தி கிராண்ட் மாஸ்டர் விமர்சனம்…

தி கிராண்ட் மாஸ்டர் விமர்சனம்…

 

தி கிராண்ட் மாஸ்டர் விமர்சனம்…

 

ஸ்டோரி…

கணவனை இழந்த துப்புரவு பணியாளர் பெண்மணி அபர்ணதி.. தன் வாழ்க்கை தன் வாரிசுகளால் மாறாதா? மாற்ற முடியாதா என்ற நம்பிக்கையில் தன் மகனை சதுரங்க போட்டியில் சாம்பியன் ஆக்க முற்படுகிறார்..

மகனுக்கு திறமை இருந்தாலும் இவரின் துப்புரவு தொழிலாளல் மகனின் லட்சியம் பாதிக்கப்படுகிறது.. அதிகார வர்க்கம் சாதி வெறியர்களின் எதிர்ப்பை மீறி போராடும் தூய்மை பணியாளரின் தூய எண்ணம் தான் மீதி திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்கள் ஏற்றுக்கொள்ள தயங்கும் கதாபாத்திரம் இது.. ஏற்கனவே இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் அபர்ணதியின் நடிப்பு அசாத்தியமானது… இந்த படத்திலும் துப்புரவு பணியாளராக பொறுப்பான தாயாக.. லட்சிய பெண்மணியாக அந்த கேரக்டருக்கு பெருமை சேர்த்து இருக்கிறார் அபர்ணதி..

அபர்ணதியின் கணவராக லிங்கேஷ்.. வில்லனாக சுரேஷ் மேனன், அபர்ணதியின் மகனாக அஸ்வின், தமிழரசி, அன்பு என மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக செய்துள்ளனர்.. கொஞ்ச நேரமே வந்தாலும் லிங்கேஷ் நடிப்பில் கவனம் பெறுகிறார்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர்கள் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன்.ஆர்.எஸ்.. இருவரின் பணியும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது..

தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அதன் வரிகளும் ரசிக்க வைக்கிறது… பின்னணி இசையும் ஓகே..

இயக்குநர் வெற்றி செழியன்… சமீப காலமாகவே நிறைய படங்களில் விளையாட்டுப் போட்டிகளில் இருக்கும் சாதியை கொடுமை அதிகார வர்க்கத்தின் எல்லை மீறல் உள்ளிட்ட காட்சிகளை பார்த்திருக்கிறோம். எனவே இதிலும் புதுமை இல்லை ஆனாலும் ஒரு துப்புரவு பணியாளர் தன்னுடைய மகனுக்காக போராடும் லட்சியத்தை எதார்த்தமாக உணர்வு பூர்வமாக பதிவு செய்திருக்கிறார்..

இயக்குநர் கிராண்ட் மாஸ்டர் – வெற்றி செழியன்..

 

The Grand Master movie review