சப்தம் விமர்சனம் 3.75/5… தமனோசை ஒலிக்கட்டும்
சப்தம் விமர்சனம் 3.75/5… தமனோசை ஒலிக்கட்டும்
ஸ்டோரி…
ஈரம் படத்தில் அமானுஷ்யங்களை காட்டி அதிர வைத்தவர் இயக்குனர் அறிவழகன்.. அதில் நாயகனாக ஆதி நடிக்க தமன் இசை அமைத்திருந்தார்.. தற்போது இந்த கூட்டணி மீண்டும் சப்தம் படத்திற்காக இணைந்துள்ளது.. இதில் ஒளி ஓசைகளை வைத்து மிரட்டி இருக்கிறார் அறிவழகன்.
கோஸ்ட் இன்வெஸ்டிகெட்டர் ஆதி.. இவருக்கு மூணாறில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து அழைப்பு வருகிறது.. அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதால் இதில் ஏதேனும் அமானுஷ்யப் ஆவி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய ஆதியை அழைக்கிறது கல்லூரி நிர்வாகம்..
இதனை அடுத்து கல்லூரிக்கு வரும் ஆதி அங்கேயே தங்கி அங்குள்ள பேராசிரியர் லட்சுமிமேனன் உள்ளிட்ட பலருடன் விசாரணை செய்கிறார்.. அவருக்கு கல்லூரியில் பணிபுரியும் ரெடின் கிங்ஸ்லி ஒத்துழைக்கிறார்.
நீங்கள் என்ன போலீஸா? உங்களுக்கு நாங்கள் ஏன் ஒத்துழைக்க வேண்டும் என பலரும் மறுக்கும் நிலையில் ஆதி அந்த சவால்களை எப்படி எதிர்கொண்டார்? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை.
இதில் சிம்ரன், லைலா, அபிநயா, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோரின் பங்களிப்பு என்ன.? அவர்களுக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்பதே மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம். எஸ். பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா, அபிநயா மற்றும் பலர்.
மிருகம் அரவான் ஈரம் உள்ளிட்ட பல படங்களில் மிரட்டிய ஆதி இந்த படத்தில் அசால்டாக தன் ரூபன் கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார்..
லட்சுமி மேனன் அழகிலும் நடிப்பிலும் அசத்தல்.. நல்ல வேளை இவர் பேய் இல்ல.
கிட்டத்தட்ட படம் முடியும் நேரத்தில் என்ட்ரி கொடுக்கும் லைலா மிரட்டல்.. இவரது கேரக்டர் ட்விஸ்ட்.. ஸ்மைலி லைலாவா இப்படி? என வியக்க வைக்கிறார்..
அன்னை தெரசா கேரக்டர் போல சிம்ரன் சைலன்டாக வந்து ஸ்கோர் செய்கிறார்.. அபிநயா சாந்தமான நடிப்பில் கவருகிறார்.. ரெட்டின் கிங்ஸ்லி தேவையில்லாத கேரக்டர்..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவு : அருண்பத்மநாபனம்
எடிட்டிங் : சபு ஜோசப்
கலை இயக்குநர் : மனோஜ் குமார்
இசை : தமன்
இயக்கம்: அறிவழகன்
தயாரிப்பு: 7G சிவா
இது நடிகர்கள் படம் என்பதை விட முழுக்க முழுக்க டெக்னீசியன்ஸ் படம் என்றும் சொல்லலாம்..
பின்னணி இசையில் தமன் சவால் விடுகிறார்.. டீ கப்பில் ஸ்பூன் போட்டு கலக்குவது முதல் வவ்வால் சத்தம் வரை மிரட்டல் ரகம்..
ஒளிப்பதிவு : அருண்பத்மநாபனம்
எடிட்டிங் : சபு ஜோசப்.. இருவரும் நேர்த்தி..
ஓல்ட் சர்ச் லைப்ரரி ஆர்ட் ஒர்க் சூப்பர்..
ஆனால் ஈரம் படம் உண்டாக்கிய ஈரம்.. பயம்.. செண்டிமெண்ட் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்.. ஓசை வைத்து ஆவி காட்ட முடியுமா? என்ற கான்செப்ட்டை அறிவழகன் சேலன்ச் செய்து இருக்கிறார்..
இடைவேளைக்கு முன்பு வரை இருந்த விறுவிறுப்பு இடைவேளைக்குப் பிறகு குறைவதை இயக்குனர் கவனித்து இருக்கலாம்.. பிளாஷ் பேக் காட்சிகளில் ரசிகர்கள் ஒன்று எமோஷனல் கொடுத்திருக்கலாம்..
34 வருடங்களுக்கு முன்பு 42 கொலைகள்.. அதன் அமானுஷ்யங்கள்.. தெய்வக் குழந்தைகளின் சிறப்பு அம்சங்கள் என பலவற்றை தொகுத்து இந்த சப்தத்தை அதிக ஒலியுடன் ஒலிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.. இயக்குனருக்கு கொஞ்சமும் சலிக்காமல் தன் தாராள உழைப்பை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தமன்..
ஆக சப்தம்.. : தமன் ஓசை ஒலிக்கட்டும்
Sabdham movie review

