்சு

 

நடிகர் – அரசியல்வாதி – அமெரிக்க தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர் நெப்போலியன்.. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வந்தாலும் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுக்கிறார்..

‘அமெரிக்க ஆவி’ என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..

இந்த விழாவில் நெப்போலியனின் திரையுல நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.. ஆர் கே செல்வமணி, ரோஜா, நடிகர் நாசர், பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்..

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கத்தில் உருவாகியுள்ளது அமெரிக்க ஆவி திரைப்படம்..

முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையோடு இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் பாடல்களை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான டாக்கா ஹாசி மற்றும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி அதனைப் பெற்றுக் கொண்டார்.

‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்ய ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார்..

நடிகர் நெப்போலியன் பேசுகையில்…

இதில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா என 250-க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

பாரத விலாஸ் படத்தில் சிவாஜி கணேசன் அவர்களுடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அந்த படத்தில் நடித்திருந்தார்கள்..

ஆனால் இந்த அமெரிக்க ஆவி படத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்..

இந்தப் படத்தில் நடித்தவர்கள் சாதாரண வேலையில் இருப்பவர்கள் அல்ல.. அவர்கள் அனைவரும் ஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள்.. விஞ்ஞானிகள் சயின்டிஸ்ட்டுகள், டாக்டர்கள் என அனைவரும் நடித்துள்ளனர்.. அவர்கள் வேலைகளுக்கு ஏற்ப ஷூட்டிங் நடத்தப்பட்டது..” என்று பேசினார் நெப்போலியன்..

அவரைத் தொடர்ந்து நடிகர் நாசர் பேசும்போது…

“எனக்கும் நெப்போலியன் 30 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு இருந்து வருகிறது.. என் குடும்பத்தில் என் மகனுக்கு ஒரு பிரச்சனை இருந்தபோது எனக்கு ஆறுதலாக இருந்தவர் நெப்போலியன்..

நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் நாங்கள் நெப்போலியனிடம் எந்த உதவியும் கேட்கவில்லை.. கேட்காமலே எங்களுக்கு ஒரு கோடி கொடுத்தார்..” என்றார்..

அதனைத் தொடர்ந்து நடிகை ரோஜா பேசும் போது.. வி சேகர் இயக்கிய வீட்டோடு மாப்பிள்ளை என்ற படத்தில் நானும் நெப்போலினும் இணைந்து நடித்திருந்தோம்.. நான் இப்போது சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறேன்.. அதுபோல நெப்போலினும் மீண்டும் நடிக்க வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி..

அவர் ஒரு நல்ல நடிகர்.. நல்ல அரசியல்வாதி… நல்ல பிசினஸ்மேன் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர்… ஒரு நல்ல தந்தை அந்த இடத்தை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது..

நாங்கள் அமெரிக்காவில் அவர் வீட்டிற்கு சென்ற போது அவர் மட்டும் இல்லாமல் அவரது குடும்பத்தினரும் அவர் மனைவி அவரது மகன் அனைவரும் எங்களை அன்பாக பார்த்துக் கொண்டனர்.. வாழ்க்கையில் மறக்க முடியாது..

எனக்கும் என் மகளுக்கும் பேய் படங்கள் பார்ப்பது என்றாலே கொஞ்சம் பயம் தான் ஆனாலும் அதில் ஒரு அடுத்தது என்ன நடக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு ஒரு திரில்லர் அனுபவம் இருக்கும்.. நாங்கள் லைட்டை ஆன் செய்துவிட்டு பேய் படங்களை பார்த்துக் கொண்டிருப்போம்.. இந்தப் படமும் ஒரு பேய் படம் தான்.. இதனைப் பார்க்க காத்திருக்கிறோம்..” என்றார்..

ஆர்கே செல்வமணி பேசும் போது..

“இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்… இவர்கள் இவர்களை பார்த்தால் புது முகங்களைப் போல தெரியவில்லை..

அனைவரும் அனுபவமிக்க நடிகர்கள் போல நடித்துள்ளனர்.. இதில் நடித்தவர்கள் பெரும்பாலான டாக்டர்கள் ஐடி நிறுவன வல்லுநர்கள் இன்ஜினியர்கள் என பலரும் நடித்துள்ளனர்.. நான் படத்தை பார்த்து விட்டேன்.. நடன காட்சி சிறப்பாக இருந்தது.. இந்த படத்தைக்காக உழைத்த தான் டான்ஸ் மாஸ்டர் கலா ஸ்லிம் ஆகிவிட்டார் போல..

சில நேரங்களில் டாக்டர்கள் அவர்கள் டூட்டியை முடித்துவிட்டு இரவு ஆறு மணிக்கு மேல் வருவார்கள்.. அப்போதும் ஷூட்டிங் நடத்த ரெடியாக இருப்பார்கள்..

ஒளிப்பதிவாளர் பிரபு அவர்களுக்கு எந்த உதவியாளரும் இல்லாமல் தன்னந்தனியாக அவரை எல்லா வேலைகளும் செய்தார்.. படத்தின் ஒளிப்பதிவு நன்றாக வந்துள்ளது..”

என்று பட குழுவினரை வாழ்த்தி பேசினார் ஆர்கே செல்வமணி..

 

Roja Selvamani Nasser praises Napoleon and America Aavi movie team