மகுடம் விமர்சனம் 2.25/5.. நடிகர் விஷால் பாஸ்.. டைரக்டர் விஷால்.. என்ன பாஸ் இப்படி பண்ணிட்டீங்க.?

மகுடம் விமர்சனம் 2.25/5.. நடிகர் விஷால் பாஸ்.. டைரக்டர் விஷால்.. என்ன பாஸ் இப்படி பண்ணிட்டீங்க.?

 

மகுடம் விமர்சனம் 2.25/5.. நடிகர் விஷால் பாஸ்.. டைரக்டர் விஷால்.. என்ன பாஸ் இப்படி பண்ணிட்டீங்க.?

 

 

ரன்னிங் டைம் – 185 28 3h 5m •UA16+ •14 Aug, 2026

ஸ்டோரி…

விஷால் ஒரு மெடிக்கல் ரெப்.. இவரது மனைவி துஷாரா விஜயன்.. இவர்களுக்கு அஸ்வின் மாயா என இரண்டு குழந்தைகள்.. மாமனார் தம்பி ராமையாவின் வற்புறுத்தல் பேரில் கார் வாங்க ஆசைப்படுகிறார் விஷால்.. ஆனால் இவரது சம்பளத்திற்கு ஏற்ப கார் லோன் கிடைக்கவில்லை..

எனவே குறைந்த விலையில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்குகிறார்.. விஷால் கார் வாங்கியதை அறியாத ஒரு வில்லன் கும்பல் பழைய எதிரி என நினைத்து தீர்த்து கட்ட முடிவு செய்கின்றனர்..

அதன் பிறகு என்ன நடந்தது.? தன் குடும்பத்தை விஷால் காப்பாற்றினாரா.? அந்தக் கார் ரியல் ஓனர் யார்.? அவர்களை துரத்த என்ன காரணம்.? ஆசைப்பட்டு வாங்கிய காரை பின்னர் என்ன செய்தார் விஷால்.? என்பதெல்லாம் அதிரடியான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

விஷால் – லிங்கா & கிருபாகரன்
அஞ்சலி
துஷாரா விஜயன்
ஜான் விஜய்
வி. ஜெயப்பிரகாஷ்
வம்சி கிருஷ்ணா
அஜய்
அபு சலீம்
அர்ஜய்
சபூமோன் அப்துசாமத்
தம்பி ராமையா
விஜய் ஜான்சி
பதம் குமார்

லிங்கா – கிருபாகரன் என இரண்டு கேரக்டரில் டில் தந்தை மகனாக விஷால்.. ஒருவர் சாது.. ஒருவர் டான்.. இரண்டு கேரக்டர்களின் தனித்தனியாக பார்க்கும் போது ஓகே என்றாலும் ஒரே சீனில் பார்க்கும்போது அண்ணன் தம்பி போலவே உள்ளது.. மேக்கப் கூட பொருந்தவில்லை.. வயது முதிர்ச்சி கேரக்டர் முதிர்ச்சி எதுவும் தெரியவில்லை..

துஷாரா விஜயனின் நடிப்பு கலக்கல் ரகம்.. அஸ்வின் மாயா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக அருமை.. அதிலும் குட்டி பெண் மாயா சுட்டி பெண்ணாக ஜொலிக்கிறார்..

மீன் விற்கும் பெண்ணாக ஆந்திரா காரம் சாரத்துடன் அஞ்சலி.. அயிரை மீன் குழம்பு போல கேரக்டர் ரு(ர)சிக்க வைக்கிறார்.. அன்பிலும் ஆக்சனிலும் அசத்திருக்கிறார்..

வழக்கமாக வில்லனாக நெகட்டிவ் கேரக்டர் ஜோன் விஜய்க்கு பாசிட்டிவான கேரக்டர்.. பழம் ஜெயப்பிரகாஷ் கேரக்டர் வலுவில்லை.. வில்லன் கேரக்டர்கள் இன்னும் மிரட்டலாக கொடுத்திருக்கலாம்..

தம்பி ராமையா வழக்கம் போல் ஓவர் ஆக்ட்டிங்.. இதுக்கு என்ட் இல்லையா.? குளுருது சொல்லி குமுற வச்சிட்டீங்க.!

 

டெக்னீசியன்ஸ்…

ஸ்டோரி : ரவி அரசு
டைரக்டர் விஷால்
மியூசிக் : G.V பிரகாஷ்
Art Director : G. Durairaj
Dialogues: Pon Parthiban , Vishal , Anadh Kumaresan (Tamil) & Rajesh A Moorthy ( Telugu)
Lyrics: Ekadesi, Vivek, Uma devi, Karunakaran, V7H
Action Director: Dhilip Subbarayan
Pro: Riaz k Ahmed – Paras Riyaz (Tamil)

ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் காட்சிகள் சூப்பர். ஜிவி பிரகாஷ் இசை பலம்.. பாடல்களும் இசையும் அதிரடி..

மிரட்டலான சண்டை காட்சிகள் மாஸ் ரகம்.. நடிகர் விஷால் விளாசியிருக்கிறார்..

அதிரடி ஆக்சன் படங்களை ஹீரோவாக கொடுத்த விஷால்.. இதில் முதன்முறையாக இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார்..

ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இந்த படத்தை இயக்கியிருந்தார்.. பின்னர் இதிலிருந்து விலகி விட்டார்.. அதன் பின்னர் விஷால் இயக்குனர் ஆனார்..

இடைவேளைக்கு முன்பு வரை அழகான குடும்ப கதையாக பயணிக்கிறது.. ஒருவேளை அந்த திரைக்கதையை ரவி அரசு இயக்கி இருப்பாரு போல.. அதன் பிறகு அதிரடி டான் சீன்ஸ்.. மிகப்பெரிய பலவீனம்.. இதுதான் விஷால் இயக்கிய படமோ.? ஒட்டாத திரைக்கதை.. படம் எப்போ முடியும் எப்ப முடியும் என்று நாம் நினைக்க நினைக்க படம் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.. முடியல…

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் எத்தனையோ தரமான படங்களை கொடுத்துள்ளது.. இது 99வது படம்.. ஆனால் இது அவர்களின் படம் தானா என்ற சந்தேகம் வருது..

 

Vishal in Magudam movie review