தாய் நிலம் விமர்சனம்.. அகதிகளின் வாழ்வியல் அவலங்கள்

தாய் நிலம் விமர்சனம்.. அகதிகளின் வாழ்வியல் அவலங்கள்

 

தாய் நிலம் விமர்சனம்.. அகதிகளின் வாழ்வியல் அவலங்கள்

 

ஸ்டோரி…

இலங்கையில் மண்ணில் இருந்து வந்த இன்னொரு கதை இது..

இலங்கை யுத்தத்தில் தன் மனைவியை இழந்த அமர் ராமச்சந்திரன் தன் ஒரே மகளுடன் வசித்து வருகிறார்.. இனியும் இலங்கையில் இருந்தால் தன் மனைவியை போல தன் மகளையும் இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்கு அகதியாக உள்ளே நுழைகிறார்..

பல கனவுகளோடு இந்தியாவில் நுழைந்தாலும் கையில் எதுவும் இல்லாமல் வேறு வழியின்றி சாலையோர பிளாட்பாரத்தில் மகளுடன் தன் வாழ்வை தொடங்குகிறார்..

அகதிகளின் வாழ்க்கையை உணர்வை புரிந்து கொண்ட சில நல்ல உள்ளங்கள் அவருக்கு உதவி செய்ய சந்தோசமான வாழ்க்கையை தொடங்குகிறார்… அந்த சமயத்தில் அவருக்கு திடீரென ஒரு பேரிழப்பு.. அது என்ன அதன் பின்னர் அவர் வாழ்க்கை எப்படி மாறியது என்பதெல்லாம் திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

அமர் ராமச்சந்திரன்.. அன்பான கணவனாக பாசமான தந்தையாக அமர் அசத்தியிருக்கிறார்.. மகளின் கனவுகளுக்காக தன் லட்சியத்தை விழிகளில் வைத்து காத்திருக்கும் தந்தையாக பிரதிபலிக்கிறார்..

அமரின் மகளாக நேஹா அமர்.. யுத்தத்தால் தன் அம்மாவை இழந்த ஒரு உறவாக உணர்ச்சிகரமான நடிப்பில் நேகா சிறப்பு..

இவர்களுடன் நிமிஷா நம்பியார், தீபக் பிரபாகரன், குருதன்ஷிகா, நிஹல் உள்ளிட்டோரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு சரியான பங்களிப்பை கொடுத்துள்ளனர்..

ஆதரவற்றவர்களுக்கு உதவும் மனித நேயமிக்க நல்லவராக பாலாசிங்.. இப்படி ஒரு கேரக்டரை இந்த உலகத்தில் இன்றைய உலகத்தில் பார்ப்பதெல்லாம் அரிது..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவத்தின் கேமரா கைவண்ணம் சிறப்பு..

இசையமைப்பாளர் அவுசேப்பச்சன்.. பயம் பதட்டம் தவிப்பு சோகம் என அனைத்தையும் இசை மூலம் ரசிகர்கள் மனதில் கடத்தி இருக்கிறார் இசையமைப்பாளர்..

படத்தொகுப்பாளர் டீஜோ பி.வர்க்கீஸ்..

இலங்கை போர்.. மரண வலி.. மரண ஓலங்கள் அலறல் சத்தம்.. குண்டுகள் முழக்கம்.. என பல படங்களில் பார்த்த படங்களில் இருந்து மாறுபட்டு அகதிகளின் வாழ்வை அவலங்களை ஆழமாக அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜி தேவன்..

இலங்கை போர் மட்டுமல்ல எந்த போராக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளின் நிலை என்ன.? அவர்களுக்கு உதவும் கரங்களின் மனங்கள் என்ன என்பதை உணர்வுபூர்வமாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜி தேவன்..

 

Thaai Nilam movie review