RMV The King Maker – ஆர்.எம். வீரப்பன் ஆவணப்படம்.. நினைவுகளை பகிர்ந்த அரசியல் & திரையுலக ஆளுமைகள்
RMV The King Maker – ஆர்.எம். வீரப்பன் ஆவணப்படம்.. நினைவுகளை பகிர்ந்த அரசியல் & திரையுலக ஆளுமைகள்
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், வைரமுத்து, சைதை துரைசாமி, செ.கு. தமிழரசன், தமிழச்சி தங்கபாண்டியன், இயக்குனர்கள் சுரேஷ் கிருஷ்ணா, பி வாசு, எஸ் பி முத்துராமன், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட 36 பிரபலங்கள் தெரிவித்த கருத்துகளை மையமாக வைத்து ’ஆர்.எம்.வி கிங் மேக்கர்’ என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
2 மணி நேரம் ஓடக் கூடிய இந்த ஆவணப்படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

அந்த ஆவணப் படத்தில் ஆர்.எம்.வீரப்பன் குறித்து ரஜினிகாந்த் பேசியது பேசு பொருளானது.
இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தில் ரஜினிகாந்த், சரத்குமார் சத்யராஜ், எஸ்பி முத்துராமன், பி வாசு உள்ளிட்ட பலரும் ஆரம் வீரப்பன் உடன் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து உள்ளனர்..
அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் RMV ஆதிக்கத்தை அவர்கள் நுட்பமாக ஆராய்ந்து பேசியுள்ளனர்..
எம்ஜிஆர் மறைந்து 38 ஆண்டுகள் ஆனாலும் இன்ற அளவிலும் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிய பல படங்களை தயாரித்தது வீரப்பன் (சத்யா மூவிஸ்) என்று சொன்னால் அது மிகையல்ல..
அதுபோல ரஜினியின் சினிமா பயணத்தில் என்றும் போற்றப்படும் படமாக உள்ள பாட்ஷா & மூன்று முகம் உள்ளிட்ட படங்களையும் சத்யா மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்ஷா பட நூறாவது நாள் விழாவில் ரஜினிகாந்த்.. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியதும் அதன் பின்னணியில் அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்துக் கொண்டு RM வீரப்பனை தவிர்த்து விட்டதையும் ரஜினி இந்த காணொளியில் பேசியிருக்கிறார்..
20 வயது இளம் வயதிலேயே தன்னுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் RMV.. இவரின் திறமையை பார்த்து தந்தை பெரியாரிடம் வீரப்பனை எனக்கு கொடுத்து விடுங்கள் என்று பேரறிஞர் அண்ணா சொல்லியதும் இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது..

மேலும் தமிழ்நாட்டில் பெரும் ஆளுமைகளாக கருதப்பட்ட / கருதப்படும் MGR (எம் ஜி ராமச்சந்திரன்) – ஜானகி அம்மாள் – ஜெயலலிதா ஆகிய மூன்று முதல்வர்களுக்கும் RMV எப்படி எல்லாம் உறுதுணையாக இருந்து அவர்களை வடிவமைத்தார்.. அவர்களுக்கு கிங் மேக்கராக RM வீரப்பன் எப்படி செயல்பட்டார் என்பதும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..
தற்போது ஆவண படமாக வந்துள்ள ஆர்எம் வீரப்பனின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் ஒரு வாழ்க்கை திரைப்படமாக உருவாகும் என ஆர் எம் வீரப்பனின் மகன் தங்கராஜ் குறிப்பிட்டு பேசினார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது..
Rm Veerappan The King Maker documentary

