விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம் 4.25/5..

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம் 4.25/5..

 

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம் 4.25/5..

 

ஸ்டோரி…

சூர்யா ஒரு மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பிசினஸ் மேன்.. இவரது அம்மா ராதிகா.. தன் தந்தை தன் தாய்க்கு செய்த துரோகத்தால் திருமண பந்தத்தை வெறுக்கிறார்.. 42 வயது கடந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்..

இந்த குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என ராதிகா அடம் பிடிக்க அவருக்கே தெரியாமல் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்து தன் வாரிசாக அறிவிக்கிறார் சூர்யா..

சில மாதங்களில் அந்த குழந்தைக்கு ஒரு நோய் இருப்பதாக அறிகிறார்.. அந்த நோயைக் காப்பாற்ற தாயின் உதவி தேவை.. எனவே வாடகை தாய் தேடி அலைகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதெல்லாம் இதுவரை சொல்லப்படாத சுவாரசியமான குடும்ப செண்டிமெண்ட் கதை..

 

கேரக்டர்ஸ்…

சூர்யா – விஸ்வநாத்
மமிதா பைஜு – மேடி
ராதிகா – நிர்மலா தேவி
ரவீனா டாண்டன் – அஞ்சலி

கடந்த சில படங்களில் (ரெட்ரோ கருப்பு) ஆக்சன் அவதாரம் எடுத்த சூர்யா ரசிகர்களின் ஃபேவரைட் சாக்லேட் பாய் கேரக்டருக்கு திரும்பி இருக்கிறார்.. இதில் சஞ்சய் விஸ்வநாத் ஆக க வந்தாலும் நம்மால் சஞ்சய் ராமசாமியை நினைக்காமல் இருக்க முடியவில்லை..

ராதிகா இறந்து தருணத்தில் நம்மையும் நடிப்பால் அழ வைக்கிறார் சூர்யா.. நிச்சயம் தாயை தவற விட்டவர்கள் அழாமல் இருக்க முடியாது.. தன் ஸ்டைலிஷ் லுக் மேனரிசம் என கெத்து காட்டும் சூர்யா சில இடங்களில் பிளேபாயாகவும் பின்னி எடுத்திருக்கிறார்..

மமீதா பைஜு.. அரைகுறை ஆடையில் வந்தாலும் ஆபாசம் இல்லாமல் நடிப்பால் நம்மை அசர வைக்கிறார்.. கியூட் எக்ஸ்பிரஷன் கொடுத்து நம்மையும் குஷி மூடில் வைக்கிறார்.. 42 வயது சூர்யா மீது காதல் கொள்ளும் 22 வயது பெண் மேடி கேரக்டருக்கு சரியான மேட்ச் மமீதா ..

அன்பான அம்மா.. பொறுப்பான அன்னை கேரக்டருக்கு ராதிகா பக்கா பொருத்தம்.. ஒரு தாயாக தன் மகனை கவனித்துக் கொள்ளும் அழகு சிறப்பு..

சாது & ஆளவந்தான் (GDN) உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் ரவீணா டாண்டன்.. இன்னும் அதே அழகு.. நடிப்பிலும்..

 

டெக்னீசியன்ஸ்…

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
படத்தொகுப்பு : நவீன் நூலி

ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் செம பிரெஷ்.. மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம்.. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசை ஓசையை குறைத்திருக்கிறார்..

நிமிஸ் ரவி ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டம்.. வாடகைத்தாய் இந்த கான்செப்ட் நடுத்தர குடும்பத்தை காட்டிலும் பணக்கார குடும்பத்திற்கு பொருத்தம்.. ஆனாலும் அதனை எதார்த்தமாக உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.. இவர் தெலுங்கு இயக்குனர்.. தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தை இயக்கியவர்.)

எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பாளர்கள் :  சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா

சண்டை பயிற்சி : V. வெங்கட்
தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்  & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

சண்டைக் காட்சிகளை வெங்கட் வடிவமைத்திருக்கிறார்.. சண்டைக் காட்சி திணிக்கப்பட்டதாக தெரிந்தாலும் அந்த காட்சிக்கும் கதைக்கும் கனெக்ஷன் கொடுத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்..

சூர்யா – மமீதா ரிலேஷன்ஷிப் மற்றும் ராதிகா – ரவீனாவின் சிக்கலான உறவு.. இரண்டையும் ரசிகர்கள் ஏற்கும் வகையில் சொல்லி இருப்பது டைரக்டர் வெங்கியின் வெற்றி ஃபார்முலா..

 

Vishwanath And Sons movie review