கிட்டி விமர்சனம் 3.75/5.. கிளைமாக்ஸ்க்கு பிறகு படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டும்

கிட்டி விமர்சனம் 3.75/5.. கிளைமாக்ஸ்க்கு பிறகு படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டும்

 

கிட்டி விமர்சனம் 3.75/5.. கிளைமாக்ஸ்க்கு பிறகு படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டும்

 

டெல்டா மாவட்டங்களில் வயல்வெளிகளில் எலிகளை பிடிக்க பயன்படுத்தப்படும் பொறி கிட்டி என்று அழைக்கப்படும்… போலீஸ் வைத்த பொறியில் குற்றவாளி சிக்கினாரா? என்பதுதான் இந்த கிட்டி-க்கான அர்த்தம்..

ஸ்டோரி…

ஒரு கல்லூரி மாணவியும் (நிஷா) மற்றும் ஒரு ரவுடியும் ஒருவரால் கொலை செய்யப்படுகிறார.. இது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் யுகன்.. 2 கொலைகளையும் நான்தான் செய்தேன் என்று ஆஜர் ஆகிறார் நாயகன் அசோக்..

ஏன் கொலை செய்தாய் என்று விசாரணையில்.. அவள் என்னை காதலித்து ஏமாற்றி விட்டாள்.. அவளின் தந்தை ரவுடி மூலம் மிரட்டினார் எனவே அவர்கள் இருவரையும் கொலை செய்ததாக சொல்கிறார்..

அப்போது இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசுக்கு கிடைக்கிறது.. நிஷாவை அசோக் காதலிக்கவில்லை என்பது தெரிந்து கொள்கிறார்.. மேலும் இவருக்கும் கொலைகளுக்கும் சம்பந்தமில்லை என தெரிந்து கொள்கிறார்.

அப்படி என்றால் அசோக் குற்றவாளியாக ஆஜராக என்ன காரணம்.? அந்தக் கொலைகளை செய்தது யார்? என்பது எல்லாம் யூகிக்க முடியாத திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

நாயகன் அசோக் இந்த படத்தின் மூலம் AKB என்று தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.. மூன்று ஜோடிகளுடன் ஆட்டம் பாட்டம் என ரொமான்ஸ் செய்து அசத்தியிருக்கிறார் அசோக்..

குற்றத்தை கெத்தாக ஒப்புக்கொண்டு இவர் காவல் நிலையத்தில் என்ட்ரி கொடுக்கும் போது அசோக் மீது அவரின் நடிப்பின் மீது ஆர்வம் தொற்றிக் கொள்கிறது..

ஹிந்தி பேசும் சேட்டு பெண்ணாக நிஷா .. ஆட்டத்திலும் ஆடையிலும் அழகிலும் நடிப்பிலும் மனதில் நிலவாக நிறைந்து விடுகிறார் நிஷா..

மற்றொரு ஹீரோயின் சங்கவி.. சின்ன சின்ன முக பாவனைகளிலும் நடிப்பிலும் கவர்கிறார்..

போலீஸ் அதிகாரி யுகன்.. அடுக்கடுக்கான விசாரணை அடுத்த நடவடிக்கை என்ன ஒவ்வொரு காட்சியிலும் அதிரடி காட்டி இருக்கிறார்..

இவர்களுடன் சிமு அத்வானி, மருத்துவராக இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் மற்றும் நீதிபதியாக ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பொருத்தம்..

டெக்னீசியன்ஸ்…

வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவு.. படத்தின் கதை ஓட்டத்திற்கு நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது..

காதர் இசையமைப்பில் பாடல்கள் அருமை.. தமிழும் இந்தியும் கலந்த பாட்டுக்கு அசோக் நிஷா போடும் ஆட்டம் நம்மையும் ஆட வைக்கும்.. பின்னணி இசை ஓகே..

இடைவெளி வரை கதை குழப்பம் தொடர்கிறது.. ஆனால் இடைவேளைக்கு பிறகு ஒவ்வொரு காட்சிகளையும் சரியாக எடிட்டிங் செய்து ரசிக்கத்தக்க வகையில் கொடுத்திருப்பது எடிட்டரின் கைவண்ணம்..

கார்த்திக் பாண்டியனின் படத்தொகுப்பு பலம்.. ஓ.. இந்த காட்சி இதற்காக வைத்தார் அந்த காட்சி அதற்காக வந்ததா என ஒவ்வொரு காட்சிகளையும் நம்மை Recall செய்ய வைக்கிறார் .

செய்யாத குற்றத்தை ஏன் அசோக் ஒப்புக்கொண்டார் என்பதெல்லாம் இடைவேளை வரை புரியாமல் இருக்கும்.. ஆனால் இடைவேளைக்கு பிறகு ஒவ்வொரு முடிச்சுகளை தவிர்த்து திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறார் இயக்குனர்..

ஒரு சைக்கோ திரில்லர் கதையாக நகர்த்தி அதில் மருத்துவத்தை சொல்லி பழிவாங்கல் கதையை சொல்லி என வித்தியாசமான பல திருப்பங்களை அமைத்திருக்கிறார் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ்..

 

கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் தெளிவான விளக்கம் கொடுத்திருந்தால் சாமானிய ரசிகனுக்கும்  புரியும்..

முக்கியமாக ஒருவன் கொலை செய்து விட்டு அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிக்கும் யுக்திகளை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்..

படத்தின் பட்ஜெட் காரணமாக சில காட்சிகளை தரம் குறைவாக இருந்தாலும் தரமான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் நெடுமாறன்..

 

Ashok Nisha in Kitti movie review