ஆகாயத்தில் ஒரு தாரகை விமர்சனம் 4.5/5

ஆகாயத்தில் ஒரு தாரகை விமர்சனம் 4.5/5

 

 

 

ஆகாயத்தில் ஒரு தாரகை விமர்சனம் 4.5/5

 

ஸ்டோரி…

துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவான படம் ‘ஆகாசம் லோ ஒக தாரா’. இப்படம் தமிழில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ என்கிற பெயரில் வந்துள்ளது..

சாலை வசதி பஸ் வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் மாணவி நாயகி (கல்பனா) சாத்வீகா வீரவள்ளி.. ஒரு சூழ்நிலையில் இவருக்கு ஆஸ்ட்ரோநாட் (விண்வெளி வீராங்கனை) ஆக வேண்டும் ஆசை வருகிறது..

ஆனால் இவரின் இலட்சியத்தை மதிக்காத பெற்றோர் 16 வயதில் இவருக்கு திருமணமும் செய்து வைக்கின்றனர்.. இவரின் வயது என்ன என்பது கூட தெரியாமல் துல்கர் திருமணம் செய்து கொள்கிறார்.. முதலிரவு அன்று தன்னுடைய லட்சியத்தை சொல்கிறார் சாத்வீகா..

அதன் பின்னர் துல்கர் என்ன செய்தார்? அவரின் விண்வெளி ஆசையை நிறைவேற்றினாரா அல்லது வழக்கம் போல மனைவியை தேன்நிலவுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினாரா.? என்ன நடந்தது என்பதெல்லாம் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

சமீபத்தில் துல்கர் நடித்த ஐயம் கேம் என்ற படம் வெளியானது.. அதில் வித்தியாசமான நடிப்பில் மிரட்டி இருந்தார்.. இதில் ஒரு மனைவி இலட்சியத்திற்காக போராடும் கணவன் கிருஷ்ணா கேரக்டரில் நம்மை ஒட்டுமொத்தமாக கவர்ந்து விட்டார்..

ஆக்சன் பைட் என எதுவும் இல்லாமல் இதுதான் ஹீரோயிசம் என வாழ்ந்திருக்கிறார் துல்கர் சல்மான்… இப்படி ஒரு கணவன் கிடைக்க மாட்டாரா என பெண்கள் ஏங்கும் வகையில் துல்கர் கேரக்டர் அமைந்துள்ளது..

கல்பனா என்ற கேரக்டர் மூலம் அறிமுகமாகி இருக்கிறார் சாத்விகா வீரவள்ளி.. சிவாஜிக்கு பராசக்தி… கார்த்திக்கு பருத்திவீரன் என்பது போல முதல் படத்திலேயே நடிப்பில் செஞ்சூரி அடித்திருக்கிறார் சாத்விகா.. இளம் வயதில் திருமணம்… விண்வெளி இலட்சியம் என யதார்த்த நடிப்பை கொடுத்து நம்மை பல காட்சிகளில் அழ வைக்கிறார் சாத்விகா.. சாதிக்கத் துடிக்கும் பல மாணவிகளுக்கு கல்பனாவின் கேரக்டர் ஒரு பாடம்..

துல்கரின் அக்காவாக ஸ்வாசிகா.. பழமைவாதியாக காட்டப்பட்டாலும் ஒரு கட்டத்தில் தம்பிக்கு உறுதுணையாக அசத்தியிருக்கிறார்.. அதுபோல சயின்டிஸ்ட் ஆக வரும் ஸ்ருதிஹாசன் அவரது லட்சியம் ஜாலியான கேரக்டர் என ஸ்ருதி சூப்பர்..

சாத்விகாவின் பெற்றோர்கள் அவர்களின் கண்கலங்க வைக்கும் நடிப்பு என அனைத்தும் நேர்த்தி..

டெக்னீசியன்ஸ்…

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.. மெலோடி பாடல்கள் மட்டுமல்ல மெல்லிய உணர்வுகளை தன் இசை மூலம் ஒவ்வொரு காட்சியிலும் கடத்தியிருக்கிறார்..

திரைக்கதை ஆசிரியர்கள் குன்னம் கங்கராஜு, வசந்த் ஜுரு இருவரும் நம்மை விண்வெளிக்கு அழைத்துச் சென்ற உணர்வை அமைத்துக் கொடுத்துள்ளனர்..

ஒரு காட்சியில் அப்பாவை பார்த்து மகள் சொல்லும் வசனம்.. என்னையும் அம்மாவை நீ கொடுமைப்படுத்துனதுக்கு உனக்கு மன்னிப்பே கிடையாது… ஆனால் துல்கர் போன்ற ஒரு கணவனை தந்தமைக்கு மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில் படத்தின் ஒட்டுமொத்த உணர்வை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பவன்..

 

AOT Aagayathil Oru Tharagai movie review

 

—