Veera Vanakkam : சுதந்திரப் போராட்ட வீராங்கனை மேதினியுடன் இணைந்த சமுத்திரக்கனி & பரத்
Veera Vanakkam : சுதந்திரப் போராட்ட வீராங்கனை மேதினியுடன் இணைந்த சமுத்திரக்கனி & பரத்
கம்யூனிஸ்ட் தோழராக சமுத்திரக்கனி நடிக்க அவருடன் முதன் முறையாக இணைந்து பரத் நடிக்கும் திரைப்படம் ‘வீரவணக்கம்’.
மலையாள இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்க தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
பிரபல புரட்சி பாடகியும், கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் நடித்துள்ளார்.
அனில் வி. நாகேந்திரன் இயக்கிய மலையாள வெற்றி படமான ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்ற படத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம்.
இத்திரைப்படத்திற்கு எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத்,ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என 5 இசையமைப்பாளர்கள் சேர்ந்து ஐந்து பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.
மறைந்த ‘சிம்மக்குரலோன்’ டி. எம். சௌந்தரராஜனின் மகன் டிஎம்எஸ் செல்வகுமார் முதல் முறையாக பின்னணி பாடகராக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samuthirakani and Barath starring Veera Vanakkam

