சிறை விமர்சனம் 4.5/5… மனச் சிறையில் வளர்ந்த காதலுக்கு விடுதலை

சிறை விமர்சனம் 4.5/5… மனச் சிறையில் வளர்ந்த காதலுக்கு விடுதலை

 

சிறை விமர்சனம் 4.5/5… மனச் சிறையில் வளர்ந்த காதலுக்கு விடுதலை

 

ஸ்டோரி…

சிறைக் கைதிகளின் எஸ்கார்டாக பணிபுரிகிறார் நாயகன் விக்ரம் பிரபு.. சிறை கைதியை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அரசு பேருந்தில் அழைத்துச் செல்கிறார்.. நாளை கைதியை கோர்ட்டில் ஆஜராக வைப்பதற்காக அழைத்துச் செல்கிறார்.. இளம் கைதி அக்ஷய் குமார் தன் காதல் கதையை ஒரு பக்கம் இவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் விக்ரம் பிரபு உடன் பயணிக்கும் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள் ( எஸ்கார்ட்) பணி நேரத்தில் மது அருந்தி விடுகின்றனர்.. போதையில் ஏற்பட்ட தகராறு பிரச்சனையில் கைதி தப்பித்து விடுகிறார்..

அதன் பிறகு விக்ரம் பிரபு என்ன செய்தார்..? காதலியை தேடிச்சென்ற கைதியின் நிலை என்ன.? அவர்கள் காதல் கை கூடியதா.? விக்ரம் பிரபுவின் பணி என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

படம் முழுவதும் இளம் நாயகன் அக்ஷய் குமார் இடம் பிடித்திருக்கிறார்.. அதில் எந்த யூகோவும் இல்லாமல் விட்டுக்கொடுத்து விக்ரம் பிரபுவும் தன்னுடைய நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பது அவருடைய துணிச்சலான முடிவை காட்டுகிறது..

ஏற்கனவே ‘டாணாக்காரன்’ படத்தில் அலட்டிக் கொள்ளாத போலீசாக நம்மை நெகிழ வைத்திருந்தார் விக்ரம் பிரபு.. கிளைமாக்ஸ் காட்சியில்… போலீஸ் அதிகாரத்தை வைத்து நல்லது செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் என்று விக்ரம் பிரபு சொல்லும் ஆலோசனை சொல்லும் இடம் கைத்தட்டலை அள்ளும்..

அறிமுக இளம் நடிகர் எல்.கே.அக்‌ஷய் குமார்.. பல விருதுகளை மட்டுமல்லாமல் இளம் ரசிகைகளின் மனதையும் அள்ளப் போகிறார்.. தன் தாயை அசிங்கமாக திட்டிய குரு இசக்கி மீது ஆவேசம் கொள்ளும் காட்சியாகட்டும் தன் காதலிக்காக ஓடிவந்து உதவி செய்வதாகட்டும்.. காவலர்களுக்கு கண்ணியம் சேர்ப்பதாகட்டும் ஒவ்வொரு ஃப்ரேமிடம் ஸ்கோர் செய்து இருக்கிறார் எல்.கே. அக்‌ஷய் குமார்..

நாயகியாக அனிஷ்மா அனில்குமார்.. தகப்பனை கொன்ற காதலனுக்கு துணையாக அனிஷ்மா நிற்கும் ஒவ்வொரு காட்சியும் காதலின் சக்தியை உணர்த்தும்.. இனி இவரும் பல விருதுகளை அள்ளுவார்..

அனிஷ்மாவின் அக்கா கணவராக வரும் குரு இசக்கி குடிகாரனை ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்.. இவர் மீது நமக்கே கோபம் வரும் அளவுக்கு நடிப்பில் அசத்தல்..

இவர்கள் இல்லாமல் அக்ஷய் அம்மா.. அனிஷ்மாவின் அக்கா உள்ளிட்ட பெண்களின் நடிப்பு பெரிய பலம்..

விக்ரம் பிரபுவின் மனைவியாக ஆனந்த தம்பிராஜாவின் நடிப்பில் நல்ல நேர்த்தி..

டெக்னீசியன்ஸ்…

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் அழகு என்று சொல்லலாம் முக்கியமாக ஜெயில் காட்சி.. கோர்ட் காட்சி.. பஸ் விபத்து காட்சி.. என ஒவ்வொன்றையும் தத்துரூபமாக காட்டியிருக்கிறார்..

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.. பாடல்கள் அனைத்தும் சிறப்பு.. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. அடுத்தது என்ன நடக்கும் என்ற பதைபதைப்பை நம் இதயத்தில் புகுந்து இசையாக ஊடுருவி இருக்கிறார்..

பிலோமீன் ராஜ் எடிட்டர்.. இது தேவையில்லாத காட்சி என்று சொல்லும் அளவுக்கு எதுவுமே இல்லாமல் நேர்த்தியாக எடிட்டிங் செய்திருக்கிறார்..

கதை எழுதி இருக்கிறார் இயக்குனர் டானாக்காரன் தமிழ்… பல படங்களில் இவரை போலீஸ் ஆக பார்த்திருப்போம்..

அழகான திரைக்கதை வடிவம் கொடுத்து இயக்கியிருக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி..

2025 ஆம் ஆண்டு முடியும் நேரம்.. இந்த ஆண்டின் இறுதியில் வந்து மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்ற பெயரை எடுத்திருக்கிறது சிறை.. தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் படங்களில் சிறை நிச்சயம் இடம் பிடிக்கும்..

நீங்கள் எவ்வளவுதான் கல்நெஞ்சக்காரனாக இருந்தாலும் மூன்று இடங்களில் கண்ணீரை வரவைத்து விடுகிறார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி..

அதற்காக அக்ஷய் மற்றும் அனிஷ்மா இருவரும் உணர்வுப்பூர்வமான நடிப்பில் நம்மையும் காதல் சிறைக்குள் சிக்க வைக்கின்றனர்.. காதலர்கள் இணைய மாட்டார்களா என்ற ஏக்கத்தை நமக்கு விதைத்து விட்டார் சுரேஷ் ராஜகுமாரி.

தன் மகனுக்கு இதைவிட ஒரு அழகான அறிமுகத்தை தயாரிப்பாளர் லலித்குமார் கொடுக்க முடியாது.. சிறை நிச்சயம் ரசிகர்கள் மனதை சிறை பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தான் படத்தில் ரிலீஸ்க்கு முன்பே இயக்குனருக்கு காரை பரிசளித்திருக்கிறார் தயாரிப்பாளர்..

 

Sirai movie review